ராக்கி கட்டும் பழக்கம் சரியா ?


பள்ளிக்கூடத்திலோ / கல்லூரியிலோ ஒரு மாணவன் மாணவிகள் மீது தவறான பார்வை வீசுகிறான் அல்லது சீண்டுகிறான் ; இரண்டு பேர் ஒரே பெண்ணை விரும்புகிறார்கள் ஆனால் அந்த பெண் அவர்களில் ஒருவனை மட்டும் விரும்பினால் மற்ற ஆடவனுக்கு ராக்கி கட்டிவிட்டால் பிரச்சனை முடிந்துவிட்டது என்ற அளவில் தான் பெரும்பாலான திரைப்படங்கள் இருந்தன.

ராக்கி கட்டுவது என்பது எதோ விருப்பம் இல்லாத ஆடவனை தவிர்ப்பதற்காக காட்டுவதாகவே சித்தரித்து வந்துள்ளார்கள். தற்காப்பு என்ற அளவிலே... சில வருடங்களுக்கு முன் ஒரு VHP காரர் சொன்னார், "ஒருவன் ஒரு பெண்ணை வன்புணர்வு செய்ய வருகிறான் என்றால், அவனை அண்ணா என்று கூப்பிட்டால் அவன் மனம் மாறி விட்டுவிடுவான்"

ஆக ராக்கி கட்டுதல் என்றாலே ஆன் பிள்ளைகள் தெறிச்சு ஓடும் விதமாக செய்துவிட்டார்கள். நடிகர் விவேக் பல படங்களில் இப்படி நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளார். 

"முதல் வருடம் ராக்கியும் மறு வருடம் தாலியும் கெட்டிச் சென்ற இணையர்களை பார்த்த பூமி இது" என்று ஒரு சமூக வலைதள பதிவர் எழுதினார். இவ்வாறாக சரியான புரிதல் இல்லாமல் நடந்துகொள்பவர்களால் எதிர்மறையான எண்ணமே அது குறித்து நிறுவப்பட்டுள்ளது.

மறுபுறம், இங்கே சாதிய ஏற்றத்தாழ்வை ஒழிக்க ஒரே வழி காதல் திருமணம் தான் என்று தொடர்ந்து பரப்புரை செய்யப்பட்டுள்ளது. இதனால் சகோதரத்துவத்தோடு பழகுதல் என்ற நிலமை இல்லாமல் பாலின கவர்ச்சி மட்டுமே மேலோங்கிய நிலைமை. சகோதரத்துவத்தோடு பழகும் இருவேறு சமுதாய நண்பர்களுக்கிடையே அடுத்த தலைமுறையில் மண உறவு ஏற்படுவது என்பது பல இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது

தமிழர்களிடம் இந்த ராக்கி கட்டுதல் போன்ற நடை முறை இல்லவே இல்லையா என்றால், எப்படி ராக்கி கட்டுவதில் சகோதரத்துவம் என்ற விடயம் பின் தங்கி பரிசுகள் வாங்கி தருவது சுமையாக கருதும் நிலை உள்ளதோ அதுபோலவே இங்கே தாய்மாமன் நடைமுறை & சீர்முறைகளில் உள்ள சகோதரத்துவம் அன்பு பாசம் போன்ற விடயங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு அதில் இருக்கும் செலவு மட்டுமே முன்னிலைப்படுத்த பட்டு அந்த வழக்கத்தை சீரழித்து வருகிறார்கள். (உ: கிழக்குச் சீமையிலே ; மதயானை கூட்டம்)

ராக்கியில் வணிக நோக்கம் அதிகமாக உள்ளது என்று பேசும் நாம் தான், யாரோ ஒரு துணிக்கடைக்காரர் கிளப்பிவிட்ட புரளிக்காக ஒவ்வொரு வருடமும் பச்சை நிறத்தில் சகோதரிகளுக்கு புடவை வாங்கி கொடுத்தோம்.

தாலி என்பது ஒரு கயிறு அவ்வளவு தான் என்று வியாக்கணம் பேசும் தாலி அறுப்பு 
திராவிட போராளிகள் த8ங்கள் வீட்டு குழந்தைகளிடம், "ராக்கி என்பது வெறும் கயிறு அதெல்லாம் கட்டக்கூடாது", என்று பேசினால், லூசாப்பா/மா நீ என்று கேட்டுவிடுவார்கள். 

இன்றைக்கு பள்ளிக்கூடத்தில் ஒரு சக மாணவி நல்ல அழகான உடுப்பு உடுத்தி வந்தால் அது குறித்து பாராட்ட வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

ராக்கி கட்டும் பழக்கம் என்பது ஒரு நல்ல நடைமுறை. அது வட நாட்டிலிருந்து வந்தது என்பதற்காக ஒதுக்க வேண்டியதில்லை. அதே நேரத்தில் அது வடநாட்டிலிருந்து வந்த பழக்கம் என்பதையும் ; வணிக நோக்கங்களை பின்னுக்குத் தள்ளி உறவுகளை வளப்படுத்த சொல்லி கொடுக்க வேண்டும். தாய்மாமன் முறைகள் பற்றி சிறார்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். சிறார்களுக்கு ராக்கியில் கிடைக்கும் குதூகலம் நம் நடைமுறையிலும் இருந்தாலே போதும்.

சரி ராக்கி கட்டுவது நல்ல நடைமுறை என்றால் இன்று செய்தியில் வந்துள்ள சம்பவம் குறித்து என்ன சொல்லுவது? வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஒருவன் திடீர் என்று மும்பையில் உள்ள தன் இல்லத்துக்கு திரும்பி உள்ளான். அங்கே அந்த வீட்டிலே இறந்து போன தாயின் எலும்புக்கூடை மட்டும் கண்டெடுத்துள்ளான்.

