Showing posts with label மொழி. Show all posts
Showing posts with label மொழி. Show all posts

திராவிட கம்பெனியின் கோழைத்தனம்

இந்த புகைப்படத்தை பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?




இந்த படத்துக்கு பின்னால் இருக்கும் அரசியல் என்று சொல்லப்படும் திராவிட கம்பெனியின் கேப்பமாரித்தனம் புரிகிறதா?

சில நாட்களுக்கு முன்னாள் நடந்த ஒரு தொலைகாட்சி விவாத நிகழ்ச்சியில் ஒரு திராவிட கம்பெனியின் முதலாளி சொன்னார், "தமிழ் மொழியில் அறிவியலே கிடையாது"

தன் முதலாளி தவறு செய்துவிட்டார் என்பது புரிந்தாலும் கூட,  தன் தாய் மொழியை இழிவுபடுத்திவிட்டார் என்பது புரிந்தாலும் கூட, அந்த திராவிட கம்பெனியின் அல்லக்கைகளுக்கு தன் முதலாளியின் தவறை எப்படி நியாயப்படுத்துவது இந்த சறுக்கலை எப்படி சரிசெய்வது; தங்கள் முதலாளியை எப்படி காப்பாற்றுவது என்று குழப்பமாக இருந்தது.

உடனே, "தமிழர்கள் washing machine ; fridge கண்டுபிடித்தார்களா? தமிழில் அறிவியல் கிடையாது", என்று தங்களுடைய முதலாளிக்கு சப்பை கட்டு கட்டினார்கள்.

அறிவியல் என்றால் என்ன; தமிழர்கள் அறிவியலில் எப்படி சிறந்தவர்கள் என்பதனை உதாரணங்கள் மூலமாக எடுத்துரைத்தார்கள் தமிழ் ஆர்வலர்கள்.

பதில் கூற முடியாத திராவிட கம்பெனி இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் மூலம் சொல்லவருவது என்ன? ஆமாம் தமிழ் மொழியில் அறிவியல் இல்லை. ஆங்கிலத்தில் தான் அறிவியல் இருக்கிறது. அதனால் என்ன வந்தது? எனக்கு தமிழ் தான் உயிர். என்று ஒரு தமிழன் கூறுவதாக தயாரித்திருக்கிறார்கள்.
அறிவியல் பூர்வமாக தர்க்கம் செய்ய இயலாத திராவிட கம்பெனி, தன்னை ஒரு தமிழனாக அடையாளப்படுத்திக்கொண்டு, தமிழனை அறிவியல் பூர்வமாக தர்க்கம் செய்ய தயாராக இல்லாதவன் போலவும் உணர்வுப்பூர்வமாக வெத்து முழக்கம் போடுபவனாகவும் அடையாளப்படுத்துகிறது.


அறிவியல் பூர்வமாக தர்க்கம் செய்யும் தமிழனை வெல்லமுடியாது என்று உணர்ந்த திராவிட கம்பெனியின் அல்லக்கைகள் கோழைத்தனமாக இப்படி செய்திருக்கிறார்கள்.




உலகம் முழுவதும் தங்கள் ஆட்சி அதிகாரத்தை நிறுவ நினைத்த ஆங்கிலேயர்கள், அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் அல்லது கட்டுப்படுத்த முடியாது என்று நினைத்தார்களோ அந்த இனக்குழுக்களை
"CT ACT" (குற்றபரம்பரை சட்டம்) மூலம் கொடுமை படுத்தினார்கள். இதன் ஒரு பகுதியாக, அந்த சட்டத்தை தொடர்ந்து வைத்திருப்பதற்க்காக, ஜல்லிக்கட்டை ஏற்பாடு செய்திருந்தார்கள்.  இந்த துரோகத்தின் மூளை மூதறிஞர் ராஜாஜியுடையது.

இப்பொழுது அந்த துரோக செயலை திராவிட கம்பெனியின் அல்லக்கைகள் மெருகேற்றி செய்திருக்கிறார்கள். தன்னை தமிழன் என்று போலியாக அடையாளப்படுத்திக்கொண்டு திராவிட கம்பெனி செய்யும் இந்த கோழைத்தனமான செயல்களை நாம் முறியடிக்க வேண்டும்.

வார்த்தைகள்

"அவாள் ; இவாள்" ஆகிய வார்த்தைகளை தமிழ் அகராதியில் சேர்க்க வேண்டும்.

"அவன் /அவள் ; இவள் / இவன்" இந்த வார்த்தைகளில் பாலின பாகுபாடு ; பெரியவர் சிறியவர் என்ற பாகுபாடு மறையும்...


