Showing posts with label எண்ணோட்டம். Show all posts
Showing posts with label எண்ணோட்டம். Show all posts

நுங்கம்பாக்கம் இரயில் நிலையம்!

நுங்கம்பாக்கம் இரயில் நிலையம்


இரண்டு வாரத்துக்கு முன்னால ஒரு நாள் share auto ல போய்கிட்டு இருந்தேன். பைய தடவி பாத்தா ஒரே ஒரு 500 ரூபா மட்டும் இருந்தது. நான் கொடுக்க வேண்டியது 10 ரூபா. எப்படியும் ஆட்டோ காரர் கழுவி கழுவி ஊத்துவாரு. அதனால நானே முந்திக்கிட்டு அவர் கிட்ட சொன்னேன். அன்னே கைல சில்லறை இல்லை நீங்க சில்லறை இருக்கானு பாருங்க... நினச்ச மாதிரியே கழுவி கழுவி ஊத்துனாரு... இறங்க வேண்டிய நுங்கம்பாக்கம் இரயில் நிலையம் வந்துடுச்சு... ஒன்னு நான் அந்த ஆட்டோலையே போய் கடைசி நிறுத்தத்துல இறங்கி சில்லறை மாத்தி கொடுக்கணும் இல்ல நடு ரோட்டுல இரண்டு பேரும் ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பாத்துகிட்டே இருக்கணும். பின்னாடி உட்கார்ந்திருந்த மாமி 20 ரூபா தாள என்கிட்டே கொடுத்தாங்க... இவா எப்பவும் இப்படி தான் செய்வா..நாம என்ன வேணும்னேவா சில்லறை இல்லாம வாரோம். உங்களுக்கும் சேர்த்து இத கொடுத்துடுங்க. வேற யாருக்காவது இப்படி தேவைப்பட்டா நீங்க ஒரு நாள் கொடுங்க... பதிலுக்கு காத்திருக்காம அந்த மாமி போய்ட்டாங்க...

மாமி என்ன கோத்திரம்... வடகலையா  தென்கலையானு தெரியல... ஆனா தினமும் ஒரு 50 ரூபாய்க்கு சில்லறை இல்லாம நான் வெளில கிளம்புறது இல்ல...

இன்னொரு நாள் காலைல சாப்பிடாம போய்ட்டேன் லேசா தலை சுத்துற மாதிரி இருந்துச்சு...பக்கத்துல இருந்த ஒரு அன்பர் உடனே அவரோட தண்ணி பாட்டிலை நீட்டி குடிக்க சொன்னாரு...(என் பையிலையே தண்ணி பாட்டில் துருத்திகிட்டு இருந்தாலும் கூட)

ஆணோ பெண்ணோ நுங்கம்பாக்கம் மட்டும் இல்ல, எந்த இரயில் நிலையமா இருந்தாலும் எல்லாரும் நம்ம வீட்டு ஆளா நினச்சு அவசரத்துக்கு உதவ தான் செய்யுறாங்க. எனக்கே இப்படின்னா பெண்களுக்கான எப்படி உதவுவாங்கனு சொல்லத்தேவை இல்லை...அதனால, ஏதோ ஒரு நாதாரி எதோ செஞ்சுட்டாங்குறதுக்காக பாதுக்காப்பு இல்லாத இடம்னு எல்லாரும் சொல்ல தேவை இல்லை...

அலுவலகம் செல்லும் நேரத்துல மகளிர் மட்டும் இரயில் ஓடுது... கூட்டம் எவ்வளோ குறைவா இருந்தாலும் ஒவ்வொரு பெட்டிக்கும் ஒரு பெண் காவலர் இருக்காங்க...

இதை ஏன் நான் இப்ப சொல்லுறேன்னா... அப்ப சொல்லிருந்தேன்னா அரசாங்கத்துக்கு ஆதரவா பேசுறேன்னு எல்லாரும் சேர்ந்து beatle வாசிச்சிருப்பீங்க... 

குறிப்பு : அப்படினா அன்னைக்கு ஏன் யாரும் உதவலைன்னு கேட்டீங்கன்னா... இப்பயும் பாருங்க இத படிச்சிட்டு இரண்டு பேரு கேள்வி கேப்பாங்க..."அந்த மாமிய உனக்கு முன்னமே தெரியுமா..அவங்க எப்படி இருந்தாங்க..."