தன் தாயிடம் பேசி ஒருவருடம் ஆகிவிட்டதாம். கடைசியாக பேசும் போது இங்கே தனிமை என்னை வாட்டுகிறது என்னை ஏதாவது விடுதியில் சேர்த்துவிட்டு என்று தன் மகனிடம் கேட்டாராம்.

வாட நாட்டுல அப்படி நடந்திருக்கு. ஆனா இங்க நம்ம ஊருல அப்படிலாம் இல்லை என்று பேச முடியாது. பல முதியோர்களின் நிலைமையும் இப்படித்தான் உள்ளது.

ராக்கி மட்டுமல்ல எந்த ஒரு சடங்காக இருந்தாலும் அதனால் சிறு நன்மையேனும் நடக்கும் என்றால் தயங்காது கடைபிடிக்க வேண்டும்.

https://in.yahoo.com/news/mumbai-techie-returns-us-finds-071618923.html

மொழி அரசியல்

(வெல்க தமிழ்!    இந்தி ஒழிக)

புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுடைய மறைவு நாளில் இந்த பதிவை போடுவதில் பெருமை கொள்கிறேன். (நிதானமாக படிக்க ஆகும் நேரம் 08 நிமிடங்கள். )

If someone call themselves as Tamils and use the imaginary terminology, "Anti Hindi", just punch on their nose. Tamils are not adverse to any Hindi Aunty. We always maintain friendly relationship with all aunties (except actress) irrespective of their language. We start with friendship and move on to call as Bhabi / Didi.

Tamils are against any kind of "imposition" and not against any specific language. Whenever there is a wide spread discussion ; awareness ; planning to implement Tamil language at all levels in Tamil Nadu, Dravidian parties try to depict those efforts as actions against Hindi or any other language. They depict Tamils in bad light for their vested interests.


இந்தி எதிர்ப்பு என்ற கற்பனை சொல்லாடலை யாராவது பயன்படுத்தினால் அவர்கள் மூக்கில் இரத்தம் வருமாறு ஒரு குத்துவிடுங்கள்.

இங்கே நடந்தது & நடப்பது, திணிப்புக்கு எதிரான போராட்டம். அது என்றுமே நடக்கும். திரிவடுகர்கள், இதனை, ஒரு மொழிக்கு எதிரான போராட்டமாகச் சித்தரித்து வயிரு வளர்க்கிறார்கள். 

"வெல்க தமிழ்" என்பது சொந்த மொழி கொடுக்கும் 
ஆக்கபூர்வமான முழக்கம்.
"இந்தி ஒழிக" என்பது இரவல் மொழி கொடுக்கும் 
அழிவுப்பூர்வமான கோஷம்.

"திராவிட ஆட்சியின் மூலம் தமிழுக்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்" என்று கேட்டால், "அரசு அலுவலர்கள் தமிழிலே கையொப்பமிடுகிறார்கள். அரசு அலுவலகங்களில் வாழ்க தமிழ் என்று நியான் விளக்கு மின்னச் செய்திருககிறோம்" என்று சொல்லுவார்கள். வேறு ஏதாவது என்று கேட்டால், "தமிழிலே பொறியியல் படிக்க ஏற்பாடு செய்திருக்கிறோம்" என்று சொல்லுவார்கள். சரி அதனைச் செய்ய அரை நூற்றாண்டு தேவைப்பட்டாதா? தமிழில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை என்று ஏன் அறிவிக்கவில்லை ; வேறு ஏதாவது ஆக்கப்பூர்வமான காரியங்கள் உண்டா என்று கேட்டால் திரு திரு என்று முழிப்பார்கள்.






இங்கே, தமிழர்களின் வளர்ச்சியில் தடை ஏற்படுத்த ; தமிழர்களின் மனதை மடைமாற்றம் செய்ய நம் பகைவர்கள் இரண்டு வழிமுறைகளை  கையாளுகிறார்கள். 

முதலாவது :

சில வாரங்களுக்கு முன்பு நடிகை Kasthuri பேசிய காணொளி ஒன்றை நாம் தமிழர் கட்சியை சார்ந்த / அனுதாபிகளான எளிய பிள்ளைகள் (Rathish போன்று) பலரும் பகிர்ந்திருந்தார்கள்.

அந்த காணொளியில், அவரின் தொழில் குறித்து பல விடயங்களை பேசியிருந்தார். திரு. Netaji அவர்கள் குறித்தும், திரு. பிரபாகரன் குறித்தும் உயர்வாக பேசியிருந்தார். இந்த காரணத்தால், அவருடைய காணொளியை பலரும் பகிர்ந்திருந்தார்கள். அடுத்த வாரத்தில், நாட்டை ஆளும் தகுதி நடிகர்களுக்கு உண்டு என்று பேசினார்.


கலைஞர் கருணாநிதியும் அப்படித்தான் தமிழின் பெருமையை தமிழனின் அருமையை பேசுவார். இதன் மூலமாக ஒரு நேர்மையான பிம்பத்யை கட்டமைத்தார். ஆனால் ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யமாட்டார்.

தமிழ் Hindu நாளிதழை துவக்கியது எதற்க்காக? தமிழ் மீதான பற்றா? கண்டிப்பாக இல்லை. ஆங்கில செய்தித்தாள் சந்தையில் ஒரு பின்னடைவு. தமிழுக்கு ஒரு சந்தை உருவாகி விட்டது அதனை பயன்படுத்த வேண்டும். தமிழர் என்று அடையாளப்படுத்தி தமிழர் கூட்டத்தை சேர்த்து அதன் மூலமாக நுழைந்து தமிழிலேயே தமிழ் விரோத கருத்துக்களை விதைத்து மடைமாற்றம் செய்ய வேண்டும்.

