Showing posts with label நாட்டு நடப்பு. Show all posts
Showing posts with label நாட்டு நடப்பு. Show all posts

OPS தமிழரா ?

OPS தமிழரா என்ற சூடான விவாதம் நடைபெறுகிறது.


OPS விடயத்துக்கு போகும் முன்... நவீன் பட்நாயக் மற்றும் கருணாநிதி ஆகியோரை பற்றி ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தால் உண்மை விளங்கும்.
நவீன் பட்நாயக் அவர்களுக்கு, அவர் ஆளும் மாநிலத்தின் ஆட்சி மொழியில் புலமை கிடையாது (ஒரியா). ஆனால் அந்த மாநிலத்து மக்களுக்கு உண்மையாக இருக்கிறார். இங்கே கருணாநிதி அவர்களுக்கு அவர் வாழும் மாநிலத்தின் ஆட்சி மொழியில் புலமை உண்டு ஆனால் மக்களுக்கு உண்மையாக இருக்கிறாரா என்றால் இல்லை என்ற பதில் தான் அவருடைய வாரிசுகளிடமிருந்தே வரும்.  




மொழிப்புலமை என்பது அவசியம் என்றாலும் கூட, உயர்வு வேண்டுமென்றால் தூய குருதியும் உணர்வும் வேண்டும்.

திரிவடுக கட்சிகளில் இருக்கும் எவருக்கும் அந்த உணர்வு இருக்க முடியாது. கட்சி ; தலைமை என்ற உணர்வே மேலோங்கி இருக்கும். "என் உயிர் தோழன்" படத்தில் வரும் தொண்டனைப்போல.

இருந்தாலும் கூட, அ.தி.மு.க. வில் இருப்பவர்களை ஏன் தமிழர்கள் என்று சொல்லுகிறோம்?

என்னுடைய தெரிவு யார் என்றால், முதல்வர் பொறுப்புக்கு திரு. Jayakumar. சுனாமி சமயத்தில், இறங்கி வேலை செய்ததால் இவரை சொல்லுகிறேனா? இல்லை. இவரால் கட்சிக்கு ஒரு தேர்தலில் வெற்றி பெற்று தர முடியுமா என்றால், சந்தேகம் தான்.

ஆனால், இவர் வந்தால், மீனவர் விடயத்தில் தீர்க்கமான ஒரு முடிவை எடுப்பார் என்ற திடமான நம்பிக்கை இருக்கிறது. கடிதங்கள் எழுதிக்கொண்டிராமல் காலத்தில் நிச்சயம் குதிப்பார். ஒருவேளை மீனவர் யாராவது தவறு செய்தால் உரிமையோடு கடிந்து அவர்களை வழி நடத்துவார்.


கட்சி பணிக்கு / பொதுச்செயலாளர் பணிக்கு, திரு. செங்கோட்டையன் அவர்கள் சிறப்பான தேர்வாக இருக்கும். ஒருங்கிணைக்கும் பணியில் தேர்ந்தவர் என்ற காரணத்தினால் தான் தேர்தல் பரப்புரைகளுக்கான திட்டமிடும் பொருப்பு இவர் வசம் பல முறை வந்தது.


சரி நத்தம் ; தம்பிதுரை ; பொன்னையன் போன்றவர்கள்? அவரவர் வியாபாரத்தை அவரவர் கவனித்துக் கொண்டு இருப்பது நலன் பயக்கும்.

சரி மீண்டும் தலைப்புக்கு வருவோம். எந்த அடிப்படையில் இவர்களை நம்புவது அல்லது தமிழர்கள் என்று ஏற்றுக்கொள்வது? இதற்கான பதிலை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சில வருடங்களுக்கு முன்னர் சொல்லி இருக்கிறார்.

2001 ஆம் ஆண்டு பொது தேர்தலில் "இலை மலர்ந்தால் ஈழம் மலரும்" என்று சொன்னார். இன்றைக்கு கேட்கப்படும் எல்லா கேள்விகளையும் அன்று கவிதாயினி தாமரை எழுப்பினார்.

செல்வி Jayalalithaa, ஈழ போராட்டத்துக்கு எதிரானவராயிற்றே அவரை எப்படி நம்புவது?

பன்நெடுகாலமாக கருணாநிதி, தமிழின தலைவர் வேடத்தை பூண்டிருந்தார். இன்றைக்கு அந்த வேடத்தை தரிக்க, அன்று செல்வி. JJ தயாரானார். கொள்கை முரண்பாடு இருந்த போதும் அவர் அந்த முடிவை எடுக்க காரனம் என்ன?

