தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 2

தமிழக அரசியல் ; கட்சிகள் மற்றும் தேர்தல்கள் பற்றி புரிந்து கொள்வதென்றால் தமிழர்களின் அடிப்படை குணத்தை புரிந்துகொள்ள வேண்டும். யாருக்கும் அடிபணிய விரும்பாதவன் ; தன்னை நம்பி வருபவர்களை எப்பாடுபட்டாவது பாதுகாப்பவன் ; அற நெறி தவறாதவன். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று வாழ்பவன்.

பிறமொழிகளுக்கு தாயானவனாகிய காரணத்தால் இப்படிப்பட்ட குணங்கள் கொண்டது இயல்பானது. வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று அனைவரையும் இங்கே அனுமதித்தான். நாட்டின் விடுதலைக்கான முன்னெடுப்பு இங்கிருந்து தான் துவங்கியது.

"எங்கிருந்தோ வந்தவன் இங்கே பேயாட்சி செய்கிறானே" என்று சினம் கொண்டு ஆங்கிலேயனை விரட்ட அவன் எடுத்த முயற்சிகளை கண்டபோது ; புலம்பெயர்ந்து வந்து இங்கே குடியேறி இருந்தவர்களில் ஒரு பகுதியினர் (கட்சிகள் எல்லாம் பிறப்பதற்கு முன்பே) தமிழர்களோடு சேர்ந்து நாட்டின் விடுதலைக்கு போராடினார்கள். கட்சிகள் பிறந்த காலத்தில் அவர்களில் அநேகம் பேர் காங்கிரஸ் கட்சியிலும் ; பொது உடமை கட்சியிலும் இருந்தார்கள்.

"நம்பிக்கை" என்ற வார்த்தைக்கு பொருள் தெரியாத மற்றொரு பிரிவினருக்கு தேவையற்ற சந்தேகம் உண்டானது. அதன் பொருட்டு, அவர்கள் மீது தாக்குதல் ஏதும் ஏற்ப்படாமல் இருக்கவும் தங்களை இங்கேயே நிலைநாட்டிக்கொள்ளவும் அவர்களில் ஒருபகுதியினர் எடுத்த முன்னெடுப்பு தான் நீதி கட்சி. அதனால் ஆங்கிலேயரோடு சேர்ந்து துரோக செயல்கள் புரிந்தார்கள். திரிவடுகம் என்ற பகுதியில் இருந்து வந்த அவர்கள், தங்கள் பகுதியின் பெயரையே கட்சிக்கு வைத்தார்கள். பாவம், கன்னடத்தையும் மலையாளத்தையும் தாய்மொழியாக கொண்டவர்கள், தமிழர்களை போலவே..

1 comment:

  1. திரிவடுகம் எங்குள்ளது?

    ReplyDelete