தருண் Vijay ஏன் தமிழ் குறித்தும் திருக்குறள் குறித்து பேசினார்? திருவள்ளுவர் சிலையை வடநாட்டில் நிறுவ முனைந்தது எதற்க்காக. அவர் குறித்த நேர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தி தன்னை நிறுவி ; பின்னர் தனக்கு பின் சேர்ந்திருக்கும் தமிழரை வைத்தே தமிழரின் அழிவுக்கு வழி செய்வார்.

இரண்டாவது :

மற்றுமொரு வழி முறையும் பின்னப்பற்றப்படுகிறது. அது தான் Manushyaputhran வழி. பல சம்பவங்கள் மூலமாக தொடர்ச்சியாக மக்கள் மனதில் எதிர்மறையாக இடம் பிடிப்பார். திடீரென்று ஒருநாள் தமிழர் நலன் குறித்து சரியான கருத்து ஒன்றை முன்வைப்பார். அவரை காரணம் காட்டி ; அவர் மீது இருக்கும் எதிர்ப்பு மன நிலையை பயன்படுத்தி அவர் சொன்ன கருத்து தவறு என்று அவருடைய ஆட்களே தங்களை தமிழராக அடையாளப்படுத்தி இரு அணிகளாக பிரிந்து நின்று விவாதம் செய்வார்கள். தமிழர்கள் வாய் பிளந்து கேட்க வேண்டும்.

"தமிழர் ஆட்சி அமைய வேண்டும். எல்லா நிலையிலும் தமிழ் நிலைக்கவேண்டும்" என்று நாம் சொன்னால், உடனே முன்னிலையாவார் ஒருவர். "மொழி அரசியல் மூலமாக ஆட்சியை பிடித்த கருணாநிதி & திராவிடர்கள் கும்பல் தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்தார்கள்? இப்படி பேசி பேசி வீணாக வேண்டாம் இந்தி படித்தாலாவது மத்திய அரசு வேலைக்கு போகலாம்". அந்த ஒருவர், திராவிடர்களின் கள்ளக்காதலரான ஆரியர் என்பதனைச் சொல்ல வேண்டியதில்லை.

இங்கே யாரும் இந்தி படிப்பதை தடுத்து நிறுத்தவில்லை. யாருக்கெல்லாம் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அவர்கள் எல்லாரும் படிக்கலாம். முரசொலி  
மாறனின் பிள்ளைகள் இந்தி படித்தது அவ்வண்ணமே. 

தமிழை மையமாக வைத்து நடக்கும் எந்த ஒரு விவாதத்தையும் இந்தி மொழியை மையமாக கொண்ட விவாதமாக மாற்ற வேண்டிய கட்டாயம் Stalin வகையறாக்களுக்கு இருக்கிறது. அதற்கான காரணம் என்ன?


சில விடயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

1) BJP போன்ற கட்சிகளின் Hindi heart land ஆட்சி போதைக்கு இந்தி மொழி பேசுபவர்கள் & தமிழர்கள், நொறுக்குத்தீனி & ஊறுகாயாக பயன்படுத்தப்படுகிறார்கள். வணீக நிறுவனங்களில் அதிகம் பேசப்படும் Pareto கோட்பாட்டின்படி இந்தி மொழி பேசுபவர்களிடம் மொழி அரசியல் செய்வதை விட தமிழர்களிடம் செய்தால் நமக்காக அவர்கள் உழைப்பர்கள். தமிழர்களின் வாக்குகளை துறந்தால் இந்தி மொழி பேசுபவர்களின் வாக்குகளை எளிதாக பெற்றுவிடலாம் என்று கணக்கு போட்டு வட இந்திய கட்சிகள் காய் நகர்த்துகிறார், அதற்க்கு கருணாநிதி ; வை.கோ. போன்றவர்கள் சேவகம் செய்கிறார்கள்.

2) தமிழ் என்பது கருணாநிதி ; வை.கோ. ; EVKS இளங்கோவன் போன்றோர்களுக்கு இரவல் மொழி. எப்படி தங்கள் தாய் மொழியான தெலுங்கை துறந்து இரவல் மொழியான தமிழையும் ஆங்கிலத்தையும் ஏற்றுக்கொண்டார்களோ அது போலவே மற்ற இரவல் மொழிகளான இந்தி அல்லது வேறு மொழியை ஏற்றுக்கொள்வதில் எந்த சிக்கலோ தயக்கமோ இருக்காது. யாரும் கோபமடைய தேவை இல்லை. வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் இது பொருந்தும்.

3) இங்கே நடந்த மொழிப்போரில் இறந்தவர்கள் அனைவரும் தமிழர்கள். ஆனால் அதைவைத்து ஆதாயம் அடைந்தவர்கள் (கருணாநிதி ; வை.கோ. ; மாறன்) யாரும் தமிழர்கள் கிடையாது. தந்தை கருணாநிதியும் மாமா மாறனும் செய்ததை
இப்போது  Stalin. செய்யப்பார்க்கிறார். அதன் முன்னோட்டம் தான் தமிழன்டா கோஷங்கள் எல்லாம்.


சேட் & மார்வாடிகள் எப்போதுமே போரில் ஈடுபடமாட்டார்கள். போருக்கான பொருளாதார உதவி மட்டும் செய்வார்கள்.

Stalin சார்பாக மொழிப்போருக்கு அழைப்பு வரும். வராதவர்களை தமிழர்கள் கிடையாதென்றும் மானம் கெட்டவர்கள் என்றும் ஏசுவார்கள்.