1) புலிகளை வீழ்த்திவிட்டோம்.
2) கருணாநிதி மீதான நம்பகத்தன்மை சிதைந்து விட்டது.
3) ஈழத்துக்கான சந்தை அப்படியே இருக்கிறது. அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

சரி 2011 தேர்தலில் வென்றபின் பழைய குருடி கதவை திரடி என்று இருந்திருக்க முடியும். ஆனால் அப்படிச் செய்யவில்லை. அதற்கு காரனம் என்ன?

1) MGR க்கு மக்களிடம் தலைமுறைகள் தாண்டி நிரந்தர செல்வாக்கை பெற்றுத்தந்தது ஈழம் தானே. நாமும் உண்மையாக நடந்துகொண்டால் நாம் நிரந்தர முதல்வராக இருக்கலாம்.

2) அகவை 60 கடந்துவிட்டோம் இனிமேலாவது, பரிவானவர் இவர் என்ற பெயர் எடுக்க ஆசைபட்டிருக்கலாம். புண்ணியம் தேடலாம் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கலாம்.

3) அதோடு சேர்ந்து, யாருமற்ற நம்மீது இவ்வளவு பரிவு காட்டுகிறார்களே. நாமும் பரிவு காட்டலாம் என்ற என்னமும் வந்திருக்கலாம்.

தூய்மையான அன்பும் பரிவும் ஒரு மனிதனை நல்வழிப்படுத்த முடியும்.

கோமாளி புலிக்கேசி ஒருகட்டத்தில் உணருவது போல, அ.தி.மு.க. வில் இருக்கும் இவர்களும் உணருவார்கள் என்ற எண்ணம் தான் இவர்களை இன்றைக்கு ஆதரிக்க நமக்கு இருக்கும் காரணமாக இருக்க முடியும்.

இப்போது இருக்கும் வாய்ப்பையும் தவர விடுவதில் நியாயம் இல்லை. உள்ளத்தூய்மையும் உறுதியும் கொண்ட ஒரு முழுமையான ஒரு தமிழன் / தமிழச்சி தலைமை பொறுப்புக்கு வரும் வரை வேறு வழிகள் எனக்கு தென்படவில்லை.

தேர்தலில் தோல்வியை தழுவிய பிஜேபி மற்றும் திரிவடுக காட்சிகள் இப்போது கொல்லைப்புறமாக அதிகாரத்தை கைப்பற்ற சூழ்ச்சி செய்கிறார்கள். அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வி உங்களுக்கு வருமேயானால்...

நெடுஞ்செழியன் ; திருநாவுக்கரசு ; STS ; பண்ருட்டியார் ; இராம. வீரப்பன் என்று பலரையும் தாண்டி தான் செல்வி JJ இங்கு காலூன்றினார். நாம் ஒன்றும் கர்நாடகத்துக்கு சென்றோ அல்லது ஆந்திராவுக்கு சென்றோ யாரிடமிருந்தும் எதையும் தட்டிப்பறிக்கவில்லை.

மன்னிப்பு கடிதம் / பிறழ் சாட்சி


சம்பவம் ஒன்று : சுதந்திர போராட்ட காலத்தில் முன்னாள் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் ஒரு போராட்டத்தின் போது பிறழ் சாட்சியாக செயல்பட்டது குறித்தும் மன்னிப்பு கடிதம் கொடுத்தது குறித்தும் துரோகம் செய்தது குறித்தும் இப்பொழுது பரவலாக சமூக வலை தளங்களில் வளம் வருகிறது.

மண்ணிப்பு கடிதம் கொடுத்து காட்டிக்கொடுத்த ஆளுக்கெல்லாம் விருதா அப்படீன்னு பேசுறாங்க, வாஜ்பாய் அவர்களுக்கு பாரத ரத்னா விருது கொடுத்திருப்பதை குறித்து பேசும் போது.

சம்பவம் இரண்டு : 

தேச விடுதலைக்காக போராடி தூக்குமர நிழலில் சாவை எதிர்நோக்கிக் காத்திருந்த மாவீரன் பகத் சிங் தன் சகோதரனுக்கு எழுதிய நீண்ட கடிதம் நூலாக வெளியிடப்பட்டிருந்தது. தோழர் ஜீவா இதைத் தமிழில் "நான் ஏன் நாஸ்தீகனானேன்" என்ற நூலாக மொழி பெயர்க்க, ஈ.வெ.ரா, வெளியிட்டார். இதற்காக இருவரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கபட்டனர். சர்கஸில் இருந்து தப்பி ஓடிய ஒரு கொடிய விளங்கினைச் சங்கிலியிட்டு நாற்புரமும் இழுத்துப் பிடித்துக் கொண்டு எச்சரிக்கையாகக் கூண்டுக்கு நடத்திச் செல்வது போன்று ஜீவாவை போலீசார் சங்கிலியிட்டு இழுத்துச் சென்றனர். கோவை ஜில்லாவில் ஒரு சப்ஜெயில் பாக்கியில்லாமல் அவர் இழுத்தடிக்கபட்டார். 

