Showing posts with label தமிழக தேர்தல் 2016. Show all posts
Showing posts with label தமிழக தேர்தல் 2016. Show all posts

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 56

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 56

வாழ்க வளமுடன்!

இந்த தொடருக்கு மாற்று கருத்து மூலமும் ; விருப்பங்கள் / பகிர்வுகள் வாழ்த்துகள் மூலமாகவும் ஆதரவு நல்கிய அனைவருக்கும் நன்றி. யார் விருப்பம் தெரிவிக்கிறார்கள் யாரு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று பார்த்து எந்த இடத்திலும் இந்த தொடரின் போக்கையோ அல்லது கருத்தாக்கத்தையோ மாற்றிக்கொள்ள வில்லை. பிறந்தநாள் பார்த்து வாழ்த்து சொல்லுவது / உங்கள் பதிவுகளுக்கு ஆதரவு தெரிவித்து என் பதிவுக்கு ஆதரவு பெறுவது என்று எந்த வேளையிலும் நான் ஈடுபடவில்லை.  

இந்த தொடரை நிறைவு செய்யும் தருவாயில் ஒரு விடயத்தை மட்டும் வலியுறுத்த விரும்புகிறேன். திராவிட கட்சிகளுக்கு உங்கள் பொன்னான வாக்குகளை போட்டு வீணடிக்காதீர்கள்.  அந்த பாதக செயலை செய்தால் அதனால் ஏற்ப்படும் 
சீரழிவானது பல தலைமுறைக்கும் இருக்கும்.  எதனால் இதனைச்  சொல்லுகிறேன்? 
தமிழர் நலன் ; தெலுங்கர் நலன் ; குடும்பத்தார் நலன் என்று இல்லை யாருடைய நலன் குறித்தும் அவர்களால் சிந்திக்க முடியாத சுயநலம் மட்டுமே அவர்களிடம் உள்ளது. முதலில் காமராசரை  நாங்கள் தான் முதல்வர் ஆகினோம் என்று சொல்லுவார்கள் ; தமிழர்கள் ஒன்று கூடினால் காமராசர் எல்லாம் ஒரு ஆளா என்று கேட்ப்பார்கள்.

"E.V.ராமசாமி யை மட்டும் விமர்சனம் செய்கிறீர்களே ஏன் காமராசர் குறித்தும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குறித்தும் விமர்சனங்கள் வைப்பதில்லை" என்று தமிழ் தேசியம் பேசுபவர்களை பார்த்து கேட்கிறார்கள் திரிவடுகர்கள்.

அப்படி பேசினால் அவர்கள் பிறந்த சாதி ஓட்டுக்களை இழக்க நேரிடும் அவர்களை விமர்சனம் செய்தால் வாயிலேயே குத்துவார்கள். இப்படி அவர்களாகவே காரணம் சொல்லுகிறார்கள் திரிவடுகர்கள்.

காரணம் வேறு ஒன்றும் இல்லை. வோட்டு அரசியலுக்காக ஒருவரை புகழ்வது. பின்னர் அதே தலைவரை பார்த்து இகழ்வது என்ற மனநிலை உடைய திரிவடுகர்களுக்கு யார் என்ன செய்தாலும் நம்மைப் போலவே மற்றவர்களும் நாடகமாடுகிரார்களோ என்ற சந்தேகம் வருகிறது.

முகவை மாவட்டம் தந்த முத்துக்கள் எம் தலைவர்கள். திரிவடுக சேர்க்கையால் தான்  திரு. காமராசர் பல தவறான முடிவுகள் எடுத்தார். இல்லை என்றால் விடுதலை போரிலே சொக்கத் தங்கமாகவே இருந்தார். திரிவடுகரகளின் சகவாசம் இருந்த போதும் கடைசிவரை தனக்கென சொத்து சேர்க்காததே பெரிய சாதனை தான். 

திராவிட இயக்கங்களால் மக்களை துண்டாட மட்டுமே  முடியும். இனியும் கலகமூட்டுபவர்களின் வலையில் விழ மாட்டோம் என்று சூளுரைப்போம்.

வளர்க வையகம்!

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 55

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 55

தேர்தல் விதிமுறைகளின் படி இன்றோடு தேர்தல் பரப்புரைகளை முடித்துக்கொள்ள வேண்டும். 1962 ஆண்டு நடந்த தேர்தல் பரப்புரையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் பேசிய பேச்சு இன்றும் பொருந்துவதாக இருக்கிறது. அதில் சில பகுதிகள் மட்டும் இங்கே.

ஓட்டுப் போடுகிற வகையில் மக்கள் எதையும் எதிர்ப்பார்க்காதீர்கள். அது மகா பாவம். ஒரு கிராமத்தில் முளைக்கொட்டு என்றால் இரண்டு ரூபாய் எடுத்துக்கொண்டு போய்ப் பார்க்கிறீர்கள். ஜல்லிக்கட்டு என்றால் நாலு ரூபாய் எடுத்துப் போய் வேடிக்கை பார்த்து வருகிறீர்கள். சினிமாவுக்கு ஐந்து ரூபாய் செலவிட்டுப் போய் பார்க்கிறீர்கள். ஆனால், தேர்தலில் ஓட்டுப்போடுவதற்கு மட்டும் யாராவது பணம் தருவார்களா என்று எதிர்பார்க்கலாமா?

உங்கள் தலைவிதியை ஐந்து வருடங்களுக்கு ஒப்புவிக்கும் ஒரு கடமை அல்லவா ஓட்டுபோடுவது! காசுக்காக காத்திராமல் நமது சொந்த தேசிய திருவிழாவுக்காக என்று நினைத்து கொண்டு, அவரவர் வசதி, சக்திக்கு தக்கவாறு சொந்த பணத்திலிருந்து இரண்டோ மூன்றோ எடுத்துப்போய் செலவிட்டு ஓட்டுப்போடுங்கள். அதுதான் நல்ல மக்களுக்கு அடையாளம். 

இன்றைய தேர்தலில் ஒட்டு போடுவது மட்டும் நம் கடமை அல்ல ; இருட்டில் வந்து நம் வீட்டின் முன் பணத்தை போட்டு செல்லும் கட்சிக்காரர்களின் பணத்தை எடுத்து தேர்தல் ஆணையம் மூலமாக அரசாங்க கருவூலத்தில் சேர்க்க வேண்டியதும்  நம் கடமை தான்...  

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 54

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 54

மாநில கட்சிகள் / தமிழர் கட்சிகள் :

சிலம்புச் செல்வர் திரு. ம.போ.சி. அவர்கள் "தமிழரசுக் கழகம்" என்கிற இயக்கத்தை நடாத்தினார். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழக எல்லைகளை தாராளமாக அடுத்தவர்களுக்கு விட்டுக்கொடுத்தது காங்கிரஸ். இன்றைக்கு தமிழகத்தோடு பல பகுதிகள் இருப்பதற்கு முக்கிய காரணம் இவரும், திரு நேசமணி அவர்களும் என்று சொன்னால் மிகையாகாது.

அண்மையில் கூட, தமிழக கோட்டாவில் மைய அமைச்சராக இருக்கும் திரு. பொன் ராதா கிருஷ்ணன் அவர்கள் தமிழகத்தோடு இருக்கும் சில பகுதிகள் கேரளாவோடு இருந்திருக்கலாம் என்ற கருத்தை வெளியிட்டிருந்தார். பதவிக்கு வரும் வரை தமிழராக இருப்பவர்கள், பதவிக்கு வந்தவுடன் கேரளத்துக்காரர்கலாக ஆகிவிடுகிறார்கள். 

ம.போ.சி. அவர்கள் கூட தன்னுடைய அகவை 50 ஆனத்துக்கு பிறகு தடம் புரண்டுவிட்டார் என்று தெரிய வருகிறது. 

ஓய்வு பெற்ற IAS அதிகாரி மலைச்சாமி அவர்கள் ஒரு அரசியல் கட்சியை துவக்கி நடத்தினார். தேர்தல் கூட்டணி குறித்து பேச்சு வரும் போது அந்த கட்சியை கலைத்துவிட்டு அதிமுகவில் சேர்ந்தால் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிடலாம் என்று ஒரு நிபந்தனை வைக்கப்பட்டது, அ.தி.மு.க. வில் ஐக்கியமானார். மறுபுறம், இடையில், திரு ஜகத்ரட்சகன் (ஜனநாயக முன்னேற்ற கழகம்) ; இப்படி நிறைய பேர். இப்படியாக தமிழர் கட்சி எதுவா இருந்தாலும் கலைச்சிட்டு, திரிவடுக / தேசிய கட்சில இணையனும். இல்லைனா அந்த கட்சிய சாதி கட்சினு சொல்லுவாங்க.

பா.ம.க. ~ இந்த கட்சியை துவங்கியது வன்னிய சமுதாய பெரியவர்கள் மட்டும் இல்லை. மருத்துவர் ராமதாசுக்கு நண்பர்களாக இருந்த பல சமுதாயத்தை சார்ந்தவர்களும் சேர்ந்து துவக்கினார்கள்.

வகை மாதிரிக்கு சொல்லுவதென்றால், திரு. பொன்னுசாமி மற்றும்  
திரு. தலித்.ஏழுமலை ஆகியோர் மைய அமைச்சராக பா.ம.க. சார்பாக இருந்துள்ளார்கள். 

பொது இடங்களில் புகை பிடிகுறது இப்ப இல்லவே இல்லன்னு சொல்ல முடியாது ஆனா, பல பேருக்கு இப்ப ஒரு விழிப்புணர்வு வந்திருக்கு; நிறைய குறைஞ்சிருக்கு. மதுவுக்கு எதிரா தொடர்ந்து போராட்டங்களை  முன்னெடுக்கிறது. 