NGO / TRUST

"வெயில், இந்தியால நான் DONATE செய்யணும் ; எந்த NGO / TRUST நல்லா செய்யுறாங்கனு பாத்து சொல்லுங்க. பணத்த ONLINE ல TRANSFER செஞ்சுடுறேன்."
வெளிநாட்டில் வாழும் / பணிபுரியும் நண்பர்கள் மற்றும் பெரியவர்கள் பலரும் இந்த கேள்வியை தொடர்ந்து கேட்டுவருகிறார்கள்...

நல்ல எண்ணத்தோடு கேட்பவர்களை நாம் ஊக்கப்படுத்தாவிட்டாலும் பரவா இல்லை ஆனால் அவர்களின்  எண்ணத்தை சிதைத்து விடக்கூடாது என்று கருதியே பல நேரங்களில் மௌனமாக இருந்து உள்ளேன். ஆனால் ஒரு சிலரிடம் வெளிப்படையாகவே பேசி இருக்கிறேன். இங்கு இருக்கும் நிலவரம் அப்படி.. பொதுவாகவே இந்த திரிவடுக  அரசியல் சூழலில்...

இங்கே நம்மூரில், நன்கொடை என்பது ஒரு கை கொடுப்பது மறு  கைக்கு தெரியக்கூடாது என்ற புரிதலில் இருந்து வந்துள்ளார்கள். (ஆன்மீக ரீதியாகவோ அல்லது சமுதாய அமைப்புமுறை சார்ந்தோ பண்ணெடுக்காலமாக இது தொடர்ந்து வந்துள்ளது). முதலில் தன் குடும்பம் ; அடுத்து நெருங்கிய உறவினர்கள் மற்றும் தன் குடும்பத்துக்காக பணிபுரிபவர்களின் குடும்பம் இவ்வாறாக அது விரிந்து செல்லும்... குடும்பம் எனும்போது அது கூட்டு குடும்பத்தையே குறிக்கும். ஆனால் மேற்கு உலகில் அப்படி இல்லை.

உலகெங்கிலும் இந்த NGO / TRUST மூலம் நடக்கும் நல்லவை நம் கண்களுக்கு எளிதில் புலப்படும். ஆனால் அத்தோடு நின்று விடாது. இறுதியில், ஒரு மதத்தை வளர்க்கவோ அல்லது கட்சியை வளர்க்கவோ அல்லது வணீகத்தை வளர்க்கவோ பயன்படுத்தப்படும்.  ஒரு தலைமுறை செய்த நண்கொடை விதைகளின் அறுவடையை அடுத்த தலைமுறை பயன்படுத்திக்கொள்ளும். ஆக இந்த donations - non profit கிடையாது.

நீடித்து நிலைக்கும் அமைப்புமுறை கொண்ட தமிழ் சமூகத்தின் பலன்களை திரிவடுக அரசியல் பயன்படுத்திக் கொண்டதை நம்மில் பலரும் பார்த்திருப்போம்.

நான் பார்த்தவரை இங்கே சில நல்ல அறக்கட்டளைகள் உள்ளன ; ஆனால் அவற்றின் பதிவு புதிப்பிக்கப்படுவது இல்லை. ஒரு ஆசிரியப்பள்ளி நடத்துவதற்கு தேவையான எல்லா கட்டமைப்பும் இருக்கும் ஒரு  அறக்கட்டளைக்கு 10 வருடமாக அனுமதி கிடைக்கவில்லை. அந்த கட்டமைப்பு பயன்படுத்தப்படாமல் சிதைவதை பார்க்க முடிகிறது. யாராவது தன்னிடம் இருக்கும் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றித்தர கேட்கிறார் என்றால் மாற்றித்தர வேண்டும் இல்லை என்றால் பதிவு ரத்தாகிவிடும்.

ஒரு NGO / TRUST க்கு donation கொடுத்தால் தொடர்ந்து மேலும் பல NGO / TRUST களிடம் இருந்து அழைப்பு வரும். வரிச்சலுகை குறித்து விவரித்து கூறுவார்கள்.