ஒரு நூல் எழுதியதற்காக இம்மாதிரிக் கொடுமையைத் தமிழகத்தில் அனுபவித்தவர் வேறு எவருமிலர். ஜீவாவுக்கு இழைக்கப்பட்ட இந்த கொடுமை, தமிழக இளைஞர்கள் மத்தியிலே பெரிய கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியது.   .

பின்னர் இ.வெ . ராமசாமி நாயக்கர் மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டு சிறையிலிருந்து வெளியே வந்ததும், ஜீவாவை மன்னிப்புக் கடிதம் கொடுக்க நிர்ப்பந்தித்ததும் இருவருக்கும் இடையில் விரிசலை ஏற்ப்படுத்தியது.

சம்பவம் மூன்று :

தோழர் நல்லக்கண்ணு அவர்களின் துணைவியார் திருமதி ரஞ்சிதம் அவர்கள் பேசுகிறார், "1995 ஆம் ஆண்டு தென் தமிழகத்தில் அரசியலில் சாதி புகுந்தது. சாதிக் கலவரம் தீயாக பரவியது. அது ஓட்டபிடாரம் தாலுகாவிலும் படர்ந்தது. தேவமார்களுக்கும் தாழ்த்தப்பட்டவங்களுக்குமாக இந்த மோதல் திட்டமிட்டு தூண்டி விடப்பட்டது. ஆண், பெண்,  வயது முதிர்ந்தவர், சிறுவர் என்ற பாகுபாடுகள் பார்க்காமல் இரண்டு தரப்பிலும் கொலைகள் விழுந்தன. இந்த சூழ்நிலையில் மருதன்வாழ்வில் இருக்கவேண்டாம் என்று எங்கள் பெற்றோரை உறவினர் அனைவரும் சொன்னோம். என் தம்பி தூத்துக்குடி வந்துவிடும்படி பெற்றோரை அழைத்தான். 

அதற்க்கு என் அப்பா, இந்த ஊருக்கு நான் எவ்வளவோ பாடுபட்டிருக்கிறேன். இங்கிருக்கும் தலித் மக்களுடன் சாதி பேதமின்றி பழகியிருக்கிறேன். வேற ஊர்க்காரர்கள் என் மீது துரும்பை போட்டால் கூட நம் ஊர் மக்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட மக்களிடமிருந்து நான் விலகிச் சென்றால், நான் இந்த ஊர் மக்களை நம்பாதவன் என்று எண்ண வாய்ப்பு ஏற்ப்பட்டு விடும். அதனால் எனக்கு ஒன்றும் ஆகாது! இந்த ஊர் தலித் மக்களைப் பற்றி உங்களை விட எனக்கு நன்றாகத் தெரியும். அவர்களோடு இரண்டறக் கலந்தவன்." என்று சொல்லி வெளியூர்களுக்குச் செல்ல மறுத்து விட்டார்.

இப்படி எண்ணம் கொண்டிருந்த என் தந்தையை 1995 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஞாயிறு பகல் 12 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்த சாதி வெறியர்கள் என் தாய் கண் எதிரிலேயே கொலை செய்து விட்டனர். எந்த சாதி முன்னேற வேண்டுமென்று என் தந்தை பாடுபட்டாரோ அந்த சாதியைச் சேர்ந்த வெறியுட்டப்பட்ட சிலர் என் தந்தையை கொன்றது வேதனைமிக்கது."
  
இந்த கொலை வழக்கு விசாரணைக்கு வந்தபோது திரு. நல்லகண்ணு அவர்கள் வேறு விதமாக சாட்சியம் அளித்தார். குற்றவாளிகள் தப்பிப்பதற்கு அவரின் சாட்சியம் ஒரு காரணம் ஆனது.