ஆனால் இந்த கட்சியின் முதல்வர் வேட்பாளர் இன்னும் பக்குவப்படவில்லை. சில விரும்பத்தகாத பிரச்சனைகள் என்று வருகின்றபோது வட மாவட்டங்களை விட இந்த பிரச்னை தென் மாவட்டங்களில் அதிகம் என்று மாநிலத்தின் ஒரு பகுதியை மட்டும் பிரதிபலிக்கிறார். மாநிலத்துக்கே பொதுவானவராக செயல்பட முடியுமா என்று தெரியவில்லை. ஒரு வேலை மற்ற மாநிலங்கள் பிரிக்கப்பட்டது போல தமிழகமும் என்றாவது பிரிக்கபட்டால் அந்த மாநிலத்துக்கு முதல்வர் ஆகலாம், தற்பொழுது இருக்கும் மாநில அமைப்பில் தன்னால் முதல்வர் ஆக முடியாது என்கிற புரிதலாகவும் இருக்கலாம். மாம்பலம் என்பது குறிப்பிட்ட சில மாவட்டங்களில் விளையக்கூடியதாக இருக்கிறது...  

ஆனால் இந்த தேர்தலுக்காக அதிகம் உழைத்தவர்கள் என்றால் இந்த கட்சியைதான் சொல்ல முடியும். வரைவு தேர்தல் அறிக்கையை தாக்கல் செய்ததில் இருந்து எவ்வளவோ... ஒவ்வொரு வருடமும் நிழல் நிதிநிலை அறிக்கை தயார் செய்கிறார்கள். மாநிலம் முழுவதும் சுற்றுபுறம் செய்ததன் மூலமாக மருத்துவர் அன்புமணிக்கு நிச்சையம் நல்ல பாடம் கிடைத்திருக்கும். இந்த அனுபவமும் G.K. மணி ; மருத்துவர் ராமதாசு ; செந்தில் போன்றோரின் வழிகாட்டுதலும் இவரை சரியான பாதையில் இட்டு செல்லும் என்று நம்பிக்கை இருக்கிறது. இந்த தேர்தலில் இந்த கட்சியின் வாக்குகளும் வெற்றி பெரும் இடங்களும்  நிச்சையம்  அதிகரிக்கும். ஒரு வேலை தொங்கு சட்டமன்றம் உருவானால் பா.ம.க. வின் பங்கு நிச்சையம். மைனாரிட்டி அரசு ஆட்சி அமைத்தால் நிச்சையம் பா.ம.க. வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும்.

அதுபோலவே இயக்குனர் நடிகர் சீமான் கட்சி கூறும் கருத்துக்கள்  பல நேரங்களில் சரியாக இருந்தாலும் கூட, சினிமாவில் இருந்து வரும் ஒருவரை மீண்டும் ஏற்கும் மன பக்குவம் "எனக்கு" இல்லை. மீண்டும் ஒரு விசிலடிச்சான் கூட்டத்தை...வேண்டாம்... விரைவில் சீமான் இல்லாத கட்சியாக அது உருபெறும் என்பது என் கணிப்பு...இந்த தேர்தலில் நிறைய  ஓட்டுக்களும் இடங்களும் இந்த கட்சிக்கு கிடைத்தால் தமிழகத்துக்கு நல்லது... அடுத்து வரும் ஆண்டுகளில் களத்தை விட்டு விலகாமல் தொடர்ந்து உத்வேகத்தை தக்கவைத்தால் தமிழகத்துக்கு நல்லது...

இவர்களை தவிர்த்து சிலர் சுயேச்சைகளாக இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அவர்களில் சிறந்தவர்களுக்கு ஒட்டு போடலாம். மற்ற கட்சிகளில் உள்ள வேட்பாளர்களில் யாரால் சுயமாக சிந்தித்து ; கட்சி தவறான முடிவை எடுத்தாலும் அதனை எதிர்த்து மக்களுக்காக செயலாற்ற கூடியவர்களாக இருக்கிறாரோ அவருக்கு வாக்களிக்கலாம்...

கடைசியா ஒரு அடிப்படை வேறுபாடு என்னனா, தங்கள் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதிகளை விட்டு கொடுத்துவிட்டு தோற்கும் தொகுதியில் நிற்கும் கட்சி, தமிழர் கட்சி. தனக்கு தோல்வி உறுதி என்ற தொகுதிகளை மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதிகளையும் சேர்த்து நிற்கும் கட்சி தான் திரிவடுக / தேசிய கட்சிகள்.




தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 52

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 52

கேரளத்திலும் ஆந்திரத்திலும் ஏன் திராவிடவாதம் இல்லை?

திராவிட இனவாத சித்தாந்தம் என்பது பல்வேறு மொழி,சாதிபேதங்கள் கொண்ட பிராமணரல்லாதார் அனைவரும் பிராமணர்களுக்கு எதிராக ஒருங்கிணைவதற்கான ஒரு பொது அடையாளமாகவே முன்னெடுக்கப்பட்டது. கேரளாவில் நாயர்களும் ; ஆந்திரத்தில் ரெட்டிகளும், பிராமணர்களிடம் இருந்த மேலாதிக்கத்தை உடைத்து அதிகார பீடத்தை பிடித்தார்கள் அதனால் அங்கே திராவிடவாதம் இல்லை என்று எழுத்தாளர் ஜெயமோகன் கூறுகிறார். 

அவர் மேலும் சொல்லுகிறார், "பிராமணரல்லாத உயர்சாதியினரான நாயர்களும் ரெட்டிகளும் ஜனநாயக அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளுமளவுக்கு எண்ணிக்கை பலமும் கொண்டவர்கள் என்பதை கவனிக்கவேண்டும். தமிழ்நாட்டில் அப்படி அல்ல நிலைமை. பிராமணரல்லாத உயர்சாதியினர் எண்ணிக்கைபலமற்றவர்கள்."

ஒருவேளை  இவர் சொல்லுவது போல பிராமணரல்லாதார் ஆட்சியை பிடிப்பதற்கான இயக்கம் என்றால் கேரளா ஆந்திரா கர்நாட்டகா போலவே தமிழகத்தில் பலகாலமாக பிராமணர் அல்லாத  அரசு தானே இருந்தது (காமராசர் to கருணாநிதி). இருந்தாலும் அந்த இயக்கம் தமிழத்தில் ஏன் மறைய வில்லை.

ஆந்திரத்தில் ரெட்டிகளுக்கும் கேரளத்தில் நாயர்களுக்கும் இருந்தது போன்ற எண்ணிக்கை பலம் தமிழ் நாட்டிலும் கர்நாடகத்திலும் இருந்த பிற்ப்படுத்தபட்டவர்களுக்கு இல்லை என்ற வாதம் சரி என்றால் கர்நாடகத்தில் ஏன் அந்த திராவிட வாதம் புறம்தள்ளபட்டது.

ஆந்திரத்திலும் ; கேரளத்திலும் ; கர்நாடகத்திலும் பூர்வ குடிகள் மற்றும் அயலவர்கள்  ஆகியோருக்கான வேறுபாட்டை மக்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள். ஆனால் தமிழகத்தில் தமிழக தலைவர்கள்  தேசியவாதம் பேசினார்கள்.  எண்ணிக்கை பலம் கொண்ட பிற்ப்படுத்தபட்டோர்  அனைவரும் தேசியவாதத்திலும் திராவிடவாதத்திலும் மதி மயங்கி இருந்தார்கள். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற என்னத்தை உலகிற்கு உரைத்த இனமாக இருந்த காரணத்தால் யாரையும் எளிதில் நம்பினார்கள்.

ஆக மொத்தத்தில் பூர்வகுடிகளுக்கும் வந்தேரிகளுக்கும் இடையிலான போராட்டமாக மற்ற மாநிலங்களில் பார்க்கப்பட்டபோது இங்கே அயலவர்கள் ஊடுருவுவதற்கும் அவர்கள் நிலைபெருவதர்க்குமான இயக்கமாக இருந்து வந்துள்ளது. கர்நாட்டகத்தில் இருந்தும் கேரளத்தில் இருந்தும் தமிழகத்தில் ஊடுருவியவர்கள் எண்ணிக்கை என்பது ஆந்திரத்தில் இருந்து ஊடுருவியவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது குறைவு.

அதேபோல தமிழகத்தில் இருந்து அந்த மூன்று மாநிலங்களில் ஊடுருவியவர்களின் எணிக்கை சொற்பம். குறிப்பாக சொல்வதென்றால் திரிவடுகத்தில் இருந்து தமிழ்  நாட்டில் ஊடுருவியவர்களின் எனிக்கையோடு ; தமிழ்நாட்டில் இருந்து திரிவடுகத்தில் குடியேறிய தமிழர்களின் இனிக்கையை ஒப்பிட்டு பார்த்தால் மிகவும் குறைவாக இருக்கும். அதிலும் கூட பலர் தமிழை தாய் மொழியாக கொண்டிராதவர்கலாக இருப்பார்கள்.

ஒவ்வொரு முறை காவேரி பிரச்சனை வரும்போதும், "நிதானமாக முடிவெடுக்க வேண்டும் அங்கு இருக்கும் தமிழர்களுக்கு  எந்த சிரமமும்  வந்து விடக்கூடாது" என்று கலைஞர் பேசுவது எதற்க்காக?

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 53




செம்மர கடத்தலில் ஈடுபடுபவர்களை தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக நாம் ஆதரிக்கலாமா? விசாரணை திரைப்படம் பார்த்துவிட்டு ; தமிழர்களாக தங்களை முன்னிறுத்தி ஆந்திர காவல் படுகொலைக்கு ஆதரவாக கேள்வி கேட்க்கும் திரிவடுக நண்பர்களுக்கு​...

1) பாரபட்சம் பார்க்காமல் தண்டனை கொடுப்பது பற்றி தமிழர்களுக்கு பாடம் எடுக்கும் அருகதை இங்கு யாருக்கும் கிடையாது. குற்றம் செய்தவன் இரத்த சொந்தமாக இருந்தாலும் அவனுக்கான தண்டனையை பெற்றுத்தருவதில் காட்டும் முனைப்பில் பிழை கண்டுபிடிக்கவோ அல்லது பின்பற்றவோ வேறு யாராலும் முடியாது. 

