தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 13

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 13


படிக்குற பசங்களுக்கு மத்த வேலை எல்லாம் எதுக்கு. கல்லூரிக்குள்ள இயக்கங்கள் எதுக்கு? ஏன். அப்படி இயங்குனா என்ன? எப்பதான் சமூக பொறுப்ப உணருறது? 

தமிழகத்துல சட்ட கல்லூரில என்ன நடக்குது. மத்த கல்லூரிகள்ல ஏன் அப்படி இல்ல? தன் எழுச்சி போராட்டங்கள் வெற்றி பெரும் (அண்மைக்கால் உதாரணம்  முல்லைபெரியாறு ; மீதேன்) அது போதும். வெளி ஆட்கள் (கட்சி ; சாதி எதுவா  இருந்தாலும்) தூண்டுதல் மூலமா  நடக்குற எந்த இயக்கமா இருந்தாலும் அதனால கண்டிப்பா நல்லது நடக்காது..

அலுவலக நண்பர் ஒருத்தர் அடிக்கடி சொல்லுவாரு. அவரோட தந்தை பொறியியல் படிப்புல இறுதி ஆண்டுக்கு முந்தய ஆண்டுல இருந்தப்ப, போராட்டங்கள்ல கலந்துகிட்டதால படிப்ப பாதிலயே விடவேண்டியதா போய், கடைசீல திரும்ப முதல்ல இருந்து வேற படிப்ப படிச்சுட்டு காலம் கடந்து எல்லாமே நடந்துருக்கு. இந்தி எதிர்ப்பு போராட்டத்துல பங்கெடடுத்துகிட்ட திரு. செல்வநாயகம் சொல்லுறாரு... "உமிய நெல்லுனு நம்பவச்சாங்க".

கல்லூரில படிக்கும் போது செல்வி ஜெயலலிதா வோட ஒரு வழக்குல அவங்களுக்கு எதிரா தீர்ப்பு வந்தது. வேளாண்மை கல்லூரி மாணவிகள் மூணு பேர உயிரோட எரிச்சாங்க அ.தி.மு.க. காரங்க. எங்க கல்லூரில எல்லாரும் கொதிச்சு போய்ட்டாங்க. எல்லாரும் போராடணும்னு குரல் வலுத்துசு. என்ன செய்யுறதுன்னு தெரியல. காந்தி பிறந்த நாடாச்சே. அஹிம்சை வழில போராடலாம். 

எல்லாரும் ஊர்வலமா போய், நோகாம, கலக்டர் கிட்டையோ கமிஷனர் கிட்டையோ ஒரு மனுவ கொடுக்கலாம்னு முடிவு செஞ்சாங்க. நிறைய பேரு கிளம்பினோம். அதுக்குள்ள தி.மு.க. அரசாங்கம் கல்லூரிகளுக்கு விடுமுறை கொடுத்துருச்சு. சேர வேண்டிய இடத்துக்கு போய் சேரும்போது பாதி பேர காணோம். கல்லூரிக்கு / துறைக்கு ஒருவர்னு அந்த மணுல கையெழுத்து போடலாம்னு சொன்னதும் மீதி பேர காணோம்.

மாணவர் எழுச்சியால தான தி.மு.க. மேல வந்தாங்க. ஆனா அவங்க ஆட்சிக்கு வந்ததும் மாணவர் இயக்கங்கள ஏன் வளர விடல. கலைஞரோட பராசக்தி வசனத்துலையே சொல்லுரதுனா, தன் பசிக்கு சாப்பிட்டு தடாகத்த சுத்தம் செய்யுற மீன் மாதிரி, மாணவர்களின் எதிர்காலம் கருதி அரசாங்கம் எடுத்த நடவடிக்கையால, ஆட்சியாளர்கள் நலனும் காப்பாத்தபட்டது. விட்டா அவங்க ஆட்சி கவுந்துரும்னு நல்லா தெரியும்.


No comments:

Post a Comment