ஆதார நூல்கள் : 

1. வந்த வினாக்களும் தந்த விடைகளும் : தோழர் நல்லகண்ணு.
  ஆசிரியர் கே. ஜீவபாரதி. 
2. ஜீவா என்றொரு மானுடன் - ஆசிரியர் பொன்னீலன்.
3. ஜீவா - ஆசிரியர் சா. இலாகுபாரதி.

திராவிட கம்பெனியின் கோழைத்தனம்

இந்த புகைப்படத்தை பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?




இந்த படத்துக்கு பின்னால் இருக்கும் அரசியல் என்று சொல்லப்படும் திராவிட கம்பெனியின் கேப்பமாரித்தனம் புரிகிறதா?

சில நாட்களுக்கு முன்னாள் நடந்த ஒரு தொலைகாட்சி விவாத நிகழ்ச்சியில் ஒரு திராவிட கம்பெனியின் முதலாளி சொன்னார், "தமிழ் மொழியில் அறிவியலே கிடையாது"

தன் முதலாளி தவறு செய்துவிட்டார் என்பது புரிந்தாலும் கூட,  தன் தாய் மொழியை இழிவுபடுத்திவிட்டார் என்பது புரிந்தாலும் கூட, அந்த திராவிட கம்பெனியின் அல்லக்கைகளுக்கு தன் முதலாளியின் தவறை எப்படி நியாயப்படுத்துவது இந்த சறுக்கலை எப்படி சரிசெய்வது; தங்கள் முதலாளியை எப்படி காப்பாற்றுவது என்று குழப்பமாக இருந்தது.

உடனே, "தமிழர்கள் washing machine ; fridge கண்டுபிடித்தார்களா? தமிழில் அறிவியல் கிடையாது", என்று தங்களுடைய முதலாளிக்கு சப்பை கட்டு கட்டினார்கள்.

அறிவியல் என்றால் என்ன; தமிழர்கள் அறிவியலில் எப்படி சிறந்தவர்கள் என்பதனை உதாரணங்கள் மூலமாக எடுத்துரைத்தார்கள் தமிழ் ஆர்வலர்கள்.

பதில் கூற முடியாத திராவிட கம்பெனி இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் மூலம் சொல்லவருவது என்ன? ஆமாம் தமிழ் மொழியில் அறிவியல் இல்லை. ஆங்கிலத்தில் தான் அறிவியல் இருக்கிறது. அதனால் என்ன வந்தது? எனக்கு தமிழ் தான் உயிர். என்று ஒரு தமிழன் கூறுவதாக தயாரித்திருக்கிறார்கள்.
அறிவியல் பூர்வமாக தர்க்கம் செய்ய இயலாத திராவிட கம்பெனி, தன்னை ஒரு தமிழனாக அடையாளப்படுத்திக்கொண்டு, தமிழனை அறிவியல் பூர்வமாக தர்க்கம் செய்ய தயாராக இல்லாதவன் போலவும் உணர்வுப்பூர்வமாக வெத்து முழக்கம் போடுபவனாகவும் அடையாளப்படுத்துகிறது.


அறிவியல் பூர்வமாக தர்க்கம் செய்யும் தமிழனை வெல்லமுடியாது என்று உணர்ந்த திராவிட கம்பெனியின் அல்லக்கைகள் கோழைத்தனமாக இப்படி செய்திருக்கிறார்கள்.




உலகம் முழுவதும் தங்கள் ஆட்சி அதிகாரத்தை நிறுவ நினைத்த ஆங்கிலேயர்கள், அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் அல்லது கட்டுப்படுத்த முடியாது என்று நினைத்தார்களோ அந்த இனக்குழுக்களை
"CT ACT" (குற்றபரம்பரை சட்டம்) மூலம் கொடுமை படுத்தினார்கள். இதன் ஒரு பகுதியாக, அந்த சட்டத்தை தொடர்ந்து வைத்திருப்பதற்க்காக, ஜல்லிக்கட்டை ஏற்பாடு செய்திருந்தார்கள்.  இந்த துரோகத்தின் மூளை மூதறிஞர் ராஜாஜியுடையது.

இப்பொழுது அந்த துரோக செயலை திராவிட கம்பெனியின் அல்லக்கைகள் மெருகேற்றி செய்திருக்கிறார்கள். தன்னை தமிழன் என்று போலியாக அடையாளப்படுத்திக்கொண்டு திராவிட கம்பெனி செய்யும் இந்த கோழைத்தனமான செயல்களை நாம் முறியடிக்க வேண்டும்.

