நுங்கம்பாக்கம் இரயில் நிலையம்!

நுங்கம்பாக்கம் இரயில் நிலையம்


இரண்டு வாரத்துக்கு முன்னால ஒரு நாள் share auto ல போய்கிட்டு இருந்தேன். பைய தடவி பாத்தா ஒரே ஒரு 500 ரூபா மட்டும் இருந்தது. நான் கொடுக்க வேண்டியது 10 ரூபா. எப்படியும் ஆட்டோ காரர் கழுவி கழுவி ஊத்துவாரு. அதனால நானே முந்திக்கிட்டு அவர் கிட்ட சொன்னேன். அன்னே கைல சில்லறை இல்லை நீங்க சில்லறை இருக்கானு பாருங்க... நினச்ச மாதிரியே கழுவி கழுவி ஊத்துனாரு... இறங்க வேண்டிய நுங்கம்பாக்கம் இரயில் நிலையம் வந்துடுச்சு... ஒன்னு நான் அந்த ஆட்டோலையே போய் கடைசி நிறுத்தத்துல இறங்கி சில்லறை மாத்தி கொடுக்கணும் இல்ல நடு ரோட்டுல இரண்டு பேரும் ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பாத்துகிட்டே இருக்கணும். பின்னாடி உட்கார்ந்திருந்த மாமி 20 ரூபா தாள என்கிட்டே கொடுத்தாங்க... இவா எப்பவும் இப்படி தான் செய்வா..நாம என்ன வேணும்னேவா சில்லறை இல்லாம வாரோம். உங்களுக்கும் சேர்த்து இத கொடுத்துடுங்க. வேற யாருக்காவது இப்படி தேவைப்பட்டா நீங்க ஒரு நாள் கொடுங்க... பதிலுக்கு காத்திருக்காம அந்த மாமி போய்ட்டாங்க...

மாமி என்ன கோத்திரம்... வடகலையா  தென்கலையானு தெரியல... ஆனா தினமும் ஒரு 50 ரூபாய்க்கு சில்லறை இல்லாம நான் வெளில கிளம்புறது இல்ல...

இன்னொரு நாள் காலைல சாப்பிடாம போய்ட்டேன் லேசா தலை சுத்துற மாதிரி இருந்துச்சு...பக்கத்துல இருந்த ஒரு அன்பர் உடனே அவரோட தண்ணி பாட்டிலை நீட்டி குடிக்க சொன்னாரு...(என் பையிலையே தண்ணி பாட்டில் துருத்திகிட்டு இருந்தாலும் கூட)

ஆணோ பெண்ணோ நுங்கம்பாக்கம் மட்டும் இல்ல, எந்த இரயில் நிலையமா இருந்தாலும் எல்லாரும் நம்ம வீட்டு ஆளா நினச்சு அவசரத்துக்கு உதவ தான் செய்யுறாங்க. எனக்கே இப்படின்னா பெண்களுக்கான எப்படி உதவுவாங்கனு சொல்லத்தேவை இல்லை...அதனால, ஏதோ ஒரு நாதாரி எதோ செஞ்சுட்டாங்குறதுக்காக பாதுக்காப்பு இல்லாத இடம்னு எல்லாரும் சொல்ல தேவை இல்லை...

அலுவலகம் செல்லும் நேரத்துல மகளிர் மட்டும் இரயில் ஓடுது... கூட்டம் எவ்வளோ குறைவா இருந்தாலும் ஒவ்வொரு பெட்டிக்கும் ஒரு பெண் காவலர் இருக்காங்க...

இதை ஏன் நான் இப்ப சொல்லுறேன்னா... அப்ப சொல்லிருந்தேன்னா அரசாங்கத்துக்கு ஆதரவா பேசுறேன்னு எல்லாரும் சேர்ந்து beatle வாசிச்சிருப்பீங்க... 

குறிப்பு : அப்படினா அன்னைக்கு ஏன் யாரும் உதவலைன்னு கேட்டீங்கன்னா... இப்பயும் பாருங்க இத படிச்சிட்டு இரண்டு பேரு கேள்வி கேப்பாங்க..."அந்த மாமிய உனக்கு முன்னமே தெரியுமா..அவங்க எப்படி இருந்தாங்க..."

No comments:

Post a Comment