நிறுவனங்களின் நீடித்த நிலையான வளர்ச்சி தணிக்கையாளனாக நான் பார்த்தவரை பல பெரு நிறுவனங்கள் CSR என்று சொல்லப்படும் corporate social responsibility மூலமாக பல கோடிகளை செலவிடுகிறார்கள் என்று சொல்லுவதை விட முதலீடு செய்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். அதனால் தான் அவர்கள் சொல்லுவதை எல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், IMPACT ASSESSMENT என்று சொல்லப்படும் தாக்க மதிப்பீடு செய்யச்சொல்கிறோம்.

ஆகவே பலரிடம் முன்னமே சொன்னதையே திரும்பச் சொல்லுகிறேன். நாம் கொடுக்கும் பணம் மூலம் நமக்கு மன நிம்மதி கிடைக்கலாம். நம் நண்பர்களிடம் பெருமையாக சொல்ல முடியும் நானும் நாலு பேருக்கு உதவி செய்திருக்கிறேன். ஆனால் யாரைக்காட்டி அந்த பணத்தை வாங்குகிறார்களோ அவர்களுக்கு வேண்டியது என்ன என்று தெரிந்து கொண்டு செயல் படுங்கள். தாய்நாட்டுக்கு நீங்கள் வரும் போது முன்னறிவிப்பு இன்றி அங்கே செல்லுங்கள் ஒரு நாள் அவர்களோடு செலவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் பணத்துக்கு கணக்கு கேளுங்கள். சரியான நபருக்கு அது போய் சேர்ந்ததா என்று பாருங்கள். அடிக்கடி தனியாக செல்லமுடியவில்லையா ஒரு குழுவாக சேருங்கள் முறைவைத்து ஒவ்வொருவரும் சென்று பாருங்கள்.

முடிவாக, இங்கே இருக்கும் எம்மைப்போன்றவர்களை உங்கள் பணத்தின் மூலம் கெடுக்காதீர்கள். யாரும் எந்த கேள்வியும்  கேட்க்காமல் பணம் கொடுத்தால் நாங்கள் ஆட்டையைப்போடுவோம். உங்கள் பணத்தின் மீது உங்களுக்கு அக்கறை இல்லை என்றால் மற்றவர்களுக்கு...

ஏமாறாதே ஏமாற்றாதே...



இன்றும் பலபேரை பார்க்கிறோம் நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள். ஒருகட்டத்தில் சேர்ந்து தொழில் செய்யலாம் என்று முடிவெடுப்பார்கள். இருவருமே தொழில் தெரிந்தவர்களாக இருந்தால் பிரச்சனை இல்லை. பல நேரங்களில் அப்படி இருப்பதில்லை. 

"மச்சான் இந்த தொழில் பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது. உன்ன நம்பித்தான் பணத்த போடுறேன். நீ தான் பாத்துக்கணும்." 

"கவலைப்படாத மச்சி பதினஞ்சு வருசத்துக்கு மேல இந்த தொழில்ல இருக்கேன். எல்லா நெளிவு சுழிவும் எனக்கு தெரியும். நட்டம் வருமேன்னு பயப்பட்டா லாபத்த பாக்கமுடியாது."

இப்படி ஆரம்பிக்குற பல தொழில்களும் கடைசில எப்படி முடியுது?  சினிமா மாதிரி தான் முடியுது. சினிமா தயாரிப்பாளர்கள் மனசுல என்ன இருக்கு. போட்ட முதல் திரும்ப வரணும். பிரஸ் மீட்ல இயக்குனர் இப்படி சொல்லுவாரு, "இந்த மாதிரி ஒரு தயாரிப்பாளர் கிடைக்க நான் குடுத்துவச்சிருக்கணும். எந்த குறுக்கீடும் இல்லாம எங்க வேலைய செய்யவிட்டாறு. அதனால தான் இந்த படம் இவ்வளோ சிறப்பா வந்திருக்கு."