செய்தி

காஷ்மீர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடியோ ஒளிபரப்பானபோது ; தில்லி மிருக காட்ச்சி சாலையில் நடந்த சம்பவத்தை வீடியோவில் பார்த்தபோது, பலரும் சொன்ன கருத்து, "வீடியோ எடுத்த நேரத்துல போய் காப்பாத்தலாம்ல?"

நட்பு வட்டத்தில் பலரும் பத்திரிக்கை / ஊடக துறையில் இருக்கிறார்கள்.
அவர்களுக்கான் பணி என்ன என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். இருந்தபோதிலும் சில நேரங்களில் சறுக்கல்கள் நிகழ்வதால் நினைவூட்ட இந்த பதிவு. மூன்று நிகழ்வுகளின் வாயிலாக...

நிகழ்வு ஒன்று : சில மாதங்களுக்கு முன்னாள், எழுத்தாளர் திரு. ஜெயகாந்தனுக்கு பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியை திரு. ராம் தம்பதியினர் நடத்தினார்கள் . அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதாக சொன்ன திரு. வைரமுத்து, வர இயலாத காரணத்தால் காணொளி காட்சி மூலம் பேசினார்.

அந்த நிகழ்ச்சியில் திரு ஜெயகாந்தன் மிக சுருக்கமாக பேசினார். "நிகழ்ச்சிக்கு வர இயலாவிட்டாலும், நம்மைப்பற்றி நினைத்துக்கொண்டு இருப்பவர்கள் அனைவருக்கும் ; இங்கே வந்திருப்பவர்கள் அனைவருக்கும், நன்றி வணக்கம்."

இந்த நிகழ்ச்சியை பதிவு செய்யும்போது, அவரவர் கொள்கையை புகுத்தி பலவாறாக பதிவு செய்யலாம். 

கடவுளுக்கு கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என்று எல்லோருக்கும் விருப்பம் இருக்கும் ஆனால் அந்த பேரினை ஒரு சிலர் தான் பெறுகிறார்கள் ; சிலருக்கு கோவிலுக்கு சென்று வழிபட முடிகிறது ; சிலருக்கு அங்கே செல்லமுடியவில்லை ஆனாலும் நினைவு மட்டும் அங்கேயே இருக்கிறது. ஆனால் கடவுளை பொருத்தமட்டில் வேறுபாடு பார்ப்பதில்லை. அனைவருக்கும் ஒரே மாதிரி தான் அருள் புரிகிறார். அதுபோல திரு. ஜெயகாந்தன் அவர்கள், தன் வாசகர்கள் அனைவரையும் ஒரே மாதிரி தான் பார்கிறார்.

இதையே பாரதிதாசன் பாணியில் சொல்வதென்றால், தான் பெற்ற குழந்தைகளில் ஒவ்வொருவரும் தங்கள் சக்திக்கு ஏற்றவாறு பணிவிடை செய்தாலும் தாயானவள் அனைவரையும் ஒரே மாதிரியாக தான் பார்ப்பாள். அதுபோல எழுத்தாளர் பேதம் பார்க்காமல் நடந்துகொண்டார்.


நிகழ்வு இரண்டு : இந்து மதத்தின் சிறப்பு குறித்தும் மத நல்லிணக்கம் குறித்தும் சிகாகோ நகரத்தில் நடந்த அனைத்து மத மாநாட்டில் புரட்சி துறவி விவேகானந்தர் சிறப்பாக உரையாற்றினார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் தன் உரையை எப்படி துவக்கினார் என்று கேட்டால் நாம் அனைவரும் என்ன சொல்லுவோம்? 

அனைவரும் "Ladies and Gentlemen" என்று பேசியபோது அவர்மட்டும் "Brothers and sisters of Amercia"  என்று பேசினார் என்று சொல்லுவோம். காலம் காலமாக இப்படியே சொல்லிவந்தார்கள்.  அண்மையில் நடந்த விழாவின் மூலன் நான் அறிந்துகொண்டது என்னவென்றால், அவர் "Sisters and brothers of Amercia"  என்று தன் உரையை துவக்கி உள்ளார். 

"இரெண்டும் ஒன்று தானே. என்ன வேறுபாடு?" என்று கேட்கிறீர்களா... 
இந்த தேசத்தை சேர்ந்தவர்கள், பெண்களை அடிமை போல நடத்துகிறார்கள் என்று தொடர்ந்து பரப்புரை செய்யப்பட்டு வந்துள்ளது. விதவைகள் மறுமணத்தை விவேகானந்தர் எதிர்த்தார் என்று கட்டுரை எழுதுகிறார்கள்.