இந்த முறை, எளிய தமிழ் பிள்ளைகள் உயிரின் விலை அறிந்து ; ஏமாறாமல் விலகி நிற்க வேண்டும்.

#தமிழுக்கான_சந்தை (7)

"இங்கு, தமிழிலும் அர்சனை செய்யப்படும்." ஆப்ரிக்கா கன்னடத்தில் இருக்கும் வழிபாட்டுத்தளத்தில் இந்த வாசகம் இருந்தால் ஒரு குழப்பமும் இல்லை.

ஆனால் தமிழ் நாட்டில் இருப்பது சாபக்கேடு.

German மொழியிலும் அர்சனை செய்யப்படும் என்று நம் ஊர் வழிபாட்டு தளங்களில் இருக்கலாம்.

சிறுவனாக இருக்கும் போது, எங்கள் இல்லத்தை இடித்து மாற்றி கட்டியபின் மீண்டும் புகும் போது குழந்தைகள் எங்களை கந்த sashti கவசத்தை வாசிக்கச் செய்தார்கள் எம் பெற்றோர்.

நம் இல்லங்களில் நடக்கும் புதுமணை புகு விழா ; திருமணங்கள் ; இறப்பை ஒட்டி நடக்கும் சடங்குகள் அனைத்திலும் திருப்புகழ் ; திருவாசகம் ; தேவாரம் போன்ற ஆன்மீக பாடல்கள் இடம்பெற வேண்டும்.

நேர்த்தியாக செய்திடக்கூடியவர்கள் பலரும் இருக்கிறார்கள்.

இறை நம்பிக்கை இல்லாதவர்கள் திருக்குறளை மட்டும் பிடித்து தொங்காமல் மற்ற நூல்களில் உள்ள கருத்துக்களையும் ஒலிக்க செய்யவேண்டும்.

தமிழுக்கான சந்தை (6)

(இதை படிக்க ஆகும் நேரம் : 3 நிமிடங்கள்.)

அறத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் உழவுக்கும் ; இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் மற்ற தொழில்களுக்கும் உள்ள வேறுபாடு அனைவரும் அறிந்ததே.

தொழில் புரட்சிக்கு பிந்தையகாலத்தில், எவ்வளவு உற்பத்தி செய்கிறோம் ; எவ்வளவு இலாபம் ஈட்டுகிறோம் என்பதில் மட்டுமே கவனம் இருந்தது.
விற்பனை மற்றும் இலாபத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் பிடிபடவில்லை.

ஒரு நுகர்வோரை ஈர்ப்பதைவிட வாடிக்கையாளராக மாற்றி தக்கவைப்பது 
பெரும் சவாலாக இருந்தது. இதனை எதிர்கொண்டு, வெற்றியை நீண்ட காலத்துக்கு தக்கவைத்திட, நுகர்வோரின் மனநிலையை அறிந்துகொள்வது அவசியம் என்று உணரப்பட்டது.

இந்த அடிப்படையில்தான் வாடிக்கையாளர் சேவை மையம் & அதிகாரி ; கட்டணமில்லா அழைப்பு எண் (customer service Center & executive ; Toll free number) கோட்பாடு உருவாகி இன்றைக்கு பலரும் இந்த துறையில் பணி செய்கிறார்கள்.

ஒரு நுகர்வோரின் மனதை அறிய, அவருடைய மொழியில் பேச வேண்டும் என்ற அறிவு ஐரோப்பாவைச் சேர்ந்தவர்களுக்கு உண்டு. ஏனென்றால் அவர்களுடைய மொழியை உயிராக கருதுபவர்கள் அவர்கள். தன் மொழியை நேசிக்கும் ஒருவன் அடுத்த மொழியையும் மதிப்பான். ஆனால் அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்தவர்கள் அப்படி இல்லை.

#சிக்கல் : சரி விடயத்துக்கு வருவோம். அன்றாடம், நம் அலைபேசிக்கு பல விற்பனை அழைப்புகள் வருகின்றன. அவை பெரும்பாலும் ஆங்கிலம் அல்லது Hindi யில் இருக்கும்.

அப்படி அழைப்புவரும் போது, "தமிழில் மட்டுமே நான் பேசிடுவேன். தமிழ் பேசத் தெரிந்த ஒரு அதிகாரியை என்னிடம் பேசச்சொல்லுங்கள்", என்று ஆங்கிலத்தில் சொல்லிடுவேன். Hindi என்பது நம் தேச மொழி, அது உங்களுக்கு தெரியாதா என்று ஒரு சிலர் கேட்பார்கள்.

அவர்களுக்கு, Hindi தேசிய மொழி கிடையாது என்றோ அல்லது நம் மொழியின் சிறப்பு குறித்தோ பேசுவதில் எந்த பயனும் இல்லை.

ஆங்கிலத்தில் நன்றாக பேசுகிறீர்களே ஆங்கிலத்திலேயே தொடரலாமா என்று சிலர் கேட்பார்கள்.

என் ஊரில், என் பணத்தை கொடுத்து உன் பொருளை / சேவையை வாங்கும் நுகர்வோர் நான். என் மொழியில் பேசினால் உன்னிடம் வாங்குவேன். இல்லை என்றால் வேறு யாரிடமாவது வாங்கிக்கொள்வேன். என்று சொல்லிடுவேன்.

#பண மொழி, கண்டிப்பாக, எல்லோருக்கும் புரியும்.

சிறிது நேரத்திலோ அல்லது அடுத்த நாளோ மீண்டும் அழைப்பு வரும். நிம்மல்க்கு என்ன வேண்டும் சார் என்று ஒருவர் அரைகுறை தமிழில் பேசுவார். பரவாயில்லை சேட்டு பெண்ணோ Bihari பையனோ, என்னிடம் தமிழில் பேச வேண்டும்.