படம் வெற்றினா அது இயக்குனரையும் நடிகரையும் சேரும். தோல்வினா, அடுத்த பிரஸ் மீட்ல இப்படி சொல்லுவாங்க. "நான் எதிர்பார்த்த மாதிரி படம் பண்ண முடியல சார். நானும் தயாரிப்பாளர் தான்னு சொல்லீட்டு மஞ்சப்பைல பணத்த தூக்கிட்டு வர்றாங்க. ஒரு மண்ணும் புரியாதவங்களா இருக்காங்க. எல்லாத்துலையும் மூக்க நுழைச்சா எப்படி. நான் எதிர்பார்த்த பட்ஜெட்ல படம் எடுக்கு முடியல. எவ்வளோ காம்ப்ரமைஸ் செஞ்சுகிட்டேன்."


சினிமா வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது என்று பணத்தை திருப்பி கேட்பது சரியல்ல: நடிகர் கமலஹாசன்.
ஐம்பது வருடங்களுக்கும் மேலாக சினிமா துறையில் இருக்க கூடியவர் ; ஓடும் படங்களை சொந்த பணத்திலும் ஓடாத படங்களை ஊரான் பணத்திலும் எடுப்பவர். இவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

சரி ஒண்ணா சேர்ந்து தொழில் செஞ்ச நண்பர்கள் கதைக்கு வருவோம். தொழில் நல்லா போச்சுன்னா நல்லது. இல்லைனா என்ன நடக்குது.

"என்ன மச்சான் உன்ன நம்பித்தான் முதல் போட்டேன் இப்ப என்ன செய்யுறது?"

"மச்சி நான் சொல்லுறேன்னு தப்பா எடுத்துக்காத. தொழில்னா லாபம் நட்டம் மாறி மாறி தான் வரும். இன்னும் அதிக பணம் போடு. விட்டத எடுத்துடலாம்."

முதலீட்டாளார்களுக்கு :

பலபேரு நிர்வகிக்குற பங்கு வர்த்தகத்துல பணத்த போட்டாலும் சரி; நெருங்கிய நண்பனோட தொழில்ல பணத்த போட்டாலும் சரி, due diligence என்று சொல்லப்படும் சாதக பாதகங்களை அலசிப்பார்க்கும் வேலைய ஆரமத்துல இருந்து ஒவ்வொரு கட்டத்துளையும் சரியா செய்யணும். அதுக்கு தொழில் தெரிஞ்சிருக்கனும்கிறது அவசியம் இல்ல.

அடுத்தவர்கள் முதலீட்டில் தொழில் செய்பவர்களுக்கு : 

பத்துவருசத்துக்கு மேல ஒரு தொழில்ல இருக்க உங்களால தோல்விய முன்கூட்டியே கணிக்க முடியலைனா. நீங்க திறமைசாலி இல்லைன்னு அர்த்தம். தொழில சரியா கத்துக்குரதுல ; தொழில் செய்யுறதுல திறமை இல்ல உங்களுக்கு. 

இல்ல நான் திறமையானவன் தான். இந்த முறை சருக்கிடுச்சுனு சொன்னீங்கன்னா. உங்களுக்கு மலையாளத்துல ஒரு வார்த்தை சொல்லுறேன்.  "மட்டுல்லோரே பட்டிகருது மாஷே..." பட்டிக்காட்டான் மஞ்சப்பை

புத்தி :





சித்த மருத்துவர் கு. சிவராமன் அவர்களுடைய எழுத்துக்களால் உந்தப்பட்டு இயற்க்கை உணவுக்கும்  ; உடற்பயிற்சிக்கும் திரும்பியவர்கள் ஏராளாம்.  

அவருடைய புகைப்படத்தை முன்பே பார்த்திருந்தாலும் கூட, அவருடைய முழு உருவத்தையும் பார்க்கும் வாய்ப்பு அண்மையில் தான் அமைந்தது.

உடற்பயிற்சி பத்தியும் தேவையில்லாத இடை பத்தியும் அவரு சொல்லக்கூடிய விடயங்கள் எனக்கு புடிச்சிருந்தா நான் விறுவிறுன்னு  உடற்பயிற்சி செய்யலாம். இல்ல உடற்பயிற்சி செய்யக்கூடாதுன்னு முடிவுசெஞ்சா அவரோட தொப்பையவே குறு குருன்னு பாத்துகிட்டு உட்காரலாம்.

இது மருத்துவர் ராமதாசு சொல்லும் விடயங்களுக்கும் பொருந்தும். நல்லதுன்னு பட்டா குடிய நிறுத்தலாம் ; தமிழ்ல படிக்கலாம். 