நிகழ்வு மூன்று : முல்லை பெரியாறு குறித்த செய்தியை பதிவு செய்யும்  ஒவ்வொரு முறையும் "புதிய தலைமுறை" இதழ் பிழை செய்கிறது.

அந்த அணையை கட்டுவதற்கு திட்டம் தீட்டியவர் யார் என்பதை நன்றாக தெரிந்திருந்தபோதிலும் தொடர்ந்து இருட்டடிப்பு செய்துவருகிறார்கள்.

திரு. ஜான் பென்னிகுவிக் செய்த அளப்பெரிய சாதனையை யாரும் மறுக்கமுடியாது. ஆனால், ஏதோ பஞ்சம் வந்து பலரும் செத்ததற்கு பின் தான் ஆங்கிலேயர்கள்  திட்டம் தீட்டியது போல பதிவு செய்கிறார்கள். ஆனால் பஞ்சம் வருவதற்கு முன்னமே ஒரு தமிழனால் திட்டம் தீட்டப்பட்டது. 



ஒரு இடத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்ட அல்லது பிழையாக பதிவு செய்யப்படும் செய்தி தொடர்ந்து நகல் எடுக்கபடுகிறது. கடந்த செய்வாய் அன்று பெங்களுரு தீர்ப்பை பதிவு செய்தது போல. உண்மை உடனடியாகவோ அல்லது சற்று காலம் தாழ்ந்தோ வெளியில் வந்துவிடும்.
நடந்ததை, நடந்தவிதமாக ; ஒருவர் சொன்னதை, சொன்ன விதமாக பதிவு செய்வது நல்லது. நம் கருத்துக்களை புகுத்தி, செய்தியை செய்தியாக அல்லாமல் திரைக்கதை வசனமாக எழுதுவதென்பது பத்திரிகை தர்மத்தை மீறிய செயல் மட்டும் அல்ல, நம் செய்தியை படிப்பவர்களை ; நாம் நடத்தும் நிகழ்ச்சியை பார்ப்பவர்களை அவர்களின் அறிவை ஏளனம் செய்வதாக அமையும்.

நிறைவாக, செய்தியை படிக்கும் ; நிகழ்ச்சியை பார்க்கும் நம் கடமை என்ன? தொலைகாட்சி பெட்டியின்  முன்னாள் உட்கார்ந்து கொண்டு, அதை அப்படி செய்திருக்கலாம் இப்படி செய்திருக்கலாம் என்று சொல்லுவது எளிது. மெய்ப்பொருள் காண்பது அறிவு ; பொறுப்புணர்ந்து நடக்க வேண்டும் நாம்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா.

பெரியவா : ஜெயலலிதா மேல மக்கள் எவ்வளோ அன்பு வச்சிண்டிருக்கானு இப்போ நன்னா தெரிஞ்சிருக்கும். இப்பவாது சசிகலா கூட்டத்த விரட்டி அடிச்சா நன்னா ஷேமமா இருக்கலாம்.

மகாபாரதத்ல  சகுனி எப்படி கூட இருந்து குரு வம்சத்த அழிச்சானோ அதுபோல கருனாநிதியால அனுப்பிவைக்கபட்ட சசிகலா குடும்பம் தான் ஜெயலலிதாவுக்கு தெரியாம எல்லா தப்பையும் பண்ணினா.

இப்பகூட பாருங்கோ மக்கள் எவ்வளோ அமைதியா போராடுறா... இதுவே தி.மு.க. காலி பசங்கலா இருந்தா என்ன செஞ்சிருப்பா?  தினகரன் ஆபிஸ்ல வேலை செஞ்சவால அழகிரி கொளுத்துனமாதிரி எல்லாத்தையும் கொளுத்திருப்பா....

பகுத்தறிவு வியாதி : கூட இருந்தவங்க செஞ்ச தப்புக்கு அழகிரி எப்படி பொறுப்பாக முடியும். அப்படி பாத்தா தர்மபுரில மூணு மாணவிகள கொன்னது ஜெயலலிதா தானா...

நம் மனசுக்கு தோன்றுவது : "தீதும் நன்றும் பிறர் தர வாரா."  இது நம்ம எல்லாத்துக்கும் பொருந்தும்.

எங்கள் அலுவலகத்தில் இருக்ககூடிய சில பெரியவாள் மற்றும் பகுத்தறிவு வியாதிகளிடம் நடந்த உரையாடலின் ஒரு பகுதி..

Power Cut நல்லது...

