தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 12




டேய் இந்த வருஷம் நம்ம கிளாஸ்க்கு Social Science எடுக்கபோறது யாருன்னு உங்களுக்கு தெரியுமா?. பாண்டியராஜன் சார். அவரு ரொம்ப கோபகார ஆளு. அவருக்கு கோபம் வந்ததுனா என்ன செய்யுவாரு தெரியுமா ; முதல்ல கண்ணாடியையும் ரிஸ்ட் வாட்ச்சையும் கழட்டி மேசை மேல வைப்பாரு ; அடுத்து முழுக்கை சட்டைய அரை கை சட்டையாட்டம் மடிச்சு விட்டுப்பாறு. அடுத்து பிரம்ப கைல எடுத்தாருணா அது சுக்கு நூறா நொருங்குற வரைக்கும் விட மாட்டாரு. அப்பா அம்மான்னு என்ன கதறினாலும் மனசு இறங்க மாட்டாரு.



இத கேட்டதுல இருந்து சார் கிளாஸ்க்கு வர்றாருனாலே எல்லாரும் அமைதியா இருப்போம். ஒரு நாள் சயின்ஸ் சார் வரல. எல்லாரும் ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்தோம். அந்தபக்கமா வந்த பாண்டியராஜன் சார், கிளாஸ்ல வாத்தியார் யாரும் இல்லாதத பாத்துட்டு உள்ள வந்தாரு. நான் இன்னைக்கு கிளாஸ் எடுக்குறேன்னு சொல்லீட்டு சிவிக்ஸ் பாடம் எடுக்க ஆரம்பிச்சுட்டாரு. என்னடா இது free hourல  இவருவந்துட்டாறேனு எல்லாத்துக்கும் ஒரே கடுப்பா போச்சு. அவரு பாடம் எடுக்கும்போது நான் பாட்டு புக் வச்சு படிசுகிட்டு இருந்தேன் கண்டுபுடிச்சுட்டாரு.

அவரோட மேசைக்கு பக்கத்துல கீழ உட்கார சொன்னாரு. free hourல கிளாஸ் எடுத்ததால கொஞ்சம் கெடுபிடி குறைவா இருந்தது. நம்ம சட்டமன்றம் பத்தி பேச்சு வந்தது. எல்லாரும் கொஞ்சம் குஷில கத்த ஆரம்பிச்சுட்டாங்க. "எல்லாரும் அமைதியா இல்லைனா சார் வெளிநடப்பு செய்வாரு" கூட்டத்துல நான் இப்படி சொன்னேன். அந்த நேரம் பாத்து எல்லாரும் அமைதியா இருந்துட்டாங்க. நான் பேசினது மட்டும் தெளிவா சத்தமா கேட்டுடுச்சு. இன்ணைக்கு நாம செத்தோம்னு மனசுல தோனுச்சு.

இப்படி தான் சட்டமன்றத்துல எல்லாரும் நடந்துக்குறாங்க. நீங்களும் நாளைக்கு அதே மாதிரி நடந்துக்காதீங்கனு சொல்லீட்டு. பாடத்த முடிசுட்டாறு. அன்னைக்கு கிளாஸ் முடியுற வரைக்கும் (attendance எடுக்குறப்ப கூட) சார் அவரோட இருக்கைல உட்காரவே இல்ல. எவ்வளோ பெரிய தப்பு செஞ்சிருந்தா அந்த பையன, பிரம்பு நொருங்குற வரைக்கும் அடிச்சிருப்பாரு.

இப்படி தான் பல வாத்தியார்கள் பத்தி யாராவது ஏதாவது கத கட்டி விட்டுடுவாங்க. நாமளும் நம்பிடுவோம். ஆனா பழகி பாத்தா வேற மாதிரி இருக்கும்.

No comments:

Post a Comment