தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 10



அடுத்ததாக திரு. விஜயகாந்த். இதுவரை குற்றச்சாட்டுக்கு ஆளாகாதவர். முதல்வர் ஆனால் MGR போல சிறப்பாக செயல்படுவார் என்று சாமானியர்கள் பலரும் நம்புகிறார்கள் என்று ஊடகங்கள் ஒரு பிம்பத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

எதிர்க்கட்சி தலைவர் என்கிற பதவி பறிபோக கூடாது என்பதற்காக கடைசி நேரம் வரை தன் கட்சியை விட்டு போனவர்கள் மீது சபாநாயகரிடம் நடவடிக்கை எடுக்க கோர வில்லை. நிச்சயமாக இது ஒரு சிறந்த குணம் தான். ஆனால் அந்த பதவியை வைத்து ஏதாவது உருப்படியாக செயல்பட்டாரா என்றால்... அதுபோன்ற எண்ணிக்கை மற்றும் பதவி எதுவுமே இல்லாமல் திரு. ராமதாசு அவர்கள் மக்கள் மன்றத்தில் சிறப்பான பெயரை எடுத்தாரே. ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி தலைவராக செயல்படாதவர் வேறு பொறுப்புகளை எப்படி கையாள்வார்?

மக்கள் நல கூட்டணியை தெலுங்கர் நல கூட்டணி என்று சொல்லுவதன் மூலமாக, நாம் அனைவரும், மீண்டும் கலைஞர் கட்சியையும் ; ஜெயலலிதா கட்சியையும் தமிழர் கட்சிகளாக ஏற்றுக்கொள்கிறோமா?

சில வருடங்களுக்கு முன்னாள் திரு. வை.கோ. அவர்கள் சூளுரைத்தாரே  நினைவில் இல்லையா? "திராவிடத்தை எப்பாடு பட்டாவது நாம் காப்பாற்ற வேண்டும். தேவைப்பட்டால் திராவிட கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும்."

வை.கோ. மற்றும் விஜயகாந்த் ஆகியோருக்கு ஒரே குறிக்கோள் தான். தமிழர் கட்சிகளுக்கு ஊடக வெளிச்சம் கிடைக்க கூடாது ; திரிவடுகத்தை காப்பாற்ற வேண்டும். இரண்டு கட்சிகளையும் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவுக்கு பின்னும் காப்பாற்ற வேண்டும். அவ்வளவே...

No comments:

Post a Comment