சினப்பயலா இருக்கும்போது ராத்திரீல எப்பவாச்சு Power cut ஆகும். அந்தமாதிரி நேரத்துல பயகலாம் சேர்ந்து ஒண்ணா விளையாடுவோம். 

பெரும்பாலும் பேய் கதைகள் சொல்லி விளையாடுறது. அதுல சில போட்டிகள் வச்சுக்குறது. யார் அதிக நேரம் கதை சொல்லறது... அதிக நேரம் பயப்படாமல் இருட்டில் இருப்பது... இப்படி...

"ஒருமுறை எங்க ஊருல ஆயாவோட ராத்திரி ரோட்டுல போய்கிட்டு இருந்தேனா, ஒரே இருட்டு அப்ப சுடுகாட்ட தாண்டி போகும்போது ஒரு குரல் அழுகுற மாதிரி கேட்க்கும். என்ன சத்தாம் ஆயான்னு கேட்டா, எங்க ஆயா ஒரு கத சொல்லுச்சு" இப்படி ஆரம்பிச்சு கத சொல்லுவாங்க பசங்க. சுத்தி நின்னு கதை கேட்ப்போம். ஒரு சிலர் பயந்துபோய் பாதியிலேயே போய்டுவாங்க.

"பயந்தாகோலி பசங்களா, எங்க ஊருல நானெல்லாம் ராத்திரில சுடுகாட்டுக்கு தனியா போயிருக்கேண்டா. இந்த கதைக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்." அப்படீன்னு சிலபேரு அள்ளி விடுவானுக.

இப்படி மிச்சமீதி இருக்க பசங்கலாம் சேர்ந்து TWO WHEELER SHED க்கு போய் அடுத்த விளையாட்ட ஆரம்பிப்போம். யாரு அதிக நேரம் தனியா அங்க இருக்கதுன்னு. அதுல ஒவ்வொருத்தரா வெளியேறிடுவாங்க, "அடுத்து நாமதான் அடுத்து நாமதான் மாட்டபோறோம். எப்படி தாக்குபுடிக்கபோரோம்ன்னு", நினைச்சிகிட்டு இருக்கும்போதே திடீர்னு Current வந்துடும். அப்பா தப்பிச்சோம்டானு ஒரே ஓட்டமா வீட்டுக்கு போய் தூங்கிடுவோம்.

அடுத்தநா காலைல பார்த்தா பசங்க எல்லாரும் பேசிப்பாங்க டேய் அவன் ரொம்ப தைரியசாளிடா.. ஆனா அவிங்களுக்கு தெரியாது ராத்திரி நான் படுக்கைல மூச்சா போனது.

ஆனா இந்த விளையாட்டு கொடுத்த தெம்புல பள்ளிக்கூடத்துல கல்லூரில என்னபன்னுவோம்னா, எழுதாத practical record நோட்ட போய் submit பண்ணுவோம்.

நேத்து ராத்திரி Power cut ஆனப்ப நம்ம வீட்டுக்கு கீழ பயக விளையாடிகிட்டு இருந்தது கேட்டுச்சு.

அடிக்கடி ராத்திரில power புடுங்கி விடுங்க பயலுக விளையாடட்டும்... Power Cut நல்லது...



13 மார்ச்

அவலம்

"வட சென்னையில் மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்." கடந்த வெளிக்கிழமை அன்று தினத்தந்தி செய்தி. இதுபோல செய்திகள் அவ்வப்போது வருகின்றது.

சாதிகளற்ற சமுதாயம் மலரவேண்டும் என்று நான் முழங்குவது இல்லை. என்னைப்பொருத்த மட்டில் ஏய்த்து பிழைப்பது ; திருடுவது ; மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுவது ; பாலியல் தொழிலில் ஈடுபடுவது போன்றவை ஈனப்பிழைப்புகள் தான். 

மனித கழிவுகளை அகற்றுபவர்களை, "நீங்கள் சமுதாயத்துக்கு மிகப்பெரிய சேவை செய்கிறீர்கள்" என்று முகத்துக்கு நேராக புகழ்ந்து பேசுவதும் பின்னர் வீட்டுக்கு வந்ததும் குளிப்பதும் இயலாது. 

அரசாங்கமானது இந்த ஈனப்பிழைப்பை விரைவில் ஒழிக்க வேண்டும்.


12 மார்ச்

Encounter

காட்சி ஒன்று : "Alert ஆ இருடா ஆறுமுகம்."

ஆ.வி. நிருபர் : "Encounter" க்கு போகும்போது உங்கள் மன நிலை எப்படி இருக்கும்?