27 மார்ச்

வரவேண்டும் ஒற்றுமை

//மாநில மொழிகளில் உயர் கல்வி நுழைவு தேர்வு - திரு. ராமதாஸ் கோரிக்கை//

அவரவருக்கு தோன்றும் காரணங்களுக்காக திரு. திருமாவின் தம்பிமார் திரு. சீமானை தாக்குவதும். சீமானின் தம்பிமார் திருமாவை தாக்குவதும். அதே போல திரு ராமதாசையும் திரு. வைக்கோவையும் திரு.கருணாநிதியையும் செல்வி. ஜெயலலிதாவையும் தாக்குவது முன்புபோல் தொடரட்டும்.

ஆனால் மாநில மொழிகளில் உயர் கல்வி நுழைவு தேர்வு என்ற விடயத்தில் இவர்கள் மட்டுமல்ல கொல்லைப்புரமாகவும் நேரடியாகவும் எல்லா இடங்களிலும் உடுருவும் ஹிந்தி மொழியை தாண்டி தங்கள் மாநில மொழி அடையாளத்தை காக்க நினைக்கும் அனைத்து மாநில தலைவர்களையும் இணைத்து வெற்றி பெற வேண்டும்.

தமிழ்

ஆமா அது என்னடா ஜனவரின்னு போட்டா இங்கிலிசு..சனவரின்னு போட்டா தமிழா???
உங்க தமிழ் பற்றுல தீயை வைக்க... - சகோதரர் பூபதி.

சனவரி என்று போட்டுவது தப்பு இல்லை. ஆம் அது ஆங்கில மாதம் தான்.

ஆங்கில மாதத்தை ஆங்கில எழுத்தில் எழுதும்போது குழப்பம் இல்லை. தமிழில் எழுதும்போது தமிழ் எழுத்துக்களை பயன்படுத்துவது என்ன தப்பு.

நம் பெயரை பிரெஞ்சுக்காரன் எழுதினால் அவன் எழுத்தில் எழுதுவான். என்ன உச்சரிப்பு என்பதற்கு சிலகுறியீடுகள் இருக்கும். ஆனால் கண்டிப்பாக நீங்கள் தமிழர் என்பதால் தமிழ் எழுத்தையோ அல்லது வழக்கில் இல்லாத மொழியின் எழுத்தை கடன்வாங்கியோ கண்டிப்பாக எழுத மாட்டான்.

உண்மையானா தமிழ் மாதத்தின் பெயரை பதாகைகளில் எழுதினால் சிறப்பாக இருக்கும். அதை நாம் தான் செய்யவேணும்.

கலைஞர் கருணாநிதி பேரன் தமிழ் பெயர் வைத்தால் ராமதாசின் பேத்தி தமிழ் வழிக்கல்வி பயின்றால் நானும் என் பிள்ளையை தமிழ் வழி கல்வியில் சேர்த்துவிடுவேன். தமிழ் பெயர்வைப்பேன் என்று சொன்னால்... வேறு கடுமையான வார்த்தை கொண்டும் கேள்வி கேட்கமுடியும்..

இருந்தாலும் மென்மையான வார்த்தையில் கேட்கிறேன். உங்கள் மூளை கருணாநிதி அல்லது ராமதாசு மண்டையில் இருக்கிறதா இல்லை அவன் செய்தால் அதுபோலவே நானும் செய்வேன் என்று சொல்ல நாம் என்ன குரங்குகளா?



28 ஜனவரி
posted in Facebook

நடைமுறை மொழி


கடந்த வெள்ளிகிழமை கலைஞர் தொலைக்காட்ச்சியில் திரு. மிகு.சு.ப. வீரபாண்டியன் அவர்கள் பேசினார். "கடவு சீட்டு மற்றும் பிறந்த நாள் சான்றிதழ் ஆகியவற்றில் ஆங்கில ஆண்டு தான் குறிப்பிடப்படுகிறது. மற்றுமொரு ஆண்டு பிறக்கிறது இன்று நாம் சில உறுதிமொழிகள் எடுத்துக்கொள்வோம்..."

இதில் எனக்கு ஒரு ஐயம். கடவு சீட்டு மற்றும் பிறந்தநாள் சான்றிதல்களில் ஆங்கிலத்தில் தான் பெயர் குறிப்பிடப்படுகிறது. எனவே இனிமேல் நம் பெயரை தமிழில் எழுதலாமா? கையெழுத்து தமிழில் போடலாமா? தமிழில் பேசலாமா? இல்லை கூடாதா?

தனிமனித தாக்குதலில் ஈடுபடாமல் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

2 ஜனவரி  posted in Facebook


ஆறுதல்





மும்பையிலிருந்து கிளம்பும் அல்லது சென்றடையும் விமானங்களில் முதலில் மராத்தியிலும் பின்னர் ஆங்கிலத்திலும் அதன்பின்னர் ஹிந்தியிலும் அறிவிப்பு செய்கிறார்கள். 

அயலகத்தில் தமிழுக்கு கிடைத்திருக்கும் மரியாதை மனதுக்கு நிறைவாக இருக்கிறது.

2 ஜனவரி posted in Facebook.