2) தமிழர்களுக்கு மட்டும் தான் எங்கள் ஓட்டுன்னு தமிழர்கள் முடிவு செஞ்சிருந்தா, இத்தன வருஷமா திரி வடுகர்கள் ஆட்சி செய்திருக்க முடியாது.

3) கொடூரமான தண்டனை செஞ்சா, இப்படி சுட்டா தான் பயம் இருக்கும் யாரும் இனிமேல் இப்படி தப்பு செய்யமாட்டாங்க.  சரியாக  சொன்னீங்க ; வாங்க கருணாநிதி & ஜெயலலிதா நெத்தி பொட்டுல சுட்டு ஆரம்பிக்கலாம்.

பர்மாவுக்கு சென்ற பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அங்கு குடியேறிய இந்தியர்களிடம் இப்படி பேசினார்,  "இன்று முதல் நீங்கள் பர்மா நாட்டு மக்களோடு மக்களாய் வாழ வழி வகுத்துக்கொள்ளுங்கள். இல்லையேல் எதிர்காலத்தில்  கஷ்ட நஷ்டங்களுக்கு நீங்கள் ஆளாக வேண்டி வரும். இங்கே வாழ்ந்து கொண்டு, இந்த நாட்டிற்கு விரோதமாக அல்லது துரோகமாக எதையும் செய்யாதீர்கள்." 


திரு. முத்துராமலிங்க தேவர் அவர்கள் தமிழர்களிடம் பேசி வழிகாட்டியது போல திரிவடுக முன்னோர்கள் தங்கள் இன அரசியல் வியாதிகளிடம் பேசி இருந்தால் (பூர்வ குடிகளுக்கு எந்த வகையிலும் துரோகம் நினைக்காதீர்கள் என்று) இத்தனை சீரழிவு நடந்திருக்காது. நடந்திருக்காது.


தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 54

மாநில கட்சிகள் / தமிழர் கட்சிகள் :

சிலம்புச் செல்வர் திரு. ம.போ.சி. அவர்கள் "தமிழரசுக் கழகம்" என்கிற இயக்கத்தை நடாத்தினார். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழக எல்லைகளை தாராளமாக அடுத்தவர்களுக்கு விட்டுக்கொடுத்தது காங்கிரஸ். இன்றைக்கு தமிழகத்தோடு பல பகுதிகள் இருப்பதற்கு முக்கிய காரணம் இவரும், திரு நேசமணி அவர்களும் என்று சொன்னால் மிகையாகாது.

அண்மையில் கூட, தமிழக கோட்டாவில் மைய அமைச்சராக இருக்கும் திரு. பொன் ராதா கிருஷ்ணன் அவர்கள் தமிழகத்தோடு இருக்கும் சில பகுதிகள் கேரளாவோடு இருந்திருக்கலாம் என்ற கருத்தை வெளியிட்டிருந்தார். பதவிக்கு வரும் வரை தமிழராக இருப்பவர்கள், பதவிக்கு வந்தவுடன் கேரளத்துக்காரர்கலாக ஆகிவிடுகிறார்கள். 

ம.போ.சி. அவர்கள் கூட தன்னுடைய அகவை 50 ஆனத்துக்கு பிறகு தடம் புரண்டுவிட்டார் என்று தெரிய வருகிறது. 

ஓய்வு பெற்ற IAS அதிகாரி மலைச்சாமி அவர்கள் ஒரு அரசியல் கட்சியை துவக்கி நடத்தினார். தேர்தல் கூட்டணி குறித்து பேச்சு வரும் போது அந்த கட்சியை கலைத்துவிட்டு அதிமுகவில் சேர்ந்தால் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிடலாம் என்று ஒரு நிபந்தனை வைக்கப்பட்டது, அ.தி.மு.க. வில் ஐக்கியமானார். மறுபுறம், இடையில், திரு ஜகத்ரட்சகன் (ஜனநாயக முன்னேற்ற கழகம்) ; இப்படி நிறைய பேர். இப்படியாக தமிழர் கட்சி எதுவா இருந்தாலும் கலைச்சிட்டு, திரிவடுக / தேசிய கட்சில இணையனும். இல்லைனா அந்த கட்சிய சாதி கட்சினு சொல்லுவாங்க.

பா.ம.க. ~ இந்த கட்சியை துவங்கியது வன்னிய சமுதாய பெரியவர்கள் மட்டும் இல்லை. மருத்துவர் ராமதாசுக்கு நண்பர்களாக இருந்த பல சமுதாயத்தை சார்ந்தவர்களும் சேர்ந்து துவக்கினார்கள்.

வகை மாதிரிக்கு சொல்லுவதென்றால், திரு. பொன்னுசாமி மற்றும்  திரு. தலித்.ஏழுமலை ஆகியோர் மைய அமைச்சராக பா.ம.க. சார்பாக இருந்துள்ளார்கள். 

பொது இடங்களில் புகை பிடிகுறது இப்ப இல்லவே இல்லன்னு சொல்ல முடியாது ஆனா, பல பேருக்கு இப்ப ஒரு விழிப்புணர்வு வந்திருக்கு; நிறைய குறைஞ்சிருக்கு. மதுவுக்கு எதிரா தொடர்ந்து போராட்டங்களை  முன்னெடுக்கிறது. 

ஆனால் இந்த கட்சியின் முதல்வர் வேட்பாளர் இன்னும் பக்குவப்படவில்லை. சில விரும்பத்தகாத பிரச்சனைகள் என்று வருகின்றபோது வட மாவட்டங்களை விட இந்த பிரச்னை தென் மாவட்டங்களில் அதிகம் என்று மாநிலத்தின் ஒரு பகுதியை மட்டும் பிரதிபலிக்கிறார். மாநிலத்துக்கே பொதுவானவராக செயல்பட முடியுமா என்று தெரியவில்லை. ஒரு வேலை மற்ற மாநிலங்கள் பிரிக்கப்பட்டது போல தமிழகமும் என்றாவது பிரிக்கபட்டால் அந்த மாநிலத்துக்கு முதல்வர் ஆகலாம், தற்பொழுது இருக்கும் மாநில அமைப்பில் தன்னால் முதல்வர் ஆக முடியாது என்கிற புரிதலாகவும் இருக்கலாம்.

அதுபோலவே இயக்குனர் நடிகர் சீமான் கட்சி கூறும் கருத்துக்கள்  பல நேரங்களில் சரியாக இருந்தாலும் கூட, சினிமாவில் இருந்து வரும் ஒருவரை மீண்டும் ஏற்கும் மன பக்குவம் இல்லை. மீண்டும் ஒரு விசிலடிச்சான் கூட்டத்தை...வேண்டாம்... விரைவில் சீமான் இல்லாத கட்சியாக அது உருபெறும் என்பது என் கணிப்பு...


கடைசியா ஒரு அடிப்படை வேறுபாடு என்னனா, தங்கள் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதிகளை விட்டு கொடுத்துவிட்டு தோற்கும் தொகுதியில் நிற்கும் கட்சி, தமிழர் கட்சி. தனக்கு தோல்வி உறுதி என்ற தொகுதிகளை மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதிகளையும் சேர்த்து நிற்கும் கட்சி தான் திரிவடுக / தேசிய கட்சிகள்.


தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 55



தேர்தல் விதிமுறைகளின் படி இன்றோடு தேர்தல் பரப்புரைகளை முடித்துக்கொள்ள வேண்டும். 1962 ஆண்டு நடந்த தேர்தல் பரப்புரையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் பேசிய பேச்சு இன்றும் பொருந்துவதாக இருக்கிறது. அதில் சில பகுதிகள் மட்டும் இங்கே.

ஓட்டுப் போடுகிற வகையில் மக்கள் எதையும் எதிர்ப்பார்க்காதீர்கள். அது மகா பாவம். ஒரு கிராமத்தில் முளைக்கொட்டு என்றால் இரண்டு ரூபாய் எடுத்துக்கொண்டு போய்ப் பார்க்கிறீர்கள். ஜல்லிக்கட்டு என்றால் நாலு ரூபாய் எடுத்துப் போய் வேடிக்கை பார்த்து வருகிறீர்கள். சினிமாவுக்கு ஐந்து ரூபாய் செலவிட்டுப் போய் பார்க்கிறீர்கள். ஆனால், தேர்தலில் ஓட்டுப்போடுவதற்கு மட்டும் யாராவது பணம் தருவார்களா என்று எதிர்பார்க்கலாமா?

உங்கள் தலைவிதியை ஐந்து வருடங்களுக்கு ஒப்புவிக்கும் ஒரு கடமை அல்லவா ஓட்டுபோடுவது! காசுக்காக காத்திராமல் நமது சொந்த தேசிய திருவிழாவுக்காக என்று நினைத்து கொண்டு, அவரவர் வசதி, சக்திக்கு தக்கவாறு சொந்த பணத்திலிருந்து இரண்டோ மூன்றோ எடுத்துப்போய் செலவிட்டு ஓட்டுப்போடுங்கள். அதுதான் நல்ல மக்களுக்கு அடையாளம். 


பாச தலைவனுக்கு பாராட்டு விழா. விருது கொடுத்தா விமர்சனம் செய்ய கூடாது.

ஒருபுறம் நெற்றியில் குங்குமம் வைத்துவரும் கட்சிகாரனை ஏசுவது ; மறுபுறம் மனைவியார் / துணைவியார் திரிவடுக சாய்பாபாவின் காலில் விழுந்தாலும் சிரித்துக்கொண்டே பார்ப்பது. நெற்றியில் திரு நூறு குங்குமம் வைத்து வந்தால் உடனே ஒரு நக்கல்....