இதனை 2007 ஆம் ஆண்டு முதல் செய்து வருகிறேன்.

தமிழில் பேசிய ஒரே காரணத்துக்காக ஒரு வங்கியில் கடன் அட்டை வாங்கினேன். கடன் அட்டையை எப்படி பயன் படுத்துவது என்று எனக்கு தெரியும்.

தள்ளுபடி விலையில் பொருள் தருகிறான் என்று #Amazon ல், தேவையே இல்லாத பொருளை வாங்கும் நாம், தமிழ் இல்லாதது ஒரு சேவைக்குறைபாடு என்பதை உணரவேண்டும்.

நீங்களும் இது போல செய்து வருவீர்கள். சிந்தையில் வைத்திருப்பவர்கள் 
சரி என்று பட்டால் நடைமுறைப் படுத்திடுங்கள்.

Facebook : 8 ஏப்ரல், 2017

தமிழுக்கான சந்தை (5)

சில வருடங்களுக்கு முன் ஆண்டு விடுமுறைக்காக கேரளா சென்ற போது, "HDFC ATM வந்தால் நிருத்துங்கள் சேட்டா" என்று மகிழுந்து ஓட்டுனரிடம் சொன்னேன்.

நான் குறிப்பிட்ட வங்கிகளின் ATM வந்தாலும் நிறுத்தாமல், ஏதோ சொல்லி வைத்தார் போல, South Indian Bank ATM ல் மட்டுமே நிறுத்தினார். மலயாளிகள் வங்கி, அதனால் அங்கே மட்டும் நிருத்தியிருப்பார் என்று ஒரு முடிவுக்கு வரவேண்டியதில்லை. அவருடைய உறவினர் யாராவது அந்த வங்கியில் வேலை செய்யக்கூடும்.

முன்பெல்லாம் வங்கிக்குச் சென்று படிவங்களில் எழுதிக் கொடுத்து பணத்தை எடுப்போம். ஆனால் இன்று பணத்தை எடுப்பதற்கு பெரும்பாலும் தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரத்தை தான் பயன்படுத்துகிறோம்.

அதில் தமிழை நாம் பயன்படுத்த வேண்டும். பணத்துக்கு மொழி வேருபாடு கிடையாது என்று அவசரகதியில் எடுத்துச் செல்வது சரியில்லை.

குறிப்பிட்ட சில வங்கிகளில் மட்டும் (அதிலும் குறிப்பிட்ட ஊரில் ஒரு பகுதியில் மட்டும்) பரிவர்த்தணை ரசீது தமிழில் வருகிறது.

தமிழ் மொழி தெரிவு என்பதே பல வங்கிகளின் தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரத்தில் இல்லை. அல்லது பெரும்பாலும் அந்த தெரிவு மட்டும் வேலை செய்யாது.

உதாரணத்துக்கு சில.. தலைநகர் சென்னையில் உள்ள கோடம்பாக்கம் Rangarajapuram ATM ல் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி தெரிவு நன்றாக வேலை செய்யும். தமிழ் மொழி தெரிவு பெரும்பாலான நேரங்களில் வேலை செய்யாது. சென்னையின் சில்லரை வர்த்தக மையமாக இருக்கும் T.நகரில் போத்தீசுக்கு குறுக்கெதிரே இருக்கும் Dhanalakshmi வங்கி ATM ல் மலையாளம் மட்டும் தான் தமிழ் கிடையாது. பொள்ளாச்சியில் கோவை சாலையில் உள்ள HDFC ATM. நாகர்கோவிலுக்கு நடக்கும் தூரத்தில் இருக்கும் இந்தியன் வங்கி ATM....

#தீர்வு : அது போன்ற நேரங்களில், அந்த வங்கிக்கு மின்னஞ்சல் மூலமாக புகார் அனுப்புவது ; சரியான பதில் வரும் வரை, அந்த வங்கி ATM ஐ பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையில் உறுதியாக இருந்து வருகிறேன்.

உங்களில் பலரும் இவ்வாறாக செய்து வருகிறிர்கள் என்று நம்புகிறேன்.
இதுகாரும், இதனை சிந்தையில் வைத்திருப்பவர்கள், சரி என்று பட்டால் இதனை செயல்படுத்திட வேண்டுகிறேன்.

இந்த வகையில் சில வங்கிகள் (AXIS வங்கி ; Citi bank) பரவாயில்லை. ஒரு புகாரளித்தால் மன்னிப்பு கோருவது ; சீர் செய்த பின், நிகழ் நிலை தகவல் தருவது என்று அசத்துவார்கள்.

Facebook 3 ஏப்ரல் 2017

தமிழுக்கான சந்தை (4)

எங்கள் குடியிருப்பு பகுதியில் ஒரு குடியிருப்போர் நலச் சங்கம் (welfare association) துவக்கினார்கள். சங்கத்தின் பெயரில் துவங்கி, அறிவிப்புகள் ; சட்ட திட்டங்கள் என்று அனைத்துமே ஆங்கிலத்தில் இருந்தது. ஒரு சில அறிவிப்புகள் தமிழில் இருந்தது.

ஏன் தமிழை புறக்கனிக்கிறீர்கள் என்று கேட்டபோது அவர்கள் சொன்ன காரணங்கள்,

1) நாங்கள் தமிழுக்கு எதிரானவர்கள் இல்லை. எங்களுக்கு தமிழில் தட்டச்சு செய்திட தெரியாது.
2) தமிழில் எழுதினால் அதிக நேரம் எடுக்கும். பிழையாக எழுத வேண்டாமே என்று எழுதவில்லை.
3) தமிழ் எழுத படிக்கத் தெரியாத மற்ற மாநிலத்தவர்களும் உள்ளார்கள்.
4) தமிழில் ஆவணங்கள் இருந்தால் நீதிமன்றங்களில் எடுபடாது.

