தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 11

"நல்லதுக்கு போகலைனாலும் பரவா இல்ல ஆனா கெட்டதுக்கு கண்டிப்பா போகணும்." இது நம்ம ஊரு வழக்கம். ஆனா இங்க சாவுங்குறது அனுதாபம் தேடுறதுக்கும் ; எந்த சாவுக்கு போனா வோட்டு நிறைய கிடைக்கும்னும் கணக்கு செஞ்சு போறதா இருக்கு.

வாழ்ந்த காலம் வரை ஒருவருடன் மல்லுக்கட்டுவது. அவர் இறந்ததும் நேரம் பார்த்து ஆதாயத்துக்கு போய் ஒட்டிக்கொள்வது. உதாரணத்துக்கு எடுத்துக்கிட்டா எங்க மாவட்டத்துல ஒரு பெரியவர் தி.மு.க. வோட மாவட்ட செயலாளரா இருந்தாரு. இன்னொருத்தரு அ.தி.மு.க. ல இருந்தாரு. சரியா பெரியவர் இறந்த நாள் அன்று அங்கே வந்து தன்னுடைய இருப்பை தக்கவைத்துக்கொண்டார் ; இன்றுவரை. இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் பல உதாரணங்கள் இருக்கும்.

அண்மையில் சில மாதங்களுக்கு முன்பு திரு.வை.கோ. அவர்களின் தாயார் இயற்கை எய்தினார். அதே காலத்தில் தான் புதுவை முதல்வர் திரு. ரங்கசாமி அவர்களின் தாயாரும் இறைவனடி சேர்ந்தார். முதல் செய்தியை அத்தனை பத்திரிக்கைகளும் ஊடகங்களும் பதிவு செய்தன. இரண்டாவது செய்தி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கலைஞர் வீட்டில், அவரது உறவினர் ஒருவர்  சில மாதங்களுக்கு முன் இறந்தார். அதனை எல்லா ஊடகங்களும் பதிவு செய்தன. எந்த அளவுக்கு பதிவு செய்தன என்றால், மைய அமைச்சர் திரு. பொன். ராதா அவர்கள் சில வாரங்கள் அல்லது மாதம் கழித்து துக்கம் விசாரிக்க போனது வரை. 

திரு அப்துல் கலாம் அவர்கள் மறைந்தபோது, மரியாதை செலுத்த செல்வி. ஜெயலலிதா மற்றும் கலைஞர் ஆகியோருக்கு நேரம் கிடைக்கவில்லை. ஆனால் பழம்பெரும் நடிகை மனோரமா அவர்களுக்கு மறைவுக்கு மரியாதை செலுத்த இருவருக்குமே நேரம் கிடைத்தது.


திரு. மிகு. அப்துல் கலாம் அவர்கள் எல்லா மத நூல்கள் குறித்தும் பேசி இருக்கிறார். அதனால் தான் ப.ஜ.க. அவரை அதிபர் தேர்தலில் முன்னிறுத்தினார்கள். அவ்வாறு அல்லாமல் யுவன் ஷங்கர் ராஜ போலவோ அல்லது ரஹ்மான் போலவோ அல்லது உமா ஷங்கர் போலவோ இருந்திருந்தால் கண்டிப்பாக கலைஞர் மரியாதை செலுத்த சென்றிருப்பார்.

No comments:

Post a Comment