தில்லி போக்குவரத்து விதிகளை எதிர்க்கும் MP க்கள். கோவையில் விபத்தில் இறந்த காவலரும் அவரின் பெண்களும்...

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 53

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 53




செம்மர கடத்தலில் ஈடுபடுபவர்களை தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக நாம் ஆதரிக்கலாமா? விசாரணை திரைப்படம் பார்த்துவிட்டு ; தமிழர்களாக தங்களை முன்னிறுத்தி ஆந்திர காவல் படுகொலைக்கு ஆதரவாக கேள்வி கேட்க்கும் திரிவடுக நண்பர்களுக்கு​...

1) பாரபட்சம் பார்க்காமல் தண்டனை கொடுப்பது பற்றி தமிழர்களுக்கு பாடம் எடுக்கும் அருகதை இங்கு யாருக்கும் கிடையாது. குற்றம் செய்தவன் இரத்த சொந்தமாக இருந்தாலும் அவனுக்கான தண்டனையை பெற்றுத்தருவதில் காட்டும் முனைப்பில் பிழை கண்டுபிடிக்கவோ அல்லது பின்பற்றவோ வேறு யாராலும் முடியாது. 

2) தமிழர்களுக்கு மட்டும் தான் எங்கள் ஓட்டுன்னு தமிழர்கள் முடிவு செஞ்சிருந்தா, இத்தன வருஷமா திரி வடுகர்கள் ஆட்சி செய்திருக்க முடியாது.

3) கொடூரமான தண்டனை செஞ்சா, இப்படி சுட்டா தான் பயம் இருக்கும் யாரும் இனிமேல் இப்படி தப்பு செய்யமாட்டாங்க.  சரியாக  சொன்னீங்க ; வாங்க கருணாநிதி & ஜெயலலிதா நெத்தி பொட்டுல சுட்டு ஆரம்பிக்கலாம்.

பர்மாவுக்கு சென்ற பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அங்கு குடியேறிய இந்தியர்களிடம் இப்படி பேசினார்,  "இன்று முதல் நீங்கள் பர்மா நாட்டு மக்களோடு மக்களாய் வாழ வழி வகுத்துக்கொள்ளுங்கள். இல்லையேல் எதிர்காலத்தில்  கஷ்ட நஷ்டங்களுக்கு நீங்கள் ஆளாக வேண்டி வரும். இங்கே வாழ்ந்து கொண்டு, இந்த நாட்டிற்கு விரோதமாக அல்லது துரோகமாக எதையும் செய்யாதீர்கள்." 

திரு. முத்துராமலிங்க தேவர் அவர்கள் தமிழர்களிடம் பேசி வழிகாட்டியது போல திரிவடுக முன்னோர்கள் தங்கள் இன அரசியல் வியாதிகளிடம் பேசி இருந்தால் (பூர்வ குடிகளுக்கு எந்த வகையிலும் துரோகம் நினைக்காதீர்கள் என்று) இத்தனை சீரழிவு நடந்திருக்காது. நடந்திருக்காது.

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 51

9) மோசடி / ஊழல் / கொலை குற்ற சாட்டு வந்தால் அதனை கடைசிவரை கண்டுபிடிக்காமல் யூகத்துக்கு விடுதல். அல்லது அதன் மூலம் அனுதாப ஆதாயம் அடைய முயல்வது.

கள்ள நோட்டின் வரிசை எண் உட்பட அனைத்து விபரங்களையும் கூறி முதல்வருக்கு அதில் பங்கு இருக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்தபோது அந்த குற்றசாட்டை விசாரணை செய்யாமல் இருந்தது காமராசரின் காங்கிரஸ் அரசு.   செய்திருப்பேன் என்று நம்புகிறீர்களா என்ற உணர்ச்சி வசனம் பதிலாக இருந்தது. ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் இல்லை.

அழகிரி மீதான குற்றசாட்டு போல முடிவுக்கு வராத அரசியல்  எவ்வளவு திரிவடுக ஆட்சியில்...

10) காமராசரின் காங்கிரஸ் அரசு காலனிகளை உருவாக்கியது. மதுரையில் மாட்டு தாவணி அருகில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடம் ஒதுக்கபட்டது இன்று போல அன்று போக்குவரத்து வசதிகள் கிடையாது. எல்லாரோடும் சேர்ந்து வாழ்வதற்கு ஏற்றார் போல ஊருக்கு உள்ளேயே  உருவாக்கலாமே. ஏன் ஊருக்கு வெளியே இடம் பெயர்த்தவேண்டும்? என்று சட்டசபையில் குரல்கள் எழுந்தது.

கலைஞர் சமத்துவபுரத்தை ஊருக்கு வெளியே உருவாக்கினார்.  காங்கிரஸ் அரசு தாழ்த்தப்பட்டவர்களை மட்டும்  ஊருக்கு வெளியே கொண்டுபோனால், அவர்கோடு சேர்ந்து வாழ வேண்டும் என்கிற எண்ணம் இருப்பவர்கள் அனைவரும் ஊருக்கு வெளியே செல்லுங்கள் என்ற நிலையை உருவாக்கினார்.

11) இயற்க்கை வளங்களை அழித்தல் -  கர்ம வீரர் காமராசர் ஆட்சி காலத்தில் தான் சென்னையின் குப்பை, பள்ளிக்கரணை சதுப்பு நில காடுகளில் கொட்டும் வழக்கம் துவங்கியது.  அதனை திரிவடுக கட்சிகள் இம்மி பிசகாமல் கடை பிடித்தன..பெரும்பாலான நீர் நிலைகளை அழித்து விட்டார்கள். கோவையில் தமிழ் மாநாடு நடத்துகிறேன் என்று மரங்கள் அனைத்தையும்  வெட்டி வீழ்த்திவிட்டார்கள்.

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 50

5) பதவி / ஆதாயம் அடைய வேண்டும் என்றால் உடனே தன் அடையாளத்தை மாற்றி கொள்வது : பிராமணர் ஒருவரை, தன் அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டு அரசியல் பாடம் பயின்று, கட்சியிலும் வளர்ந்துவிட்டு ; முதல்வர் பதவியை அடையவேண்டும் என்கிற ஒரே நோக்கத்துக்காக ; பிராமணர், பிராமணர் அல்லாதோர் என்ற பிரிவினையை பேசினார். பச்சை தமிழர் என்ற அடையாளம் பூண்டார். மாநில தேர்தலில் திரு. சீனிவாசனிடம் தோற்ற பிற்ப்பாடு நாடாளுமன்ற தேர்தலில் நிற்கும்போது தன் பெயருக்கு பின் தன் சமுதாய அடையாள பெயரை சேர்த்துக் கொண்டார். 

இந்த வழக்கத்தை திரிவடுக கட்சிகள் தொடர்ந்து நடைமுறைபடுத்தி வருகிறார்கள். அண்மைக்கால உதாரணம் வேண்டுமென்றால் மங்கூஸ் என்று பலராலும் புகழப்பட்டு வந்த மனுஷ்யபுத்திரன் இன்று அவருடைய மத அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டிய நிபந்தத்தில் ; தன் இயற் பெயரை முன்னிலைபடுத்துகிறார்.

6) தனக்கு பிடித்த நடிகர் / நடிகை என்றால் அரசியலில் சேரலாம் மற்றவர்கள் என்றால் கூத்தாடிகள் அரசியலுக்கு வரக்கூடாது என்று பேசுவது.

நடிகர்களை அரசியலில் நுழையவிட்டு நாட்டை சீரழித்ததில் திரிவடுக கட்சிகளுக்கு எவ்வளவு  பங்கு இருக்கிறதோ அதே அளவு பங்கு திரு காமராசர் காங்கிரசுக்கும் உண்டு.

7) அடுத்த கட்சியில் பணக்காரன் நின்றால் அது பணக்காரர்கள் கட்சி என்பது அதே நேரத்தில் தன் கட்சியில் பணக்காரர்களை வேட்பாளர்களாக நிறுத்துவது.

8) தினத்தந்தி நாளிதழில் இப்போது வெளியிட்டிருக்கும் மீள் பதிவை பார்த்தால், காமராசர் ஆட்சியில் அரிசி பருப்பு போன்ற, அன்றாட பயன்பாட்டுக்கு தேவையான பொருட்களுக்கு செயற்கை தட்டுப்பாடு நிலவி இருக்கிறது கேட்க்கும் விலை கொடுத்தால் எல்லாமும் கிடைக்கும் என்ற நிலை. இந்த பதுக்கல் மற்றும் கருப்பு சந்தையை கட்டுப்படுத்த இயலாத கடத்தலுக்கு உடந்தையான ஒரு அரசாகவே காமராசரின் காங்கிரஸ் அரசு இருந்துள்ளது. 

இன்று வரை அந்த நிலைமை மாறவில்லை. பசுமை காய்கனி அங்காடி என்று ஊரை ஏமாற்றுகிறார்கள்.

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 49

2) ஒரு திட்டத்துக்கு தேவைப்படும் நிதிஆதாரத்தை ஒதுக்காமல் திட்டத்தை துவக்குவது ; துறையை ஏற்ப்படுத்துவது  ; அடிக்கல் நாட்டுவிழா மட்டும் நடாத்துவது. அதுவும் ஆட்சியில் இருந்து விலகும் நேரத்தில்.... அது குறித்து கேள்வி எழுப்பினால் உணர்ச்சி வசனங்கள் பேசுவது.

கர்ம வீரர் காமராசரின் பெயர் சொல்லும் மதிய உணவு திட்டம் பற்றி முன்னமே கல்வி பகுதியில் பார்த்தோம்.

அதுபோலவே கலைஞரும் மாற்று திரனாளிகள்  என்ற துறையை உருவாக்கினார் போதிய நிதி ஆதாரத்தை ஒதுக்காமலே. செல்வி ஜெயலலிதாவும் பல அடிக்கல் நாட்டு விழாக்கள் மட்டும் நடத்தி இருக்கிறார்.  பல மாவட்டங்கள் துவக்கபட்டபோதும் கிட்ட தட்ட இதே நிலை தான்.