அப்போது தான் நான் செய்த மிகப் பெரிய பிழையின் தாக்கத்தை உணர்ந்தேன்.
பெருநகரங்களில் நிலம் அல்லது வீட்டுக்கான பத்திரப்பதிவு செய்திடும் போது அந்த ஆவணங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் உள்ளன.

பெரு நிருவணங்கள் மூலமாக வாங்கும் போது நாம் முன் பணம் கொடுத்ததும் அதற்கு அத்தாட்சி ரசீது தரும் போதே, தமிழில் வேண்டும் என்று கேட்க துவங்கி ; கட்டிடத்தின் உள் வடிவமைப்பில் செய்திட வேண்டிய மாற்றங்கள் குறித்த மின் அஞ்சல் ; பத்திரப்பதிவு ; வருடாந்திர பராமரிப்பு ; புது அடுமனை / நிலம் குறித்த சலுகை கடிதங்கள் என்று அனைத்திலும் தமிழ் இருக்குமாரு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இப்போது, சில மாதங்களாக, எங்கள் குடியிருப்போர் நலச் சங்கததின் சட்ட திட்டங்களை தமிழில் மொழிமாற்றம் செய்து வருகிறேன்.புதிதாக சொத்து வாங்கிய சகோதரர் தமிழ்ச்செல்வன் பதிவைப் பார்த்த போது, நானே சொத்து வாங்கியது போன்று மகிழ்ச்சியாக இருந்தது. கலப்படமில்லாத தமிழில் ஆவணங்களை வடிவமைத்திருக்கும் சகோதரருக்கு வாழ்த்துகள். நாம் அனைவரும் இப்படி செய்திட வேண்டும்.

தமிழ்நாட்டில் சொத்து ஆவணம் தமிழில் இல்லையென்றால் அண்டார்டிக்காவிலா தமிழை வைக்க முடியும்.

Facebook : 25 மார்ச் 2017

தமிழுக்கான சந்தை (3)

நேற்று ஆதார் எண் பெறுவதற்காக அதிகாரபூர்வமான இணையதளத்தை பார்த்தேன்.

விருப்ப மொழித் தேர்வாக 12 மொழிகள் இருந்தன. தமிழை தேர்ந்தெடுத்தேன். முதல் பக்கத்தில் 40 விழுக்காடு தமிழில் இருந்தது. மற்றவை அனைத்தும் ஆங்கிலம் / இந்தியில் இருந்தது.

பதிவிறக்க படிவங்கள் பகுதியில் விண்ணப்ப படிவம் தமிழில் இல்லை.

முதல் பக்கத்தில் இருந்து அடுத்த பகுதிகளுக்குச் செல்லும் எந்த சுட்டியை அழுத்தத்தினாலும் அவை (அடுத்தடுத்த பக்கங்கள்) ஆங்கிலத்தில் உள்ளது.
உதாரணத்துக்கு : "பதிவு மையம் கண்டறிதல்" என்ற சுட்டியை அழுத்திப் பாருங்கள்.

"குறைதீர்வுகள்" என்ற சுட்டியை அழுத்தினால் அடுத்த பக்கம் தமிழில் உள்ளது. ஆனால் வாசிப்பதற்கு ஏதுவாக இல்லை. அடுத்தடுத்த சொற்களுக்கு இடையே இடைவெளி இல்லை.

நிறைவாக "உதவிக்கு 1947", என்ற எண்ணுக்கு அழைத்தால் press 1 for English என்று தொடங்கி ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு எண் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் ஆங்கிலத்தில் பேச எண் 5 ஐ அழுத்துங்கள் என்று சொல்லுகிறது.
"press 1 for English & 5 for ஆங்கிலம் என்பது என்ன?"

எண் 5 ஐ தேர்ந்தெடுத்து பேசினேன். அந்த நபர் இந்தி / ஆங்கிலத்தில் மட்டுமே பேச முடியும் என்று சொன்னார். தமிழ் பேசுபவர்கள் இல்லையா என்று கேட்டேன். இல்லை என்றார்.

தமிழை ஏண் இப்படி புறக்கணிக்கிறார்கள்? அவர்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு புகார் அனுப்பியுள்ளேன்.

இதுகாறும் ஆதார் எடுத்தவர்கள் பலரும் இதனை கவனித்து புகார் அனுப்பி இருப்பீர்கள். உங்கள் புகாருக்கு சரியான மறுமொழி வந்ததா?

Facebook : 18 மார்ச், 2017

தமிழுக்கான சந்தை (2)

சந்தை என்பது, வரத்து (Supply) மற்றும் தேவை (Demand) ஆகியவற்றால் இயக்கப்படுகிறது. 

தேவை என்பது வரத்தின் மீது ஒரு தாக்கத்தை கண்டிப்பாக ஏற்படுத்த முடியும்.

தமிழுக்கான சந்தையும் அப்படித்தான்.

அந்த வகையில், நம்முடைய அன்றாட வாழ்வில் எப்படி தமிழுக்கான தேவையை அழிக்காமல் இருக்க முடியும் என்பதனை என் பட்டறிவின் (கடந்த ஐந்து வருடங்களாக) மூலம் கண்ட விடயங்களை ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் பதிவிடுகிறேன்.

கடந்த வாரம் திரையரங்கம் குறித்து பதிவு செய்திருந்தேன். சில வாரங்கள் இந்த பதிவுகள் தொடரும்.