"Encounter Specialist" என்று கூறப்படும் திரு திருபாதி : ஆழ்ந்து உற்றுநோக்கிவிட்டு... நாங்க Encounter க்கு போறோங்கறது எங்களுக்கே தெரியாதே. அது எதேச்சையா தற்காப்புக்கு நடக்குறது.

காட்சி இரண்டு : "கேக்குறாங்கையா டீடையிலு"

ஒரு நாள் "SICK LEAVE" முடிந்து அலுவலகம் திரும்பும் என்னிடம் கேட்டார்கள். : நீ "LEAVE" போடுறத முன்னாடியே சொல்லீருக்கலாம்ல?

ஆழ்ந்து உற்றுநோக்கிவிட்டு... பாஸ் SICK LEAVE லாம் பிளான் பண்ணி எடுக்குறது இல்லை. தற்ச்செயலா நடக்குறது.


8 மார்ச் posted in Facebook

திரையரங்கில் தலைவர்கள்

எத்தனை முறைதான் சொல்லுவது? திரை அரங்கங்களில் தலைவர்களை தேடியதன் பலனை இன்று அனுபவிக்கிறோம். இருந்தாலும் மோகம் குறைந்தபாடில்லை. போறவன் வரவன் எல்லாம் நான் தன அடுத்த முதல்வர் அப்படீங்கறான்.
3 மார்ச்posted in Facebook

கூடங்குளம் : போர் முறை.

கொங்கு நாட்டில் நாற்ப்பதாயிரத்துக்கும் மேற்ப்பட்ட தொழிற்ச்சாலைகள் சேர்ந்து போராட்டம் நடத்துகிறார்கள்.

சில தொலைக்காட்ச்சிகளின் செய்திகள் அதனை, "மின்வெட்டுக்கெதிரான போராட்டம்" என்று கூறுகின்றன. மற்றும் சில தொலைக்கட்ச்சிகளின் செய்திகள், "கூடங்குளம் அனுவுலைக்கு ஆதரவான" போராட்டம் என்று கூறுகின்றன.

அங்கிருப்பவர்களிடம் கேட்டால் அவர்கள் சொல்வது என்ன, "வெளி மாநிலங்களில் இருந்து ORDER எடுத்து வேலை செய்ரோமுங்க. இப்ப தினம் GENERATOR வச்சு வேலை பார்த்தாதான் வேலைய முடிச்சு கொடுக்க முடியுது. இப்படியே போச்சுனா வெளிமாநிலத்துல இருந்து ORDER எடுக்குறத நாங்க நிருத்தியாகோனும். அந்த வேலை எல்லாம் வேற மாநிலத்துக்கு போய்டும் அப்பறம் நாங்க திரும்ப ORDER புடிக்க எந்த ஊருக்கு போறதுன்னு தெரியல. கூடங்குளத்த தொரப்பிங்கலோ வேற எத தொரப்பிங்கலோ தெரியாது எங்களுக்கு மின்சாரம் வேண்டும்னு சொல்லுறத தவிர வேற வழி தெரியல."

அரசாங்கமும் வேலை வாய்ப்பை உருவாக்குவது இல்லை. வேலைவாய்ப்பை உருவாக்குரவங்களையும் வருத்தி எடுக்குது.

எதிராளியின் பலவீனத்தை பயன்படுத்துவதென்பது போர்முறைகளில் ஒன்று. நடப்பதை பார்த்தால் மக்கள் மீது அரசாங்கள் மீண்டும் மீண்டும் போர் தொடுப்பதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.



29 பிப்ரவரி
posted in Facebook

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்

"26 அமைச்சர்கள் தேர்தல் பரப்புரைக்கு தேவையா?" என்று கேட்கிறார்கள்.

திருச்சியிலே அனுதாப அலை இருந்தபோதே ; எதிர்க்கட்சி வேட்பாளர் சிறைச்சாலையில் இருக்கும்போதே முதல்வர் உட்பட அத்தனை அமைச்சர்கள் ஈடுபட்டார்கள்.

அடுத்த இடைத்தேர்தலுக்கு ஒபாமாவும் புடினும் வந்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.


21 பிப்ரவரி
posted in Facebook

சாதி

"நான் முதலியார் எனக்கு முதலியார் மணப்பெண் தான் வேண்டும்"

"நான் நாடார். எனக்கு வரும் மணப்பெண் நாடாராக மட்டும் இருக்ககூடாது. வேறு எந்த சாதியாகவும் இருக்கலாம்."


ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? ஒன்னும் புரியல...


6 பிப்ரவரி
posted in Facebook