தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 15

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 15

அவங்களாம், தான் படிக்கலைனாலும் மத்தவங்க படிக்கணும்னு நினச்சாங்க. மதிய உணவு திட்டம் கொண்டு வரலையா? இன்னைக்கு பல மாநிலங்கள்ல அத செயல் படுத்துறாங்களே. ஏன் அமெரிக்கால கூட இந்த திட்டத்த செயல்படுத்துராங்களே?  

முதல்ல நாம ஒன்ன புரிஞ்சுக்கணும் மதிய உணவு திட்டம் எப்ப எப்படி எதனால செயல்படுத்தப்பட்டது. உணவு பதப்படுத்துதல் துறைல சில நாடுகள் அப்ப தான் நிறைய முயற்சிகள் எடுத்துகிட்டு இருந்தாங்க. அத யார் மூலமா சோதனை செய்யுறது? பூனை எலி மட்டும் போதாது மனுசனும் வேணும். அந்த நாட்டு மனுசங்க மேல சோதனை செய்ய முடியாது. வளரும் நாடுகள்ல தான் அத செய்ய முடியும். இருக்கவே இருக்கு வளரும் நாடுகள். 1925 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் மதராஸ் நகராட்சியிலும் 1930 ஆம் ஆண்டு பிரெஞ்சு நிர்வாகத்தால் புதுச்சேரியிலும் அறிமுகபடுத்தபட்டது. காங்கிரஸ் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது கிடையாது.


நாட்டின் முதல் மற்றும் இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்துல கல்விக்கு சிறப்பான இடம் தரணும்னு நினச்சாங்க. அதுக்காக நிதி ஒதுக்கி சில பல திட்டங்கள செயல் படுத்தினாங்க. சில மாநிலங்கள் அத நல்லா பயன்படுத்தினாங்க. சில மாநிலங்கள் கொஞ்சம் பின்தங்கினாங்க.

1939 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் முதல்வரா திரு. ராஜாஜி இருந்தப்ப 3-5 வகுப்புல படிக்குற தாழ்த்தப்பட்ட மாணவிகள் 3 மணி நேரம் பள்ளிக்கூடத்துக்கு வந்தா போதும். மீதி நேரம் வீட்டுல அவங்களோட அம்மாவுக்கு ஒத்தாசையா இருக்கணும். 1949-50 குமாரசாமி ராஜா முதல்வரா இருந்தப்ப 10 தாலுக்காக்கல்ல shifts என்று சொல்லப்படும் பகுதி நேர வேலை முறை பள்ளிக்கூடத்துல கொண்டுவரப்பட்டது.

1951 புள்ளிவிபரப்படி மதராஸ் மாகாணத்தின் எழுத்தறிவு விகிதம் 20.86%. போதிய நிதி இல்லாததால ஆசிரியர் மாணவர் விகிதமும் சரியா இல்ல. அதுமட்டும் இல்லாம படிச்சவங்களுக்கு வேலைவாய்ப்பும் சரியா கிடைக்கல. அதனால இடை நிற்றல் அதிகமா இருந்தது. இத சரி செய்யுறதுக்காக வருடா வருடம் ஒரு கோடி ரூபா ஒதுக்கணும்னு திட்டம் போட்டாங்க ஆனா 1950-51 ல 5 லட்சம் ரூபா மட்டும் தான் ஒதுக்குனாங்க.

1953 ல திரு. ராஜாஜி அவர்கள் திரு. காந்தியடிகளோட தற்சார்பு கொள்கையை அடிப்படையா வச்சு ஒரு கல்வி திட்டத்த மீண்டும் கொண்டுவந்தாரு. அதன்படி மாணவர்கள் காலைல பள்ளிக்கூடத்துல படிக்கணும் ; மதியத்துக்கு மேல அவங்க வீட்டுல அவங்க பெத்தவங்க என்ன வேலை செய்யுறாங்லோ அதுக்கு கூட மாட ஒத்தாசையா இருந்து அந்த தொழில கத்துக்கணும். இதனால வேலையின்மை விகிதம் குறையும்னும் ; நல்ல வேலை கிடைக்குற வரைக்கும் ஏதாவது ஒருவேலைய பாக்கலாம்னும் காரணம் சொன்னாரு. ஆனா சாதி கட்டமைப்பு கெடாம இருக்கதுக்காக இந்த திட்டத்த கொண்டுவந்திருக்கதாவும் அந்த திட்டத்த குலக்கல்வி திட்டம்னும் எதிர்கட்சிகள் விமர்சனம் செஞ்சாங்க.

No comments:

Post a Comment