தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 19

சமசீர் கல்வி Vs CBSE 

அலுவலகத்துல ஒருத்தர் சொன்னார், "சமச்சீர் கல்வி இருக்கட்டும். CBSE ல படிச்சவன் எல்லாம் பெரிய வேலைகள் பாப்பான். அடிமை வேலை பாக்க ஆளுவேனாமா?" இன்னைக்கு பல பள்ளிக்கூடங்கள் CBSE பள்ளிக்கூடங்களா மாத்துறாங்க. கேட்டா அதுக்கு தான் பெற்றோர்களும் மாணவர்களும் விருப்பம் தெரிவிக்குறாங்க. எதுக்கு DEMAND இருக்கோ அத தான நாங்க கொடுக்க முடியும்.

CBSE ல என்ன சிறப்புன்னு கேட்டா, எல்லாத்தையும் மனப்பாடம் செய்ய வேண்டியது இல்ல; புரிஞ்சு படிப்பாங்க. சுயமா எல்லாத்தையும் எதிர்கொள்ள கூடிய உறுதி கிடைக்கும். IIT மாதிரி பெரிய கல்விக்கூடங்கள்ள படிக்க முடியும். அவங்களோட நுழைவு தேர்வுல வெற்றி பெற முடியும். வேலைவாய்ப்புகள் லேசா கிடைக்கும். இப்படி தான் நிறைய பேரு சொல்லுறாங்க.

ஆனாலும் IIT ல அடிக்கடி தற்கொலைகள் நடக்குது. அப்படினா CBSE உருவாகுன மன உறுதி என்ன ஆச்சு? படிக்கும் போதே இப்படினா...நல்லா ஆங்கிலத்துல படிக்கணும்னு சொல்லி தான் கும்பகோணத்துல MATRICULATION பள்ளிகூடத்துல எல்லாரும் சேர்த்தாங்க. இன்னைக்கு வரைக்கும் அந்த கொலைக்கு காரணமானவங்க தண்டிக்க படல. 

வீட்டுக்கு பக்கத்துல இருக்க பள்ளிக்கூடத்துல படிச்சாலே பாதி உயிர் இழப்புகள தடுக்கலாம். அரசாங்கம் மட்டுமே கல்விய கொடுக்க முடியாது எல்லாருக்கும் பரவலா கல்வி கிடைக்கணும்னு சொல்லிதான தனியார் கிட்ட கல்விய கொடுத்தாங்க. ஆனா தனியார் பள்ளிகளோட நலனை மட்டுமே மனசுல வச்சு அரசாங்கங்கள் செயல்படுதே.

தண்ணி கேன் வித்தவங்கலையே கட்டுபடுத்த முடியாம அத மறைக்க தான வாட்டர் பாட்டில் விக்குது அரசு. பள்ளிக்கூடங்கள கட்டுப்படுத்த முடியுமா இவங்களால. கேட்டா Iron Lady அது இதுன்னு சொல்லுவாங்க.

No comments:

Post a Comment