தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 52

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 52

கேரளத்திலும் ஆந்திரத்திலும் ஏன் திராவிடவாதம் இல்லை?

திராவிட இனவாத சித்தாந்தம் என்பது பல்வேறு மொழி,சாதிபேதங்கள் கொண்ட பிராமணரல்லாதார் அனைவரும் பிராமணர்களுக்கு எதிராக ஒருங்கிணைவதற்கான ஒரு பொது அடையாளமாகவே முன்னெடுக்கப்பட்டது. கேரளாவில் நாயர்களும் ; ஆந்திரத்தில் ரெட்டிகளும், பிராமணர்களிடம் இருந்த மேலாதிக்கத்தை உடைத்து அதிகார பீடத்தை பிடித்தார்கள் அதனால் அங்கே திராவிடவாதம் இல்லை என்று எழுத்தாளர் ஜெயமோகன் கூறுகிறார். 

அவர் மேலும் சொல்லுகிறார், "பிராமணரல்லாத உயர்சாதியினரான நாயர்களும் ரெட்டிகளும் ஜனநாயக அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளுமளவுக்கு எண்ணிக்கை பலமும் கொண்டவர்கள் என்பதை கவனிக்கவேண்டும். தமிழ்நாட்டில் அப்படி அல்ல நிலைமை. பிராமணரல்லாத உயர்சாதியினர் எண்ணிக்கைபலமற்றவர்கள்."

ஒருவேளை  இவர் சொல்லுவது போல பிராமணரல்லாதார் ஆட்சியை பிடிப்பதற்கான இயக்கம் என்றால் கேரளா ஆந்திரா கர்நாட்டகா போலவே தமிழகத்தில் பலகாலமாக பிராமணர் அல்லாத  அரசு தானே இருந்தது (காமராசர் to கருணாநிதி). இருந்தாலும் அந்த இயக்கம் தமிழத்தில் ஏன் மறைய வில்லை.

ஆந்திரத்தில் ரெட்டிகளுக்கும் கேரளத்தில் நாயர்களுக்கும் இருந்தது போன்ற எண்ணிக்கை பலம் தமிழ் நாட்டிலும் கர்நாடகத்திலும் இருந்த பிற்ப்படுத்தபட்டவர்களுக்கு இல்லை என்ற வாதம் சரி என்றால் கர்நாடகத்தில் ஏன் அந்த திராவிட வாதம் புறம்தள்ளபட்டது.

ஆந்திரத்திலும் ; கேரளத்திலும் ; கர்நாடகத்திலும் பூர்வ குடிகள் மற்றும் அயலவர்கள்  ஆகியோருக்கான வேறுபாட்டை மக்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள். ஆனால் தமிழகத்தில் தமிழக தலைவர்கள்  தேசியவாதம் பேசினார்கள்.  எண்ணிக்கை பலம் கொண்ட பிற்ப்படுத்தபட்டோர்  அனைவரும் தேசியவாதத்திலும் திராவிடவாதத்திலும் மதி மயங்கி இருந்தார்கள். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற என்னத்தை உலகிற்கு உரைத்த இனமாக இருந்த காரணத்தால் யாரையும் எளிதில் நம்பினார்கள்.

ஆக மொத்தத்தில் பூர்வகுடிகளுக்கும் வந்தேரிகளுக்கும் இடையிலான போராட்டமாக மற்ற மாநிலங்களில் பார்க்கப்பட்டபோது இங்கே அயலவர்கள் ஊடுருவுவதற்கும் அவர்கள் நிலைபெருவதர்க்குமான இயக்கமாக இருந்து வந்துள்ளது. கர்நாட்டகத்தில் இருந்தும் கேரளத்தில் இருந்தும் தமிழகத்தில் ஊடுருவியவர்கள் எண்ணிக்கை என்பது ஆந்திரத்தில் இருந்து ஊடுருவியவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது குறைவு.