3) தனிப்பட்ட (அல்லது அரசியல்) பகையை (அல்லது இயலாமையை) திசைதிருப்பி சாதி / இனக்குழுக்களின் பிரச்சனையாக சித்தரித்து கவனத்தை திசை திருப்புவது.

நேரு வந்து பரப்புரை செய்தும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தொடர்ந்து தோற்றார்கள். அரசாங்கத்தின் மேல் மக்களுக்கு அதிர்ப்த்தி உருவானது. இந்த வஞ்சத்தை தீர்க்க கவனத்தை திசை திருப்ப முதுகளத்தூர் கலவரத்தை காமராசர் & பக்தவச்சலம் அரசாங்கம் உருவாக்கியது.

கலைஞர் பற்றி சொல்லவே வேண்டாம் எல்லாருக்கும் நல்லா தெரியும். செல்வி ஜெயலலிதா இந்த முறை அதை செய்ய முற்ப்பட்டு ஒரு இடத்தில் தோற்றார் மற்றொரு இடத்தில் வெற்றி பெற்றார். சில வருடங்களுக்கு முன் பரமக்குடியில் நடந்த காவல்துறையின் துப்பாக்கிச்  சூடை சாதி சண்டையாக சித்தரிக்க முயன்றார். ஆனால் அவரது கூட்டணியில் இருந்த டாக்டர் கிருஷ்ணசாமி  அதனை மறுத்து சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார். அடுத்ததாக இளவரசன் என்ற ஒரு வாலிபனை பகடையாக வைத்து ஒரு முயற்சி ; அதில் செல்வி ஜெயலலிதாவுக்கு வெற்றி தான்.

4) வணிக குழுமம் போல அரசாங்கம் செயல்படுவது.

பொது விநியோக திட்டத்தை துவக்கிய போது அதனை பலரும் விமர்சனம் செய்தார்கள். அரசாங்கமானது வணீகத்தில் ஈடுபடக்கூடாது ; வணிகர்களை கட்டுபடுத்த  வேண்டும் என்று. இன்றளவும் தமிழக ரேஷன் அரிசி மற்ற மாநிலங்களுக்கு கடத்தபடுவது தொடர்கிறது. 

திரிவடுக ஆட்சியில் கல்வி மருத்துவம் போன்ற மக்களுக்கு அடிப்படையான விடயங்கள் தனியார் வசமும் போக்குவரத்து ; மதுபான கடைகள் மற்றும் இன்ன பிற விடயங்கள் அரசாங்கத்தாலும் விற்பனை செய்ய படுகின்றன.

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 48

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 48

காமராசர் ஆட்சியை கொண்டுவருவோம்னு சிலர் சூளுரைக்குறாங்க. அப்படினா என்ன? அது சாத்தியமா? சுதந்திரத்துக்கு முந்தய காலகட்டத்தில் காமராசர் ஒரு சிறந்த தேச பக்தர். அதனை யாரும் மறுக்க முடியாது. ஆனால் சகவாச தோஷம் தான் கெடுத்துவிட்டது.  ஒன்று நேரு. மற்றொன்று திருட்டு திரிவடுக கூட்டம்.

1) BHEL நிறுவனத்துக்காக நிபுணர்கள் இடம் தேடியபோது அதற்க்கு தகுந்தார் போன்ற இடம் எங்கும் கிடைக்கவில்லை ; அப்போது முதல்வராக இருந்த திரு. காமராசர் அவர்கள், திருவெறும்பூர் என்ற இடத்தை பரிந்துரை செய்தார். நிபுணர்கள் எதிர்பார்த்த அம்சங்கள் நிறைந்த இடமாக அந்த இடம் இருந்ததால் அங்கே BHEL  நிறுவனம் வந்தது.  பல பேருக்கு வேலை வாய்ப்பை கொடுத்தது.

இந்த நிகழ்வானது நம் எல்லோருக்கும் தெரியும். படிக்கவில்லை என்றாலும் கூட அவரின் புவியியல் அறிவு எல்லாராலும் மெச்சப்பட வேண்டும். 

அதே காமராசர் தான் சீமை கருவேலம் மரங்களை முகவை மாவட்டத்தில் தூவிவிட்டார். நாரை தாண்டா கண்மாய் என்று பெயர் பெற்ற, மாநிலத்திலேயே அகலம் அதிகம் உடைய கண்மாய் என்று அறியப்பட்ட ராமநாதபுர கண்மாய் இருந்தும்  அங்கே பல வருடங்களுக்கு முன் அங்கே தண்ணீருக்கு தட்டுப்பாடு வந்து. இன்றைக்கு மகாராஸ்ட்ராவில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு பற்றியும் இரயிலில் தண்ணீர் கொண்டு செல்லபடுவது குறித்தும் இப்போது ஊடகங்களில் பார்க்கிறோமே அது போன்ற நிலை ராமநாதபுர மாவட்டத்தில் ஏற்ப்பட காரணம் சீமை கருவேலம் தானே. அதற்க்கு பொறுப்பு ஏற்ப்பவர்கள் யார். அரசு அதிகாரிகள் தானே...

ஒரு திட்டத்தின் மூலம் நல்ல பெயர் கிடைகிறது என்றால் அது அரசியல்வாதிக்கும் ; கெட்ட பெயர் கிடைகிறது என்றால் அது அரசு அதிகாரிகள் / ஊழியர்களுக்கு போய் சேர வேண்டும். இந்த நடைமுறை இன்றுவரை மாறவே இல்லை. 

உழவர் சந்தை மூலம் நல்ல பெயர் வருகிறது என்றால், அந்த திட்டத்தை கொண்டுவந்தவர் கருணாநிதி என்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள். அதுவே மீத்தேன் திட்டத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, அதிகாரிகள் எங்களை தவறாக வழி நடத்தி விட்டார்கள் என்று ஸ்டாலின் சொல்லுவார்.

தொட்டில் குழந்தை திட்டத்தால் நல்ல பெயர் வருகிறது என்றால் அது செல்வி ஜெயலலிதாவையும் ; பெரும் வெள்ளத்தில் மக்கள் பாதிக்க பட்டால் அதில் வரும் கெட்ட பெயர், அது அதிகாரிகளின் கவனக்குறைவால் நடந்தது என்றும் அறியப்படும்.  

தோழர் மண்ணாங்கட்டி குறித்த நிகழ்வு அனைவருக்கும் தெரியும் என்பதால் அதை பற்றி மீண்டும் விலாவரியாக பேச வேண்டாம். தவறு நடந்து விட்டது என்றதும், என் கவனத்துக்கு வராமல் நடந்து விட்டது என்று திரு. காமராசர் கூறினார். அதுபோலவே கடந்த சில வருடங்களுக்கு முன் தேர்வுகளை தமிழில் எழுத முடியாது ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்று கல்லூரி மாணவர்களுக்கு சுற்றறிக்கை தயாரானது.  இறுதியில், என் கவனத்துக்கு வராமல் அதிகாரிகள் தவறு  விட்டார்கள் என்று செல்வி ஜெயலலிதா கூறினார். 

செல்வி ஜெயலலிதாவுக்கு தெரியாமல் அவரது முன் அனுமதி இல்லாமல் அதிகாரிகள் மற்றும் மந்திரிகளால் மூச்சு விட முடியும் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? 

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 47

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 47

"organic பொருள்ன்னு சொல்லி இப்பலாம் நிறைய பேரு ஊற ஏமாத்துறாங்க. அவங்களோட நிலத்துல மரபணு மாற்றப்பட்ட விதை ; ரசாயன உரங்கள் ; பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தலைனாலும், அவங்க நிலத்துக்கு பக்கத்துல இருக்க நிலங்கள்ள இதை எல்லாம் பயன்படுத்துனா, அதோட தாக்கம் எல்லாத்துக்கும்  உண்டு இல்லையா. அப்பறம் எப்படி organic பொருள்னு சொல்லமுடியும்?"  இப்படி சிலர் பேசுறாங்க.

இவங்களோட வாதம் எப்படினா எல்லாரும் மாறனும் இல்லைனா யாருமே மாற கூடாது. ஆனா எதார்த்தம் வேருமாதிரி இருக்கு. வரத்து மற்றும் தேவை இதில் ஏதோ ஒன்றின் மூலமாக  சந்தையின் போக்கில் மாற்றத்தை கொண்டுவர முடியும்.  வரத்தில் ஏற்ப்படும் சிறு மாற்றமானது சில காலத்தில், அந்த மாற்றத்தின் மூலமாக தேவையில் மாற்றத்தை கொண்டு  வரும். அந்த மாற்றமானது வரத்திலும்  முழுமையான மாற்றத்தை நாளடைவில் கொண்டுவரும். உதாரணத்துக்கு சொல்வதென்றால் noodles என்ற ஒன்று சந்தையில் நுழைந்தபோது அதற்கென்று ஒரு தேவை இருக்கபெறவில்லை. ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை.

தமிழக அரசாங்கம்  தோட்டகலைத் துறை மூலமா மாடித்தோட்டத்த ஊக்கபடுத்துறாங்க. நல்ல விடயம் தான். ஆனா அதுல கொடுக்குற விதைகள், மரபணு மாற்றபட்ட விதைகளா இருக்கிறதா சொல்லுறாங்க.  இது ஒரு அழிவு வேலையாகும். நல்ல விதைகள கொடுத்தா  தேவல.