Facebook : 18 மார்ச் 2017


தமிழுக்கான சந்தை (1)

நாம் கட்டும் வரிப்பணத்தின் மூலமாக வரிச்சலுகை பெரும் திரைப்படத்துரையில் தமிழ் எப்படி இருக்கிறது. இந்த வாரம் திரையரங்கத்துக்குச் சென்றபோது (நாங்கள் பார்த்த இரண்டு படங்களுமே தமிழ் படங்கள்.)

சில வணிக விளம்பரங்கள் தமிழிலும் பல விளம்பரங்கள் ஆங்கிலத்திலும் இருந்தது. திரையரங்கம் சார்பாக வெளியான அறிவிப்பு எதுவுமே தமிழில் இல்லை.

கழிப்பறை முதல் அனைத்து இடங்களிலும் அறிவிப்பு பலகைகள் ; திசை காட்டி / signages எதிலுமே தமிழ் இல்லை.

திரைப்படத்துக்கான அனுமதி சீட்டு தமிழில் இல்லை.

ஆலோசனைகள் / முன்னேற்ற வாய்ப்புகள் இருந்தால் எங்களிடம் தெரிவியுங்கள் என்ற அறிவிப்பைக்கூட ஆங்கிலத்தில் தான் வெளியிடுகிறார்கள். இது சரியா?

ஆங்கிலத்திலும் அறிவிப்புகள் உள்ளன என்பது வேறு. ஆங்கிலத்தில் மட்டுமே அறிவிப்பு என்பது வேறு.

இது குறித்து அந்த திரையரங்கத்தாருக்கு WhatsApp மூலம் புகார் அளித்தபோது ஆங்கிலத்தில் பதில் கூறினார்கள். தமிழ் தெரிந்தவர்களை வேலைக்கு அமர்த்துவதில்லையா அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பதில் சொல்ல வேண்டும் என்ற உத்தரவா? என்று வினா எழுப்பினேன்.

நேற்று திரையரங்க மேலாளர் அலைபேசியில் அழைத்து பேசினார். நடைமுறை சிக்கல்களை எடுத்துச்சொன்னார். இதுவரை யாரும் இப்படி கேட்டதில்லை. நிர்வாகத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்கிறேன் என்று சொன்னார். (கண்டிப்பாக பலரும் புகார் தெரிவித்திருப்பார்கள்)

உரிய தீர்வு கிடைக்கும் வரை விடப்போவதில்லை. திரைத்துரையில் இருப்பவர்கள் இதற்காக முதலில் குரல் கொடுக்கட்டும் அதன் பின் மற்ற விடயங்களுக்கு வரட்டும். இயக்குனர் கரு.பழனியப்பன் போன்றவர்களாவது இது குறித்து யோசிபபார்கள் என்று கருதுகிறேன்.


ATM முதல் அவ்வப்போது இது போன்ற நடக்கும் தமிழ் புரக்கணிப்புகளை நம்மில் பலரும் பல வருடங்களாக சுட்டிக்காட்டி மாற்றத்தை கொண்டு வருகிறோம் ஆனால் ஒருங்கிணைத்த எதிர்ப்பை பதிவு செய்து மாற்றத்தை கொண்டுவருவது விரைவான வழியாக இருக்கும். 


சம்பவம் நடந்தது மார்ச் 7 ஆம் நாள் 2017. 

Whatsapp மூலமாக புகார் அளித்தது மார்ச் 8 ஆம் நாள் 2017.  (Whatsapp எண் : 8939484000)

மறுமொழி வந்த நாள் மார்ச் 9 ஆம் நாள் 2017.

நிறுவனத்தின் மேலாளர் என்னிடம் தொலைபேசியில் பேசிய நாள் : மார்ச் 9 ஆம் நாள் 2017. (7358773662)

Facebook இல் முதல் பதிவு மார்ச் 9 ஆம் நாள் 2017

OPS தமிழரா ?

OPS தமிழரா என்ற சூடான விவாதம் நடைபெறுகிறது.


OPS விடயத்துக்கு போகும் முன்... நவீன் பட்நாயக் மற்றும் கருணாநிதி ஆகியோரை பற்றி ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தால் உண்மை விளங்கும்.
நவீன் பட்நாயக் அவர்களுக்கு, அவர் ஆளும் மாநிலத்தின் ஆட்சி மொழியில் புலமை கிடையாது (ஒரியா). ஆனால் அந்த மாநிலத்து மக்களுக்கு உண்மையாக இருக்கிறார். இங்கே கருணாநிதி அவர்களுக்கு அவர் வாழும் மாநிலத்தின் ஆட்சி மொழியில் புலமை உண்டு ஆனால் மக்களுக்கு உண்மையாக இருக்கிறாரா என்றால் இல்லை என்ற பதில் தான் அவருடைய வாரிசுகளிடமிருந்தே வரும்.  




மொழிப்புலமை என்பது அவசியம் என்றாலும் கூட, உயர்வு வேண்டுமென்றால் தூய குருதியும் உணர்வும் வேண்டும்.

திரிவடுக கட்சிகளில் இருக்கும் எவருக்கும் அந்த உணர்வு இருக்க முடியாது. கட்சி ; தலைமை என்ற உணர்வே மேலோங்கி இருக்கும். "என் உயிர் தோழன்" படத்தில் வரும் தொண்டனைப்போல.

இருந்தாலும் கூட, அ.தி.மு.க. வில் இருப்பவர்களை ஏன் தமிழர்கள் என்று சொல்லுகிறோம்?