அதேபோல தமிழகத்தில் இருந்து அந்த மூன்று மாநிலங்களில் ஊடுருவியவர்களின் எணிக்கை சொற்பம். குறிப்பாக சொல்வதென்றால் திரிவடுகத்தில் இருந்து தமிழ்  நாட்டில் ஊடுருவியவர்களின் எனிக்கையோடு ; தமிழ்நாட்டில் இருந்து திரிவடுகத்தில் குடியேறிய தமிழர்களின் இனிக்கையை ஒப்பிட்டு பார்த்தால் மிகவும் குறைவாக இருக்கும். அதிலும் கூட பலர் தமிழை தாய் மொழியாக கொண்டிராதவர்கலாக இருப்பார்கள்.

ஒவ்வொரு முறை காவேரி பிரச்சனை வரும்போதும், "நிதானமாக முடிவெடுக்க வேண்டும் அங்கு இருக்கும் தமிழர்களுக்கு  எந்த சிரமமும்  வந்து விடக்கூடாது" என்று கலைஞர் பேசுவது எதற்க்காக?

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 53




செம்மர கடத்தலில் ஈடுபடுபவர்களை தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக நாம் ஆதரிக்கலாமா? விசாரணை திரைப்படம் பார்த்துவிட்டு ; தமிழர்களாக தங்களை முன்னிறுத்தி ஆந்திர காவல் படுகொலைக்கு ஆதரவாக கேள்வி கேட்க்கும் திரிவடுக நண்பர்களுக்கு​...

1) பாரபட்சம் பார்க்காமல் தண்டனை கொடுப்பது பற்றி தமிழர்களுக்கு பாடம் எடுக்கும் அருகதை இங்கு யாருக்கும் கிடையாது. குற்றம் செய்தவன் இரத்த சொந்தமாக இருந்தாலும் அவனுக்கான தண்டனையை பெற்றுத்தருவதில் காட்டும் முனைப்பில் பிழை கண்டுபிடிக்கவோ அல்லது பின்பற்றவோ வேறு யாராலும் முடியாது. 

2) தமிழர்களுக்கு மட்டும் தான் எங்கள் ஓட்டுன்னு தமிழர்கள் முடிவு செஞ்சிருந்தா, இத்தன வருஷமா திரி வடுகர்கள் ஆட்சி செய்திருக்க முடியாது.

3) கொடூரமான தண்டனை செஞ்சா, இப்படி சுட்டா தான் பயம் இருக்கும் யாரும் இனிமேல் இப்படி தப்பு செய்யமாட்டாங்க.  சரியாக  சொன்னீங்க ; வாங்க கருணாநிதி & ஜெயலலிதா நெத்தி பொட்டுல சுட்டு ஆரம்பிக்கலாம்.

பர்மாவுக்கு சென்ற பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அங்கு குடியேறிய இந்தியர்களிடம் இப்படி பேசினார்,  "இன்று முதல் நீங்கள் பர்மா நாட்டு மக்களோடு மக்களாய் வாழ வழி வகுத்துக்கொள்ளுங்கள். இல்லையேல் எதிர்காலத்தில்  கஷ்ட நஷ்டங்களுக்கு நீங்கள் ஆளாக வேண்டி வரும். இங்கே வாழ்ந்து கொண்டு, இந்த நாட்டிற்கு விரோதமாக அல்லது துரோகமாக எதையும் செய்யாதீர்கள்." 


திரு. முத்துராமலிங்க தேவர் அவர்கள் தமிழர்களிடம் பேசி வழிகாட்டியது போல திரிவடுக முன்னோர்கள் தங்கள் இன அரசியல் வியாதிகளிடம் பேசி இருந்தால் (பூர்வ குடிகளுக்கு எந்த வகையிலும் துரோகம் நினைக்காதீர்கள் என்று) இத்தனை சீரழிவு நடந்திருக்காது. நடந்திருக்காது.


தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 54

மாநில கட்சிகள் / தமிழர் கட்சிகள் :

சிலம்புச் செல்வர் திரு. ம.போ.சி. அவர்கள் "தமிழரசுக் கழகம்" என்கிற இயக்கத்தை நடாத்தினார். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழக எல்லைகளை தாராளமாக அடுத்தவர்களுக்கு விட்டுக்கொடுத்தது காங்கிரஸ். இன்றைக்கு தமிழகத்தோடு பல பகுதிகள் இருப்பதற்கு முக்கிய காரணம் இவரும், திரு நேசமணி அவர்களும் என்று சொன்னால் மிகையாகாது.

அண்மையில் கூட, தமிழக கோட்டாவில் மைய அமைச்சராக இருக்கும் திரு. பொன் ராதா கிருஷ்ணன் அவர்கள் தமிழகத்தோடு இருக்கும் சில பகுதிகள் கேரளாவோடு இருந்திருக்கலாம் என்ற கருத்தை வெளியிட்டிருந்தார். பதவிக்கு வரும் வரை தமிழராக இருப்பவர்கள், பதவிக்கு வந்தவுடன் கேரளத்துக்காரர்கலாக ஆகிவிடுகிறார்கள். 

ம.போ.சி. அவர்கள் கூட தன்னுடைய அகவை 50 ஆனத்துக்கு பிறகு தடம் புரண்டுவிட்டார் என்று தெரிய வருகிறது. 

ஓய்வு பெற்ற IAS அதிகாரி மலைச்சாமி அவர்கள் ஒரு அரசியல் கட்சியை துவக்கி நடத்தினார். தேர்தல் கூட்டணி குறித்து பேச்சு வரும் போது அந்த கட்சியை கலைத்துவிட்டு அதிமுகவில் சேர்ந்தால் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிடலாம் என்று ஒரு நிபந்தனை வைக்கப்பட்டது, அ.தி.மு.க. வில் ஐக்கியமானார். மறுபுறம், இடையில், திரு ஜகத்ரட்சகன் (ஜனநாயக முன்னேற்ற கழகம்) ; இப்படி நிறைய பேர். இப்படியாக தமிழர் கட்சி எதுவா இருந்தாலும் கலைச்சிட்டு, திரிவடுக / தேசிய கட்சில இணையனும். இல்லைனா அந்த கட்சிய சாதி கட்சினு சொல்லுவாங்க.

பா.ம.க. ~ இந்த கட்சியை துவங்கியது வன்னிய சமுதாய பெரியவர்கள் மட்டும் இல்லை. மருத்துவர் ராமதாசுக்கு நண்பர்களாக இருந்த பல சமுதாயத்தை சார்ந்தவர்களும் சேர்ந்து துவக்கினார்கள்.

வகை மாதிரிக்கு சொல்லுவதென்றால், திரு. பொன்னுசாமி மற்றும்  திரு. தலித்.ஏழுமலை ஆகியோர் மைய அமைச்சராக பா.ம.க. சார்பாக இருந்துள்ளார்கள். 

பொது இடங்களில் புகை பிடிகுறது இப்ப இல்லவே இல்லன்னு சொல்ல முடியாது ஆனா, பல பேருக்கு இப்ப ஒரு விழிப்புணர்வு வந்திருக்கு; நிறைய குறைஞ்சிருக்கு. மதுவுக்கு எதிரா தொடர்ந்து போராட்டங்களை  முன்னெடுக்கிறது. 

ஆனால் இந்த கட்சியின் முதல்வர் வேட்பாளர் இன்னும் பக்குவப்படவில்லை. சில விரும்பத்தகாத பிரச்சனைகள் என்று வருகின்றபோது வட மாவட்டங்களை விட இந்த பிரச்னை தென் மாவட்டங்களில் அதிகம் என்று மாநிலத்தின் ஒரு பகுதியை மட்டும் பிரதிபலிக்கிறார். மாநிலத்துக்கே பொதுவானவராக செயல்பட முடியுமா என்று தெரியவில்லை. ஒரு வேலை மற்ற மாநிலங்கள் பிரிக்கப்பட்டது போல தமிழகமும் என்றாவது பிரிக்கபட்டால் அந்த மாநிலத்துக்கு முதல்வர் ஆகலாம், தற்பொழுது இருக்கும் மாநில அமைப்பில் தன்னால் முதல்வர் ஆக முடியாது என்கிற புரிதலாகவும் இருக்கலாம்.