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 46

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 46

கல்லூரில படிக்கும்போது திருக்குறள மேற்கோள் காட்டி  விவசாயம் எவ்வளோ சிறந்தது ; விவசாயிகள எல்லோரும் எவ்வளோ மதிக்கணும்னு பேசிகிட்டு இருந்தேன். விவசாயி கணக்கு பாத்தா ஒன்னும் மிஞ்சாதுங்குற  எல்லாரும் சொல்லுற வசனத்த சொன்னேன். நண்பன் ராஜேந்திரன் பொங்கி எழுந்துட்டாப்புல. விவசாயிகளுக்கு தான் இலவச மின்சாரத்த அரசாங்கம் கொடுக்குது.  விவசாய வருமானத்துக்கு தான் வரிவிலக்கும் இருக்குனு பேசுனாப்புல. மனசுக்கு ரொம்ப சங்கடமா இருந்தது.

பெட்டி கட காரன் எவன் வரி கட்டுறான் தொழில் செய்யுறவன் எத்தன பேரு ஒழுங்கா வரி கட்டுறான்னு ஒரு விதமா வாக்குவாதம் நடந்தது. அரசாங்கம் செய்ய வேண்டியத செய்யாம விட்டுட்டு தேவை இல்லாதத செய்யுறதால இந்த மாதிரி பழுதுபட்ட புரிதல் பல தரப்புலயும் இருக்கு.

அறுவடைக்கு பிந்தைய காலத்தில் உணவு பொருட்கள் அதிகம் விரயம் ஆகுரதாவும் ;  உணவு & தானியங்கள் பதப்படுத்துதல் துறைய சீர் செய்ய போறதாவும் தொடர்ந்து அமைச்சர்கள் பேசுறாங்க. Food Corporation of India நிறுவனத்துல நிறைய உணவு தானியங்கள் வீனாகுறதாவும் அத  பட்டினியால் இறக்கும் இந்தியர்களுக்கு கொடுக்கலாமேன்னு  நீதிமன்றம் கேட்டா,  அது முடியாதுங்குறாங்க. அங்க வேலை பாக்குற மூட்டை தூக்கும் தொழிலாளி ; நாட்டின் ஜனாதிபதியை காட்டிலும் அதிகம் சம்பளம் வாங்குறதா செய்தி வந்தது. அத வச்சு வழக்கு நடந்தது.

Walmart வர போகுது அதனால வியாபாரிகள் எல்லாத்துக்கும் சிரமம்னு ஒரு போராட்டம் நடத்துனாங்க. நல்லது  கெட்டது பாக்காம உரத்தையும் விதையையும்  வித்து விவசாயம் கெடுறதுக்கு துணை நின்ன  வியாபாரிகளுக்கு தார்மீக  உரிமை இருக்கா.

சென்னை K.K. நகர்ல MPM Departmental store நு ஒரு  பலசரக்கு அங்காடி இருக்கு தந்தை  மற்றும் மகன்கள் சேர்ந்து கடைய நடத்துறாங்க. அங்க வேலை செய்யும் பணியாட்கள் எல்லோருமே அந்த கடை முதலாளிய  அப்பான்னு தான் கூப்பிடுவாங்க. வாடிக்கையாளர்கள் கிட்ட அவங்க  காட்டுற மரியாதையும்  கொடுக்குற சேவையும் சிறந்ததா இருக்கும். பொருளும் விலையும் அப்படிதான். எத்தன Walmart  வந்தாலும் இவங்கள அடிச்சுக்க முடியாது.

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 45

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 45

நம்பியார் காலம் : "நான் சொல்லுற மாதிரி நீங்க கேட்கலைனா நான் வெளி ஊருல ஆளுகள வச்சு அறுவடைய முடிசுப்பேன்"...  "என்ன எசமான் எங்க வயுத்துல அடிக்குற மாதிரி நீங்க பேசகூடாது"...

ராமராஜன் / பிரபு காலம் : வெளி ஊரு ஆளுங்களையும் machine ஐயும் வச்சு அறுவடைய முடிசிடுவீங்களா. நாங்க என்ன அதுவரைக்கும் பூபரிச்சுகிட்டு இருப்போமா... 

விவசாயத்த / கிராமத்த மையமா வச்சு வெளிவந்த பழைய படங்கள்ல இந்த மாதிரி காட்சிகள் வசனங்கள் அதிகமா இருக்கும். ஆனா இப்பலாம் அப்படி இல்லை. நாங்க வேலைக்கு வரமுடியாது நீங்க யார வேனும்னாலும் கூபிட்டுகோங்க. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் : பொது உடமை கட்சி இந்த திட்டத்த முன் வச்சப்ப விவசாய வேலை இல்லாத நாட்கள்ல  மட்டும் இத செயல் படுத்தனும் ; வேலை சரியா நடக்குதான்னு பாக்கணும் னு  சொன்னாங்க. ஆனா அந்த திட்டத்த வழக்கம் போல காங்கிரசும் மத்த கட்சியும் வாக்குவங்கி அரசியலுக்கு பயன்படுத்திட்டாங்க.  

நம்ம நாட்டுல பெரும்பான்மையோர் விவசாயத்துல ஈடுபடுறாங்க. ஆட்களின் எண்ணிக்கைக்கு தகுந்த உற்பத்தி இல்லை. உற்பத்தி திறன் இல்லாம மனித வளம் வீணா போகுது. தொழில் நுட்பத்த சரியா பயன்படுத்தி உற்பத்திய பெருக்கணும். விவசாயத்துல ஈடுபடும் தொழிலாளர்கள் நிறைய பேர் உற்பத்தி துறைல ஈடுபடனும். உலக வங்கி வழிகாட்டுதல் படி செயல்பட கூடிய மன்மோகன் சிங் / சிதம்பரம் / அலுவாலியா ஆகியோர் ஒரு விடையத்த முன்வச்சாங்க.

இதனால என்ன நடக்கும் இன்னும் நிறைய பேரு சென்னை போன்ற பெருநகரங்களுக்கு குடிபெயரனும். பெருநகரங்கள் இன்னும் நாரனும். ஏன்னா, மாவட்டம் தோறும் சீரான தொழிற்சாலைகள் வர விடமாட்டாங்க. கேட்டா, வானூர்தி மற்றும்  சரக்கு போக்குவரத்து சரியா இல்லைன்னு சொல்லுவாங்க.

தற்போதைய மோடி அரசாங்கம் விவசாயத்துக்கு முக்கியத்துவம் தரணும்னு பேசுறாங்க ; அவங்க பேசுறது corporate விவசாயம்னு விமர்சனங்களும் எழுது.

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 44

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 44

கடந்த 2006 ஆம் வருடத்தில் திமுக ஆட்சியை அமைத்தபோது நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்த விழாவுக்கு சென்று விட்டு தலைமைச் செயலகம் சென்றோம்.  அமைச்சர்கள் பெரும்பாலானோருக்கு scorpio வண்டியும் PA வும் தயாராக இருந்தது. சொல்லிவைத்தார் போல இரண்டு PA க்களில் ஒருவர் திரிவடுகர் (அரசியல் PA அல்லது  நிர்வாக PA).

அங்கே நான் கண்ட ஒரு காட்சியை என் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாது. 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் ; வெள்ளை சட்டை முழுவதும் நனைந்த நிலையில் கையில் ஒரு சால்வையை வைத்துக்கொண்டு யாரையோ தேடிக்கொண்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தார். பலரிடம் விசாரித்துக் கொண்டு இருந்தார். இறுதியாக கிழக்கு பக்கம் இருந்து ஒரு பெண்மணி சில கரைவேட்டி மனிதர்கள் சூழ வந்தார். பெரியவர் அந்த பெண்மணியை   நெருங்கினார். அவர் உடல் மொழியில்  ஒரு மகிழ்ச்சி ; பணிவு ; வாஞ்சை தெரிந்தது.

விசாரித்ததில், அந்த பெண்மணி தான் அமைச்சராக பதவி ஏற்ற திருமதி. தமிழரசி என்பது தெரியவந்தது. ஒவ்வொரு முறையும் ஒரு அரசு பதவி ஏற்க்கும்போதும் இப்படி பட்ட காட்சிகளை பார்க்க முடியும் என்று அனுபவஸ்த்தர்கள் சொன்னார்கள். தன் ஊரை சார்ந்தவர் ; தன் இனத்தை சார்ந்தவர்  என்று ஏதோ ஒரு பிரியத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி இப்படி பலரும் நெகிழ்கிரார்கள்.

ஆனால் பதவி ஏற்றுக்கொண்டவர்களிடம் அது போன்ற உணர்வு சிறிதும் இருப்பதில்லை. அதற்க்கு காரணம் எல்லோருக்கும் போதுவானவனாக இருப்பேன் என்று அவர்கள் எடுத்துக்கொள்ளும் பதவி பிரமாணம் கிடையாது. அவர்களின் முதலாளிகள் மீது அவர்களுக்கு இருக்கும் நன்றி உணர்ச்சிதான்.

2001 ல அதிமுக அரசு பதவி ஏத்துகிட்டபோது அணைக்கட்டு தொகுதி உறுப்பினர் திரு. பாண்டுரங்கன் கன்னத்துல போட்டுகிட்டது ரொம்ப பிரபலம். அந்த விழால திரு. அன்பழகனும் ஸ்டாலினும் கலந்துகிட்டாங்க. அந்த நிகழ்ச்சிக்கு  தபால் மூலமா வந்த அழைப்புல முன்னாள்  முதல்வர்னு போடாம சட்ட மன்ற உறுப்பினர் நு போட்டதால போகலைன்னு அரசியல் செஞ்சாரு கலைஞர். அந்த சட்டமன்றத்துல அதிமுக உறுப்பினர்கள் பதவி ஏற்கும் போது செல்வி ஜெயலலிதாவுக்கு செஞ்ச அளவுக்கு அதிகமான மரியாதைய பகடி செய்யும் விதமா ஸ்டாலினுக்கு சாஷ்ட்டாங்க மரியாதை செய்தார் திமுகவின் பன்னீர்செல்வம்.