புடிக்கலையா, பா.ம.க. காரன் போற டாஸ்மாக் கடையவும் டாக்டரோட பேர குழந்தைகள் படிக்குற பள்ளிக்கூடத்த  / கல்லூரியையே குறு குருன்னு பாத்துகிட்டு உட்காரலாம்.

திராவிட இயல்பு



முன்னுரை : ரே பள்ளிக்கூடத்தில் ; ஒரே வகுப்பில் ; ஒரே மேசையில் அமர்ந்து ஐந்தாம் வகுப்பு வரை படித்துக்கொன்றிருக்கும் இரண்டு பிள்ளைகளை பிரித்து வெவ்வேறு வகுப்புகளில் அல்லது வெவ்வேறு பள்ளிகளில் சேர்த்தால் இரண்டு குழந்தைகளின் நெஞ்சமும் வாடும். நான் ஒரு பாடத்தை படிக்கிறேன், என் நண்பன் வேறு ஒரு பாடத்தை படிக்கிறான். நாங்கள் இருவரும் வெவ்வேறு திசைகளில் சென்றுவிட்டோம் என்று அவர்கள் நினைக்ககூடும். வெவ்வேறு நண்பர்களோடு ஒன்றுகூடியிருப்பார்கள்.

கால மாற்றத்தில் இருவரும் வளர்ந்து வெவ்வேறு கல்லூரிகளில் படித்து வெவ்வேறு அலுவலகங்களில் வேலை பார்த்து, ஐம்பது வருடம் கழித்து  பழைய மாணவர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் மீண்டும் பார்த்து வெகுநேரம் பேசி பிரியும்போது   அவர்களுக்கு ஒரு உண்மை புலப்படும். "வகுப்பறை ; பள்ளிக்கூடம் ; கல்லூரி ; வாசகங்கள் என்பவை வெவ்வேறாக இருந்தாலும் இருவரும் ஒரே பாடத்தை தான் வெவ்வேறு திசைகளில் படித்திருக்கிறோம்."

சம்பவம் : திருவாசகத்துக்கு இசையமைத்த இளையராஜா, நாத்திகரான ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு இசையமைக்க மறுத்துட்டாராம்.

அதனால, சமீபத்துல யுவன்சங்கர் ராஜா ஒரு முகமதியரை திருமணம் செய்துகொண்டது இளையராஜாவுக்கு நல்ல பாடமாம். இளவு வீட்டுல கூட அரசியல் செய்யும் திராவிடர்கள் சொல்லுகிறார்கள். 

யுவன் மதம் மாறிய விடயமானது எந்த வகையில் இளையராஜாவுக்கு வீழ்ச்சி?

யுவன் சங்கர் ராஜா மதம் மாறி, ஒரு முகமதியரை திருமணம் செய்து கொண்டதை பற்றி ஆத்தீகர்கள் அதிகம் பேசவில்லை. வேறு பள்ளிக்கூடத்தில் சேர்ந்துவிட்ட நண்பன் என்ற அளவில் வாழ்த்துக்கள் சொல்லியிருகிறார்கள். சாபம் கொடுக்கவில்லை. 

ஒருவேளை, "எனக்கு இறை நம்பிக்கையே கிடையாது" என்று சொல்லி திராவிடர்களின் முறையில் சுயமரியாதை இல்லாத திருமணத்தை யுவன் செய்திருந்தால் இறைநம்பிக்கை உடைய இளையராஜாவுக்கு அது ஒரு வீழ்ச்சி என்று எடுத்துக்கொண்டிருக்கலாம். அப்படி எதுவும் நடக்கவில்லையே....

இந்த நிகழ்வை இளையராஜாவின் வீழ்ச்சி என்று கொண்டாடும்   திராவிடர்களின் போக்கை எவ்வாறு எடுத்துக்கொள்வது?

கோவணாண்டி : என் படத்துக்கு நீ இசையமைக்கலையா, உன் வம்சமே விளங்ககூடாதுன்னு நினைக்குற குரூர புத்தி, திராவிடர்களுக்கு எதுக்கு இருக்கு? அப்படியென்றால் இந்து மதத்தை விட இஸ்லாத் மதம் தாழ்வான மதம் என்று கருதுகிறார்களா?