என்னுடைய தெரிவு யார் என்றால், முதல்வர் பொறுப்புக்கு திரு. Jayakumar. சுனாமி சமயத்தில், இறங்கி வேலை செய்ததால் இவரை சொல்லுகிறேனா? இல்லை. இவரால் கட்சிக்கு ஒரு தேர்தலில் வெற்றி பெற்று தர முடியுமா என்றால், சந்தேகம் தான்.

ஆனால், இவர் வந்தால், மீனவர் விடயத்தில் தீர்க்கமான ஒரு முடிவை எடுப்பார் என்ற திடமான நம்பிக்கை இருக்கிறது. கடிதங்கள் எழுதிக்கொண்டிராமல் காலத்தில் நிச்சயம் குதிப்பார். ஒருவேளை மீனவர் யாராவது தவறு செய்தால் உரிமையோடு கடிந்து அவர்களை வழி நடத்துவார்.


கட்சி பணிக்கு / பொதுச்செயலாளர் பணிக்கு, திரு. செங்கோட்டையன் அவர்கள் சிறப்பான தேர்வாக இருக்கும். ஒருங்கிணைக்கும் பணியில் தேர்ந்தவர் என்ற காரணத்தினால் தான் தேர்தல் பரப்புரைகளுக்கான திட்டமிடும் பொருப்பு இவர் வசம் பல முறை வந்தது.


சரி நத்தம் ; தம்பிதுரை ; பொன்னையன் போன்றவர்கள்? அவரவர் வியாபாரத்தை அவரவர் கவனித்துக் கொண்டு இருப்பது நலன் பயக்கும்.

சரி மீண்டும் தலைப்புக்கு வருவோம். எந்த அடிப்படையில் இவர்களை நம்புவது அல்லது தமிழர்கள் என்று ஏற்றுக்கொள்வது? இதற்கான பதிலை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சில வருடங்களுக்கு முன்னர் சொல்லி இருக்கிறார்.

2001 ஆம் ஆண்டு பொது தேர்தலில் "இலை மலர்ந்தால் ஈழம் மலரும்" என்று சொன்னார். இன்றைக்கு கேட்கப்படும் எல்லா கேள்விகளையும் அன்று கவிதாயினி தாமரை எழுப்பினார்.

செல்வி Jayalalithaa, ஈழ போராட்டத்துக்கு எதிரானவராயிற்றே அவரை எப்படி நம்புவது?

பன்நெடுகாலமாக கருணாநிதி, தமிழின தலைவர் வேடத்தை பூண்டிருந்தார். இன்றைக்கு அந்த வேடத்தை தரிக்க, அன்று செல்வி. JJ தயாரானார். கொள்கை முரண்பாடு இருந்த போதும் அவர் அந்த முடிவை எடுக்க காரனம் என்ன?

1) புலிகளை வீழ்த்திவிட்டோம்.
2) கருணாநிதி மீதான நம்பகத்தன்மை சிதைந்து விட்டது.
3) ஈழத்துக்கான சந்தை அப்படியே இருக்கிறது. அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

சரி 2011 தேர்தலில் வென்றபின் பழைய குருடி கதவை திரடி என்று இருந்திருக்க முடியும். ஆனால் அப்படிச் செய்யவில்லை. அதற்கு காரனம் என்ன?

1) MGR க்கு மக்களிடம் தலைமுறைகள் தாண்டி நிரந்தர செல்வாக்கை பெற்றுத்தந்தது ஈழம் தானே. நாமும் உண்மையாக நடந்துகொண்டால் நாம் நிரந்தர முதல்வராக இருக்கலாம்.

2) அகவை 60 கடந்துவிட்டோம் இனிமேலாவது, பரிவானவர் இவர் என்ற பெயர் எடுக்க ஆசைபட்டிருக்கலாம். புண்ணியம் தேடலாம் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கலாம்.

3) அதோடு சேர்ந்து, யாருமற்ற நம்மீது இவ்வளவு பரிவு காட்டுகிறார்களே. நாமும் பரிவு காட்டலாம் என்ற என்னமும் வந்திருக்கலாம்.

தூய்மையான அன்பும் பரிவும் ஒரு மனிதனை நல்வழிப்படுத்த முடியும்.

கோமாளி புலிக்கேசி ஒருகட்டத்தில் உணருவது போல, அ.தி.மு.க. வில் இருக்கும் இவர்களும் உணருவார்கள் என்ற எண்ணம் தான் இவர்களை இன்றைக்கு ஆதரிக்க நமக்கு இருக்கும் காரணமாக இருக்க முடியும்.

இப்போது இருக்கும் வாய்ப்பையும் தவர விடுவதில் நியாயம் இல்லை. உள்ளத்தூய்மையும் உறுதியும் கொண்ட ஒரு முழுமையான ஒரு தமிழன் / தமிழச்சி தலைமை பொறுப்புக்கு வரும் வரை வேறு வழிகள் எனக்கு தென்படவில்லை.

தேர்தலில் தோல்வியை தழுவிய பிஜேபி மற்றும் திரிவடுக காட்சிகள் இப்போது கொல்லைப்புறமாக அதிகாரத்தை கைப்பற்ற சூழ்ச்சி செய்கிறார்கள். அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வி உங்களுக்கு வருமேயானால்...

நெடுஞ்செழியன் ; திருநாவுக்கரசு ; STS ; பண்ருட்டியார் ; இராம. வீரப்பன் என்று பலரையும் தாண்டி தான் செல்வி JJ இங்கு காலூன்றினார். நாம் ஒன்றும் கர்நாடகத்துக்கு சென்றோ அல்லது ஆந்திராவுக்கு சென்றோ யாரிடமிருந்தும் எதையும் தட்டிப்பறிக்கவில்லை.