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 43

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 43

"எந்த கட்சியா இருந்தாலும் பரவா இல்ல ஆனா வேட்பாளர் நல்லவரான்னு தான் நாம அவசியம் பாக்கனும்"னு நிறைய பேரு இன்னைக்கு பேச ஆரம்பிச்சிருக்காங்க. வேட்பாளர் நல்லவரான்னு பாக்குறது அவசியம் தான் ஆனா அதே நேரத்துல எந்த கட்சில இருக்காருங்குறதும் முக்கியம்.

ஏன் இந்த மாதிரி சொல்லுறோம்? நல்ல வேட்பாளரா இருந்தாலும் அவர் நினச்சத செய்ய சுதந்திரம் இருக்கணும். உதாரணத்துக்கு எடுத்துக்கிட்டா சென்னை அம்பத்தூர் தொகுதியில பாண்டியராஜன் நு ஒரு வேட்பாளர் நிக்குறாரு அதிமுக சார்பா. வேலை வாய்ப்பு தொடர்பான கலந்தாய்வு நிறுவனம் நடத்தகூடியவரு. இப்ப விருதுநகர் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினர் (முன்னாள்). எதுவும் தவறான செய்திகள் அவர பத்தி வந்த மாதிரி தெரியல. 

இப்ப அவர் நிக்குற தொகுதிக்கு தனியா தேர்தல் அறிக்கை தயார் செய்து வச்சிருக்கார். கட்சி தலைமை அனுமதிக்காக காத்திருக்கார். தேர்தல் பரப்புரைக்கு அவசியமானது தேர்தல் அறிக்கை. அது ஒரு முக்கிய ஆவணம். ஆனால் தேர்தலுக்கு சில நாட்கள் உள்ள நிலையிலும் அவரால வெளியிட முடியல. வேட்பாளரா இருக்கும் போதே இப்படினா சட்ட மன்ற உறுப்பினர் ஆனால் இதே போன்ற கையறு நிலை தான் இருக்கும். அதனால தொகுதி மக்களுக்கு எந்த நன்மையும் இருக்காது. அதிமுக ; திமுக ல மட்டும் இல்ல திரிவடுக கட்சிகள் சார்பா நிக்குற எல்லா வேட்பாளர்களுக்கும் இதே நிலை தான். எதையும் சுயமா செய்ய முடியாது.

இதுவே காங்கிரஸ் ; பா.ஜ.க. போன்ற கட்சிகல்னா கதையே வேற. இத செய்யாத அத செய்யாதன்னு யாரும் வந்து தடுக்க மாட்டாங்க ; யாரோட முன் அனுமதியும் வாங்க வேண்டியது இல்லை. ஒரு வேலை உங்கள் சட்ட மன்ற உறுப்பினர் நல்லவராக இருந்து, ஏதாவது நல்லது செய்தால், விளம்பரத்தில் தங்கள் படம் வர வேண்டும் என்று கோஷ்டி தலைவர்கள் நினைக்கலாம் ஆனால் தடுப்பது நடக்காது  ஏன் என்றால் இந்த இரண்டு கட்சிகளுமே தமிழகத்தில் மாலுமி இல்லாத கப்பல் மாதிரி தான். 

தமிழர் கட்சிகள்னா இன்னும் சிறப்பு.

வேட்பாளர் படித்தவராகவும் ; 40 வயதுக்குள் இருந்தால் தேவலை. அதுக்கு மேல போனா, குனியுறது வலையுரதுக்கு பழக்கபட்டவரா இருப்பாரு. நிமிர முடியாது.
ஏழையா பணக்காரனாங்குறது முக்கியம் கிடையாது. வேலைல இருக்கணும் இல்ல சுயமா தொழில் செய்யணும். சமூக சேவை செய்யுறவங்க வேணாம். இந்த தேர்தல்லையோ தோத்தா அவங்களோட வேலைய செய்ய போனா தேவலை...

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 42

திருப்புமுணை மாநாடு :

"ஊழல் ராணி ஜெயாவின் ஆட்சியை ஒழிக்க தலைவர் அழைக்கிறார் தமுக்கம் மைதானம் நோக்கி அலைகடலென திரண்டு வாரீர்..." சுமார் இருபது வருடங்களுக்கு முன் வந்த அழைப்பு... அன்றெல்லாம் பஸ் முதலாளிகள் அல்லது லாரி உரிமையாளர்களிடம் பேசிவிட்டால் போதும் எல்லாரும் தானாவே ஏறிக்கொள்வார்கள்... யாருக்கும் தெரியாமல் வண்டியில் ஏறிக்கொண்டேன்... காரியாபட்டியில் தான், நான் இருப்பதையே கண்டுபிடித்தார்கள்.. பாதி வழியில் திருப்பி அனுப்பவும் முடியாது... காரியாபட்டியில் இருந்தே ஒலிபெருக்கிகள் காதை கிழிக்கும்...  

"பாளையங்கோட்டை சிறையினிலே"... தெற்குவாசலில் நாகூர் ஹனிபா பாடிக்கொண்டிருப்பார்... தெப்பகுளமா... இடம் சரியாக நினைவு இல்லை ஆனால் தேருக்கு மிக அருகில் half போதையில் ஒரு அரசு போக்குவரத்து ஓட்டுனர் / நடத்துனர் செல்வி ஜெயலலிதாவை காது கொடுத்து கேட்கமுடியாத வார்த்தைகள் கொண்டு திட்டிகொண்டிருந்தார். ஊர்வலம் கிளம்பியது.. பாதிவழியில் பார்த்தால் யாதவா கல்லூரியில் /  பேராசிரியராக  இருந்து கட்சிக்கு வந்த திரு. தமிழ் குடிமகன் பாதையோர நடைமேடையில் மிக சாதாரணமாக அமர்ந்து இருந்தார். தமிழ் வருடப்பிறப்பு குறித்து தினமணியில் அவர் எழுதி இருந்த கட்டுரைக்கு நான் கடிதம் போட்டதற்கு எனக்கு பதில் மொழி அனுப்பியவர். selfie எல்லாம் எடுக்கவில்லை.

"இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?"... ஊர்வலம் பல சாலைகள் வழியாக சென்றது. இரு மருங்கிலும் உள்ள பல வீட்டு மாடிகளில் இருந்து அக்காக்கள் ஊர்வலத்தை வேடிக்கை பார்த்தார்கள். கீழே இருந்து அவர்களை நோக்கி கை அசைப்பதும் ஆபாசமாக பேசுவதும்... போதை சற்று அதிகமானால் கனிமொழி குறித்தும் அதே தான்...

இறுதியாக, ஊர்வலம் கோரிப்பாளையம் பாலத்தில் இருந்து இறங்கி செல்லும் தேவர் சிலை அருகில் உள்ள மேடையில் இருந்து கலைஞர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார்... "திமுக ஊர்வலம் மதுரையே ஸ்தம்பித்தது"..மறுநாள் தலைப்பு செய்தி...

அடுத்தநாள் மாநாடு.. பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பில் இருப்பவர்களிடம் அழைப்பிதல் இருக்கும். எல்லாரும் நுழைவுக்கட்டணம் செலுத்தி தான் உள்ளே போக வேண்டும். தென்னரசு நுழைவு வாயில், அழகிரி நுழைவாயில் எல்லாம் இருக்கும் ; காலையிலில் இருந்து பல தலைப்புகளில் பலரும் பேசுவார்கள்..  மாலையில் தான் கலைஞரும் மற்றும் பிற கூட்டணி கட்சி தலைவர்களும் பேசுவார்கள்.. சென்னை ; சேலம் ; வேலூர் என்று பல மாவட்டங்களில் இருந்து பலரும் கூட்டமாக சேர்ந்து வந்திருப்பார்கள்... ராத்திரி கொடைக்கானலுக்கு போகணும் சரியா தூங்க முடியாது... அதனால் பெரும்பாலானோர் மாநாட்டு பந்தலில் தூங்குவார்கள்... 

"வெற்றி கொண்டான் எப்ப பேசுவாரு... தீப்பொறி ஆறுமுகம் எப்ப பேசுவாரு" எவ்வளவு தூக்கத்துல இருந்தாலும் அவ்வபோது எழுந்து கேட்ப்பாங்க... "உங்களுக்கு விளக்கம் சொல்லியே நான் ஓஞ்சு போவேன்யா" என்ற பீடிகையோடு தீப்பொறி ஆறுமுகம் சொல்லும் விளக்கங்களுக்கு விசில் சத்தம் எட்டு ஊருக்கு கேட்க்கும்.

உள்ளே இயக்க புத்தக கடைகள் இருக்கும்... அறிஞர் அண்ணா எழுதிய செவ்வாழை சிறுகதைய பள்ளிக்கூட புத்தகத்துல படிச்சிருக்கமே.. அவர் மற்றும் இயக்க எழுத்தாளர்கள் எழுதுன  புத்தகங்கள படிக்கலாம்னு நிறைய வாங்கினேன்...வீட்டுக்கு போய் படிச்சு பாத்தா... எல்லாம் தினத்தந்தி matter... பள்ளிக்கூடத்துல கடைசி bench ளையும் புதர்லையும் படிச்சு மாட்டிப்பாங்களே... அந்த புத்தகம் எவ்வளவோ தேவலை...

நடிகர்கள் தியாகு ; சந்திரசேகர் ; பழம்பெரும் நகைச்சுவை நடிகர் தங்கவேலு போன்றோர் பேசுவார்கள்... யார் வேண்டுமானாலும் இயக்கத்தை விட்டு போகலாம். ஆனால் தலைவரை விட்டு நாங்கள் எப்பொழுதும் போகமாட்டோம்னு பேசுவாங்க... வைகோ & ஜெயலலிதா வ தாக்கி பலரும் பேசுவாங்க..