திராவிடர்களின் பதில் : இல்லை, நாங்கள் அப்படி நினைக்கவில்லை,  கடவுளை மறுக்காவிட்டாலும் கூட, சிறந்த மதம் என்று நாங்கள் நினைக்கும் இஸ்லாத்துக்கு யுவன் மாறியிருப்பது என்பது யுவனுக்கும் எங்களுக்கும் எழுச்சி இளையராஜாவுக்கு வீழ்ச்சி என்று கருதுகிறோம். இஸ்லாத்தையோ கிருத்தவத்தையோ என்றைக்காவது நாங்கள் நிந்தித்திருக்கிரோமா? ஏடாகூடமாக கேள்வி கேட்டு எங்கள் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போட்டுவிடாதீர்கள்.

ஆனால் யுவன் சங்கர் ராஜா போன்று பெற்றோரை காயப்படுத்தும் நமக்கெல்லாம் ஒரே ஒரு வார்த்தை தான்.

பெற்றோரை காயப்படுத்தும் பிள்ளை எவ்வளவு உயரத்தை தொட்டாலும் ரணமில்லாத தூக்கத்தை ஒரு இரவு கூட பெற முடியாது. இந்த உண்மையை தெரிந்துகொள்ள யுவன் வேறு எங்கும் போகவேண்டியது இல்லை. அவருடைய புதிய சேத்தாளி வைரமுத்து கிட்டயே கேட்டுக்கலாம்.

~~~ உள்ளத்தில் ரணமிருந்தால் உறவுகள் மலர்வதில்லை ~~~~

செய்தி

காஷ்மீர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடியோ ஒளிபரப்பானபோது ; தில்லி மிருக காட்ச்சி சாலையில் நடந்த சம்பவத்தை வீடியோவில் பார்த்தபோது, பலரும் சொன்ன கருத்து, "வீடியோ எடுத்த நேரத்துல போய் காப்பாத்தலாம்ல?"

நட்பு வட்டத்தில் பலரும் பத்திரிக்கை / ஊடக துறையில் இருக்கிறார்கள்.
அவர்களுக்கான் பணி என்ன என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். இருந்தபோதிலும் சில நேரங்களில் சறுக்கல்கள் நிகழ்வதால் நினைவூட்ட இந்த பதிவு. மூன்று நிகழ்வுகளின் வாயிலாக...

நிகழ்வு ஒன்று : சில மாதங்களுக்கு முன்னாள், எழுத்தாளர் திரு. ஜெயகாந்தனுக்கு பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியை திரு. ராம் தம்பதியினர் நடத்தினார்கள் . அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதாக சொன்ன திரு. வைரமுத்து, வர இயலாத காரணத்தால் காணொளி காட்சி மூலம் பேசினார்.

அந்த நிகழ்ச்சியில் திரு ஜெயகாந்தன் மிக சுருக்கமாக பேசினார். "நிகழ்ச்சிக்கு வர இயலாவிட்டாலும், நம்மைப்பற்றி நினைத்துக்கொண்டு இருப்பவர்கள் அனைவருக்கும் ; இங்கே வந்திருப்பவர்கள் அனைவருக்கும், நன்றி வணக்கம்."

இந்த நிகழ்ச்சியை பதிவு செய்யும்போது, அவரவர் கொள்கையை புகுத்தி பலவாறாக பதிவு செய்யலாம். 

கடவுளுக்கு கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என்று எல்லோருக்கும் விருப்பம் இருக்கும் ஆனால் அந்த பேரினை ஒரு சிலர் தான் பெறுகிறார்கள் ; சிலருக்கு கோவிலுக்கு சென்று வழிபட முடிகிறது ; சிலருக்கு அங்கே செல்லமுடியவில்லை ஆனாலும் நினைவு மட்டும் அங்கேயே இருக்கிறது. ஆனால் கடவுளை பொருத்தமட்டில் வேறுபாடு பார்ப்பதில்லை. அனைவருக்கும் ஒரே மாதிரி தான் அருள் புரிகிறார். அதுபோல திரு. ஜெயகாந்தன் அவர்கள், தன் வாசகர்கள் அனைவரையும் ஒரே மாதிரி தான் பார்கிறார்.