அதுபோலவே இயக்குனர் நடிகர் சீமான் கட்சி கூறும் கருத்துக்கள்  பல நேரங்களில் சரியாக இருந்தாலும் கூட, சினிமாவில் இருந்து வரும் ஒருவரை மீண்டும் ஏற்கும் மன பக்குவம் இல்லை. மீண்டும் ஒரு விசிலடிச்சான் கூட்டத்தை...வேண்டாம்... விரைவில் சீமான் இல்லாத கட்சியாக அது உருபெறும் என்பது என் கணிப்பு...


கடைசியா ஒரு அடிப்படை வேறுபாடு என்னனா, தங்கள் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதிகளை விட்டு கொடுத்துவிட்டு தோற்கும் தொகுதியில் நிற்கும் கட்சி, தமிழர் கட்சி. தனக்கு தோல்வி உறுதி என்ற தொகுதிகளை மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதிகளையும் சேர்த்து நிற்கும் கட்சி தான் திரிவடுக / தேசிய கட்சிகள்.


தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 55



தேர்தல் விதிமுறைகளின் படி இன்றோடு தேர்தல் பரப்புரைகளை முடித்துக்கொள்ள வேண்டும். 1962 ஆண்டு நடந்த தேர்தல் பரப்புரையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் பேசிய பேச்சு இன்றும் பொருந்துவதாக இருக்கிறது. அதில் சில பகுதிகள் மட்டும் இங்கே.

ஓட்டுப் போடுகிற வகையில் மக்கள் எதையும் எதிர்ப்பார்க்காதீர்கள். அது மகா பாவம். ஒரு கிராமத்தில் முளைக்கொட்டு என்றால் இரண்டு ரூபாய் எடுத்துக்கொண்டு போய்ப் பார்க்கிறீர்கள். ஜல்லிக்கட்டு என்றால் நாலு ரூபாய் எடுத்துப் போய் வேடிக்கை பார்த்து வருகிறீர்கள். சினிமாவுக்கு ஐந்து ரூபாய் செலவிட்டுப் போய் பார்க்கிறீர்கள். ஆனால், தேர்தலில் ஓட்டுப்போடுவதற்கு மட்டும் யாராவது பணம் தருவார்களா என்று எதிர்பார்க்கலாமா?

உங்கள் தலைவிதியை ஐந்து வருடங்களுக்கு ஒப்புவிக்கும் ஒரு கடமை அல்லவா ஓட்டுபோடுவது! காசுக்காக காத்திராமல் நமது சொந்த தேசிய திருவிழாவுக்காக என்று நினைத்து கொண்டு, அவரவர் வசதி, சக்திக்கு தக்கவாறு சொந்த பணத்திலிருந்து இரண்டோ மூன்றோ எடுத்துப்போய் செலவிட்டு ஓட்டுப்போடுங்கள். அதுதான் நல்ல மக்களுக்கு அடையாளம். 


பாச தலைவனுக்கு பாராட்டு விழா. விருது கொடுத்தா விமர்சனம் செய்ய கூடாது.

ஒருபுறம் நெற்றியில் குங்குமம் வைத்துவரும் கட்சிகாரனை ஏசுவது ; மறுபுறம் மனைவியார் / துணைவியார் திரிவடுக சாய்பாபாவின் காலில் விழுந்தாலும் சிரித்துக்கொண்டே பார்ப்பது. நெற்றியில் திரு நூறு குங்குமம் வைத்து வந்தால் உடனே ஒரு நக்கல்....


தில்லி போக்குவரத்து விதிகளை எதிர்க்கும் MP க்கள். கோவையில் விபத்தில் இறந்த காவலரும் அவரின் பெண்களும்...

No comments:

Post a Comment