மாலையில் பொது உடமை தோழர்கள் ; மருத்துவர் ராமதாசு (அப்ப அவரு டாக்டர்); மூப்பனார் எல்லாரும் பேசுவாங்க.. ஆட்சிய அமைச்சுட்டமாதிரியே எல்லாரும் பேசுவாங்க.... "நம்ம கூட்டணி தான் வெற்றி பெருவோம்னு எல்லாரும் ஓய்வு எடுக்க கூடாது. ஊழல் அரசி ஜெயாவ வீழ்த்த எல்லாரும் கடுமையா போராடணும்"னு ராமதாஸ் பேசுவாரு... கடைசியா.. கலைஞர் பேசுவாரு விசில் காத கிழிக்கும்... பேச ஆரம்பிச்ச இரண்டு நிமிசத்துல தூங்கிட்டேன். மாநாட்டுக்கு வர்ற பலருக்கும் இது ஒரு கேளிக்கை அவ்வளவு தான்.. கொள்கை விளக்கம்  போன்ற தக்காளிகள் எல்லாம்  செல்லுபடி ஆகாது.

இப்ப எல்லா கட்சிகளும் இப்ப திருப்பு முனை மாநாடு நடத்துறாங்க... வண்டி திரும்புற இடத்துல மாநாட்ட வச்சுட்டு, திருப்புமுணை மாநாடுன்னு சொல்லுறாங்க... நாளைக்கு கூட சோனியாவும் கருணாநிதியும் சேர்ந்து சென்னைல ஒரே மேடைல பேச போறாங்களாம்... அரசியல் திருப்பு முணை மாநாடாம்... எங்க நடக்குது... தீவு திடல்ல... கடல  பாக்கவந்தவன எல்லாம் மாநாட்டுக்கு வந்த மாதிரி காட்டலாம்...

முன்னமாதிரி விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லாம் இப்ப இல்ல... தமிழனா வேடம்போட்டுகிட்டு திரிவடுக குஞ்சுகள் வரலாம்... பிரியாணிக்கும் குவாட்டருக்கும் சிலர் வரலாம்... பிகார் ல இருந்து வந்திருக்கவங்கள கூட உட்கார வச்சு கூட்டம் கூடினதா காட்டலாம்... பழைய திரைக்கதை வசனம் எல்லாம் இப்ப ஓடாது...

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 41

வங்கி ஊழியர்கள் என்றாலே நமக்கு இல்லக்காரம் தான். ஒவ்வொரு நாள் இறுதியிலும் கணக்கு Tally ஆகவில்லை என்றால் அவ்வளவு தான்..  வட்டி விகிதம் குறைக்க படுகிறது என்று அறிவிப்பு வந்தால் அவர்களிடம் சென்று தான் மல்லுக்கட்டுவோம். ஆனால் அவர்களுக்கு முடிவு செய்யும் அதிகாரம் இருக்காது..  சில காலத்துக்கு முன் கூட LPG மானியத்துக்காக மற்றும் இன்ன பிற காரணங்களுக்காக, அனைவருக்கும் வங்கி கணக்கு துவக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டபோது திடீர் என்று வேலைப்பளு அதிகமானது...

வங்கிகளில் வேலைக்கு சேருவதற்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு மருத்துவ சோதனை செய்யும்போது, கர்ப்ப பரிசோதனை செய்யகூடாது என்பது விதி. ஆனால் இத்தனை ஆண்டுகள் ஆன பின்னும் பல வங்கிகள் இதனை நடைமுறை படுத்தவில்லை.

தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு இருப்பதை விட அரசாங்க பணியில் இருப்பவர்களுக்கு தான் அரசியல் குறுக்கீடுகள் அதிகம்...

நல்ல திட்டங்கள் செயல்படுத்தபட்டால் அதனால் வரும் வாழ்த்துகள் முதல்வர் /அரசியல்வாதியை அடையும். அவப்பெயர் அனைத்தும் அரசு ஊழியரை சாரும்.  முதல்வருக்கு தெரியாம அரசு அதிகாரிகள் செஞ்சது....

போலிஸ் என்று அறியப்படும் காவல்துறை நண்பர்கள் படும் பாடு சொல்லி மாளாது : ஊர்வலங்களுக்கு பந்தோபஸ்த் கொடுக்க செல்ல வேண்டும். உங்களோடு பணிபுரியும் பெண் காவலரை ஊர்வலத்துக்கு வரும் கயவர்கள் கிண்டல் செய்வார்கள். அந்த பெண் காவலரிடம் கயவர்கள் முறைதவறி நடப்பார்கள். அந்த கயவர்களை அந்த இடத்திலேயே நெத்தி பொட்டில் சுட்டு கொல்ல வேண்டும் என்று உங்களுக்கு தோன்றும். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஏதாவது நடவடிக்கை எடுத்தால் ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுப்பதாக புகார் எழும். மனித உரிமை ஆணையம் வரும். ஆனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் காவலருக்காக எந்த ஆணையமும் வராது.

எல்லாத்தையும் பொறுத்துக்கலாம். ஆனா, "அரசாங்கம்  நமக்காக எவ்வளோ சலுகை பண்ணுது. நாம ஒழுங்கா வேலை செய்யணும்." அரசு ஊழியரா சினிமா படத்துல நடிக்குற நடிகர் டெல்லி கணேஷ் வந்து வசனம் பேசுவாரு பாருங்க...

மணல் கொள்ளையில் ஈடுபடும் சமூக விரோதிகளை பிடிக்கும் அதிகாரிகளுக்கு நாம் துணையாக நின்றிருக்கிரோமா?


பல்வேறு சிக்கல்களுக்கு இடையில் பொறுப்புணர்ந்து ஒழுக்கமாக வேலை செய்யும் ; மக்களால் கை விடப்பட்ட அரசு ஊழியர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துகள்.

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 40

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 40

தீயணைப்பு மற்றும் மின்துறையில் வேலை பார்ப்பவர்கள் பற்றி சொல்லவேண்டியது இல்லை. திட்டமிட்ட விடுமுறையை கூட கடைசி நேரத்தில் ரத்து செய்யவேண்டி வரும்.

உங்களின் கீழதிகாரியின் இயங்குதிறன் குறித்து கேள்விகேட்க முடியாது. கேள்வி கேட்டால் அது எப்படி வேண்டுமாலும் திரும்பலாம். பலர் சிறப்பாக இயங்கினாலும் சிலர் சிறப்பாக இயங்கவில்லை என்றால் ஒட்டுமொத்த நிறுவனத்தின் மீதும் கெட்ட பெயர் உண்டாகும். BSNL சேவை குறைபாடு குறித்து பேசாதவர்களே இல்லை என்று சொல்லலாம். ஆனால் பெருமழை வெள்ளம் சென்னைக்கு வந்தபோது அந்த நிறுவனத்தின் சேவை தொய்வின்றி இருந்தது. அடிக்கடி கோளாறு ஏற்ப்படுகிறது என்று அலுவலகத்தில் கேட்டால், களத்தில் பனி செய்பவர்கள் சரியில்லை என்று சொல்லுவார்கள். ஆனால் களத்தில் வேலை செய்பவர்களுக்கு தான் அதிக வேலை பளு. தனியார் நிறுவனத்திடம் கையூட்டு பெற்றுக்கொண்டு அந்த துரையின் அமைச்சர் வாய்மொழி உத்தரவு போடுவார். அதனை செயல்படுத்தவில்லை என்றால் அந்த ஊழியரின் நிலைமை அவ்வளவு தான். அமைச்சர் / நிறுவனத்தின் மீதான குறையை நாம் கடைநிலை இடைநிலை ஊழியர்களிடம் தான் காட்டுவோம்.

வெள்ளம் / பூகம்பம் போன்ற இயற்க்கை சீற்றத்தால் வேறு மாநிலங்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு உதவுவதற்காக சம்பளத்தில் இருந்து ஒரு நிதி தரவேண்டுமென்று அரசு ஊழியர் சங்கத்தில் முடிவாகும். அதே நிவாரண நிதிக்காக உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்திலும் வசூல் செய்வார்கள். இரெண்டுக்கும் நீங்கள் தான் பணம் தரவேண்டும்.

தனியார் நிறுவனங்களில் ஒவ்வொருவரின் திறமையின் அடிப்படையில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு இருக்கும். ஆனால் அரசாங்க வேலை என்றால் மொத்த batch க்கும் கிடைக்கும் சில நேரங்களில் விரைவாகவும் பல நேரங்களில் காத்திருப்புக்கு பின் கிடைக்கும்... பதவி உயர்வுக்காக நீதிமன்றம் சென்றவர்கள் பலர். சத்தம் போடாமல் தங்கள் உரிமையை விட்டு கொடுத்தவர்கள் பலர்.

மாநகர பேருந்து ஓட்டுனர்கள் / நடத்துனர்கள் என்றாலே நமக்கு ஒரு வித எரிச்சல் மனோ நிலை தான். போதிய ஓய்வு கிடைக்கிறதா அவர்களுக்கு... அவர்கள் போராட்டம் செய்தால் நமக்கு கோபம் வருகிறது. வழியில் ஒரு மூதாட்டி பேருந்தை நிறுத்த சொன்னால்... நிறுத்தினாலும் குத்தம் நிருத்தலைனாலும் குத்தம்...

அண்ணா சாலையில் (மேம்பால உச்சியில்) சில வருடங்களுக்கு முன்னாள் ஒரு விபத்து... உடனே ஓட்டுனர் அலைபேசியில் பேசிக்கொண்டே ஓட்டியதால் தான் விபத்து ஏற்ப்பட்டது என்று செய்தி வெளியிட்டார்கள்... விசாரணை நடைபெற்றது ; துறை ரீதியான உதவிகள் கிடைக்க வில்லை... இறுதியாக ஓட்டுனர் இருக்கை பழுதாக இருந்ததால் விபத்து நடந்தது என்று தெரியவந்தது... பேருந்தை வாங்கும் போதே அதற்க்கான பராமரிப்பு பணிகளுக்கு ஒப்பந்தம் போடாமல் விட்டுவிடுகிறார்கள்... அப்போதுதான் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு குறைந்த விலைக்கு விற்க முடியும்...