இதையே பாரதிதாசன் பாணியில் சொல்வதென்றால், தான் பெற்ற குழந்தைகளில் ஒவ்வொருவரும் தங்கள் சக்திக்கு ஏற்றவாறு பணிவிடை செய்தாலும் தாயானவள் அனைவரையும் ஒரே மாதிரியாக தான் பார்ப்பாள். அதுபோல எழுத்தாளர் பேதம் பார்க்காமல் நடந்துகொண்டார்.


நிகழ்வு இரண்டு : இந்து மதத்தின் சிறப்பு குறித்தும் மத நல்லிணக்கம் குறித்தும் சிகாகோ நகரத்தில் நடந்த அனைத்து மத மாநாட்டில் புரட்சி துறவி விவேகானந்தர் சிறப்பாக உரையாற்றினார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் தன் உரையை எப்படி துவக்கினார் என்று கேட்டால் நாம் அனைவரும் என்ன சொல்லுவோம்? 

அனைவரும் "Ladies and Gentlemen" என்று பேசியபோது அவர்மட்டும் "Brothers and sisters of Amercia"  என்று பேசினார் என்று சொல்லுவோம். காலம் காலமாக இப்படியே சொல்லிவந்தார்கள்.  அண்மையில் நடந்த விழாவின் மூலன் நான் அறிந்துகொண்டது என்னவென்றால், அவர் "Sisters and brothers of Amercia"  என்று தன் உரையை துவக்கி உள்ளார். 

"இரெண்டும் ஒன்று தானே. என்ன வேறுபாடு?" என்று கேட்கிறீர்களா... 
இந்த தேசத்தை சேர்ந்தவர்கள், பெண்களை அடிமை போல நடத்துகிறார்கள் என்று தொடர்ந்து பரப்புரை செய்யப்பட்டு வந்துள்ளது. விதவைகள் மறுமணத்தை விவேகானந்தர் எதிர்த்தார் என்று கட்டுரை எழுதுகிறார்கள்.

நிகழ்வு மூன்று : முல்லை பெரியாறு குறித்த செய்தியை பதிவு செய்யும்  ஒவ்வொரு முறையும் "புதிய தலைமுறை" இதழ் பிழை செய்கிறது.

அந்த அணையை கட்டுவதற்கு திட்டம் தீட்டியவர் யார் என்பதை நன்றாக தெரிந்திருந்தபோதிலும் தொடர்ந்து இருட்டடிப்பு செய்துவருகிறார்கள்.

திரு. ஜான் பென்னிகுவிக் செய்த அளப்பெரிய சாதனையை யாரும் மறுக்கமுடியாது. ஆனால், ஏதோ பஞ்சம் வந்து பலரும் செத்ததற்கு பின் தான் ஆங்கிலேயர்கள்  திட்டம் தீட்டியது போல பதிவு செய்கிறார்கள். ஆனால் பஞ்சம் வருவதற்கு முன்னமே ஒரு தமிழனால் திட்டம் தீட்டப்பட்டது. 



ஒரு இடத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்ட அல்லது பிழையாக பதிவு செய்யப்படும் செய்தி தொடர்ந்து நகல் எடுக்கபடுகிறது. கடந்த செய்வாய் அன்று பெங்களுரு தீர்ப்பை பதிவு செய்தது போல. உண்மை உடனடியாகவோ அல்லது சற்று காலம் தாழ்ந்தோ வெளியில் வந்துவிடும்.
நடந்ததை, நடந்தவிதமாக ; ஒருவர் சொன்னதை, சொன்ன விதமாக பதிவு செய்வது நல்லது. நம் கருத்துக்களை புகுத்தி, செய்தியை செய்தியாக அல்லாமல் திரைக்கதை வசனமாக எழுதுவதென்பது பத்திரிகை தர்மத்தை மீறிய செயல் மட்டும் அல்ல, நம் செய்தியை படிப்பவர்களை ; நாம் நடத்தும் நிகழ்ச்சியை பார்ப்பவர்களை அவர்களின் அறிவை ஏளனம் செய்வதாக அமையும்.

