தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 14

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 14

"காமராசர் எல்லாம் படிச்சுட்டா அரசியலுக்கு வந்தாரு?". ஒத்த வசனத்த வச்சுகிட்டு எத்தன பேரு அரசியலுக்கு வந்துருக்காங்க. இதே போல இன்னும் எத்தன வருஷத்துக்கு படிக்காதவங்கள விடபோறோம்.

படிக்காதவங்கள லேசா எடைபோடாதீங்க. படிச்சவங்களுக்கு அனுபவ அறிவு கிடையாது ஆனா படிக்காதவங்களுக்கு அனுபவ அறிவு அதிகம். ஒருவேளை இந்த தர்க்கம் உண்மைனா, பட்டத்து மேல அவங்களுக்கு எதுக்கு இவ்வளவு மோகம்.

படிக்கலைனாலும் எங்களால நல்ல ஆட்சிய தர முடியும்னு சொல்லுறவங்க எதுக்காக பேருக்கு முன்னாலையும் பின்னாலையும் படிக்காத பட்டத்த போட்டுக்கணும். MGR கருணா ஜெயா எல்லாரும் டாக்டர். படிச்சு ; ஆராய்ச்சி செஞ்சு டாக்டர். வாங்குறவங்க எல்லாத்தையும் அசிங்கபடுத்துற வேலை இல்லையா? 

மாணவர் இயக்கங்களின் போராட்டங்கள் மூலமா (மூலியமா ; முனியம்மா இல்ல) ஆட்சிக்கு வந்த திராவிட கட்சிகள் சார்பா முதல்வரா இருந்தவங்கல்ல மூணு பேரு படிக்குரதுக்காக கல்லூரிக்கு போயிருக்காங்க. திருவாளர்கள் அண்ணாதுரை ; நெடுஞ்செழியன் ; ஓ. பன்னீர் செல்வம்.

கடைசியா நடந்த 2014 நாடாளுமன்ற தேர்தல்ல போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்துகிட்ட கொடுத்துருக்க படிப்பு விபரத்துக்கும் கட்சி சார்பா வெளியிட்ட வேட்பாளர் பட்டியல்ல இருந்த பட்டத்துக்கும் நிறைய வித்யாசம். எப்ப வயசு அடிப்படைல BA பரீட்சை எழுதி பட்டம் பெரலாம்னு பல்கலைகழகம் அறிவிச்சதோ அன்று முதல் எல்லாரும் பேருக்கு பின்னால் BA அதுக்கு மேல ஒரு கோட போட்டுகிட்டாங்க. இப்ப நடக்கபோற தேர்தல்ல உங்க தொகுதில நடக்குற இது மாதிரியான கூத்துக்கல பாருங்க.

தேர்தல் கால சுவரோட்டில இதுபோல தில்லு முள்ளு இருந்தா தேர்தல் ஆணையத்துகிட்ட புகார் கொடுத்தா என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பாங்கன்னு தெரியல.

No comments:

Post a Comment