நிறைவாக, செய்தியை படிக்கும் ; நிகழ்ச்சியை பார்க்கும் நம் கடமை என்ன? தொலைகாட்சி பெட்டியின்  முன்னாள் உட்கார்ந்து கொண்டு, அதை அப்படி செய்திருக்கலாம் இப்படி செய்திருக்கலாம் என்று சொல்லுவது எளிது. மெய்ப்பொருள் காண்பது அறிவு ; பொறுப்புணர்ந்து நடக்க வேண்டும் நாம்.

தள்ளாட்டம்

இங்குட்டு நான். வருடத்துல எல்லா நாளையும் கொண்டாடனும்னு நினைக்குறேன். இல்லாட்டி பொங்கல் ; பிறந்தநாள் ; திருமண நாள் கொண்டாடுனா போதும்னு. தமிழல்லாத வார்த்தைகளை மாத பெயர்களாகவும் வருட பெயர்களாகவும் இருக்குற ஒரு ஆண்டு முறைய கொண்டாடவேண்டாம்னு நினைக்குறேன். தேசபக்தீங்குற போர்வைல கிரிக்கட் மூலமா கொள்ளை அடிகுரானுங்க அத புரக்கனிகனும்ன்னு கோவத்தோட நான். சினிமாவ சினிமாவா மட்டும் பாத்தா போதும் அவன தலைவனா கொண்டாடவேண்டாம்னு நினைக்குறேன்.

அங்குட்டு நண்பர்கள் ; உறவினர்கள் ; சொல்லிக்குடுத்த பெரியவங்க. 

புரட்டு இதிகாசமான மகாபாரதத்துல வரக்கூடிய கற்பனை கதாப்பாத்திரமான அர்ஜுனனுக்கு வந்த அதே நிலைமை எனக்கு. பாக்கலாம் யாரு சொல்லுற உண்மைக்கதை எனக்கு தெளிவ கொடுக்குதுன்னு.


13 ஏப்ரல்


எண்ணைக்காக நிலத்துக்கு அடியிலையும் கடலுக்கு அடியிலையும் அதிகமா தோண்டுறதால தான் இயற்க்கை சீற்றங்கள் வருது. நேத்து நில நடுக்கம் வந்ததும் ஒரே குற்ற உணர்ச்சியா போச்சு. வேற கம்பெனி மாறிடலாமான்னு யோசிச்சேன். ஒரே குழப்பமா இருந்துச்சு.

அப்ப தான் தற்ச்செயலா சில STATUS பார்த்தேன். ஒரு தெளிவு வந்துச்சு. நாம ஒரு ஆளு கம்பெனி மாறுனா இந்த பிரச்சனையை முடிஞ்சுடுமா? அதனால தொடர்ந்து இந்த கம்பன்ய்லையே இருக்கலாம்னு முடிவுபண்ணீட்டேன். 

எனக்கு ஒரு தெளிவை கொடுத்த அந்த STATUS : "தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியிருந்தா மட்டும் போர் முடிவுக்கு வந்துருக்குமா?"


12 ஏப்ரல்

தானே

காதலைப்போலவே நாட்டுப்பற்றும் வயசுக்கோளாறுதானோ...

குஜராத்ல பூகம்பம் ஏற்ப்பட்டபோது வந்த செய்திகள் நெஞ்சை உலுக்கின. மொழி தெரியாது ஆனாலும் நேர்ல போய் நம்மளால முடிஞ்சத செய்யணும்னு மனசு துடிச்சது. 

ஆனா நம்ம ஊருல சுனாமி வந்தப்ப வீட்டைவிட்டு வெளியவே வரல.

இப்ப தானே புயல் தாக்கி சின்னாபின்னம் ஆகிருக்கு கடலூர். போட்டோவுக்கு போஸ் கொடுக்குரதுக்காவது அரசியல்வாதிகள் போனாங்க. ஆனா நாம இன்னம் ஒரு எட்டு போய் பாக்கல. Facebook ல முதலை கண்ணீர் வடிக்குரதோட சரி.

வரலாறு

அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்களை படிக்கின்றபோது, கமல் படம் பார்ப்பது போல் உள்ளது.

அந்த தலைவர் மட்டும் சிறந்தவர் போலவும் சமகாலத்தில் வாழ்த்த மற்ற தலைவர்கள் எல்லாம் எதோ dummy piece போலவும் வந்து செல்கிறார்கள்.


15 பிப்ரவரி
posted in Facebook