தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 54

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 54

மாநில கட்சிகள் / தமிழர் கட்சிகள் :

சிலம்புச் செல்வர் திரு. ம.போ.சி. அவர்கள் "தமிழரசுக் கழகம்" என்கிற இயக்கத்தை நடாத்தினார். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழக எல்லைகளை தாராளமாக அடுத்தவர்களுக்கு விட்டுக்கொடுத்தது காங்கிரஸ். இன்றைக்கு தமிழகத்தோடு பல பகுதிகள் இருப்பதற்கு முக்கிய காரணம் இவரும், திரு நேசமணி அவர்களும் என்று சொன்னால் மிகையாகாது.

அண்மையில் கூட, தமிழக கோட்டாவில் மைய அமைச்சராக இருக்கும் திரு. பொன் ராதா கிருஷ்ணன் அவர்கள் தமிழகத்தோடு இருக்கும் சில பகுதிகள் கேரளாவோடு இருந்திருக்கலாம் என்ற கருத்தை வெளியிட்டிருந்தார். பதவிக்கு வரும் வரை தமிழராக இருப்பவர்கள், பதவிக்கு வந்தவுடன் கேரளத்துக்காரர்கலாக ஆகிவிடுகிறார்கள். 

ம.போ.சி. அவர்கள் கூட தன்னுடைய அகவை 50 ஆனத்துக்கு பிறகு தடம் புரண்டுவிட்டார் என்று தெரிய வருகிறது. 

ஓய்வு பெற்ற IAS அதிகாரி மலைச்சாமி அவர்கள் ஒரு அரசியல் கட்சியை துவக்கி நடத்தினார். தேர்தல் கூட்டணி குறித்து பேச்சு வரும் போது அந்த கட்சியை கலைத்துவிட்டு அதிமுகவில் சேர்ந்தால் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிடலாம் என்று ஒரு நிபந்தனை வைக்கப்பட்டது, அ.தி.மு.க. வில் ஐக்கியமானார். மறுபுறம், இடையில், திரு ஜகத்ரட்சகன் (ஜனநாயக முன்னேற்ற கழகம்) ; இப்படி நிறைய பேர். இப்படியாக தமிழர் கட்சி எதுவா இருந்தாலும் கலைச்சிட்டு, திரிவடுக / தேசிய கட்சில இணையனும். இல்லைனா அந்த கட்சிய சாதி கட்சினு சொல்லுவாங்க.

பா.ம.க. ~ இந்த கட்சியை துவங்கியது வன்னிய சமுதாய பெரியவர்கள் மட்டும் இல்லை. மருத்துவர் ராமதாசுக்கு நண்பர்களாக இருந்த பல சமுதாயத்தை சார்ந்தவர்களும் சேர்ந்து துவக்கினார்கள்.

வகை மாதிரிக்கு சொல்லுவதென்றால், திரு. பொன்னுசாமி மற்றும்  
திரு. தலித்.ஏழுமலை ஆகியோர் மைய அமைச்சராக பா.ம.க. சார்பாக இருந்துள்ளார்கள். 

பொது இடங்களில் புகை பிடிகுறது இப்ப இல்லவே இல்லன்னு சொல்ல முடியாது ஆனா, பல பேருக்கு இப்ப ஒரு விழிப்புணர்வு வந்திருக்கு; நிறைய குறைஞ்சிருக்கு. மதுவுக்கு எதிரா தொடர்ந்து போராட்டங்களை  முன்னெடுக்கிறது. 

ஆனால் இந்த கட்சியின் முதல்வர் வேட்பாளர் இன்னும் பக்குவப்படவில்லை. சில விரும்பத்தகாத பிரச்சனைகள் என்று வருகின்றபோது வட மாவட்டங்களை விட இந்த பிரச்னை தென் மாவட்டங்களில் அதிகம் என்று மாநிலத்தின் ஒரு பகுதியை மட்டும் பிரதிபலிக்கிறார். மாநிலத்துக்கே பொதுவானவராக செயல்பட முடியுமா என்று தெரியவில்லை. ஒரு வேலை மற்ற மாநிலங்கள் பிரிக்கப்பட்டது போல தமிழகமும் என்றாவது பிரிக்கபட்டால் அந்த மாநிலத்துக்கு முதல்வர் ஆகலாம், தற்பொழுது இருக்கும் மாநில அமைப்பில் தன்னால் முதல்வர் ஆக முடியாது என்கிற புரிதலாகவும் இருக்கலாம். மாம்பலம் என்பது குறிப்பிட்ட சில மாவட்டங்களில் விளையக்கூடியதாக இருக்கிறது...  

ஆனால் இந்த தேர்தலுக்காக அதிகம் உழைத்தவர்கள் என்றால் இந்த கட்சியைதான் சொல்ல முடியும். வரைவு தேர்தல் அறிக்கையை தாக்கல் செய்ததில் இருந்து எவ்வளவோ... ஒவ்வொரு வருடமும் நிழல் நிதிநிலை அறிக்கை தயார் செய்கிறார்கள். மாநிலம் முழுவதும் சுற்றுபுறம் செய்ததன் மூலமாக மருத்துவர் அன்புமணிக்கு நிச்சையம் நல்ல பாடம் கிடைத்திருக்கும். இந்த அனுபவமும் G.K. மணி ; மருத்துவர் ராமதாசு ; செந்தில் போன்றோரின் வழிகாட்டுதலும் இவரை சரியான பாதையில் இட்டு செல்லும் என்று நம்பிக்கை இருக்கிறது. இந்த தேர்தலில் இந்த கட்சியின் வாக்குகளும் வெற்றி பெரும் இடங்களும்  நிச்சையம்  அதிகரிக்கும். ஒரு வேலை தொங்கு சட்டமன்றம் உருவானால் பா.ம.க. வின் பங்கு நிச்சையம். மைனாரிட்டி அரசு ஆட்சி அமைத்தால் நிச்சையம் பா.ம.க. வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும்.

அதுபோலவே இயக்குனர் நடிகர் சீமான் கட்சி கூறும் கருத்துக்கள்  பல நேரங்களில் சரியாக இருந்தாலும் கூட, சினிமாவில் இருந்து வரும் ஒருவரை மீண்டும் ஏற்கும் மன பக்குவம் "எனக்கு" இல்லை. மீண்டும் ஒரு விசிலடிச்சான் கூட்டத்தை...வேண்டாம்... விரைவில் சீமான் இல்லாத கட்சியாக அது உருபெறும் என்பது என் கணிப்பு...இந்த தேர்தலில் நிறைய  ஓட்டுக்களும் இடங்களும் இந்த கட்சிக்கு கிடைத்தால் தமிழகத்துக்கு நல்லது... அடுத்து வரும் ஆண்டுகளில் களத்தை விட்டு விலகாமல் தொடர்ந்து உத்வேகத்தை தக்கவைத்தால் தமிழகத்துக்கு நல்லது...

இவர்களை தவிர்த்து சிலர் சுயேச்சைகளாக இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அவர்களில் சிறந்தவர்களுக்கு ஒட்டு போடலாம். மற்ற கட்சிகளில் உள்ள வேட்பாளர்களில் யாரால் சுயமாக சிந்தித்து ; கட்சி தவறான முடிவை எடுத்தாலும் அதனை எதிர்த்து மக்களுக்காக செயலாற்ற கூடியவர்களாக இருக்கிறாரோ அவருக்கு வாக்களிக்கலாம்...

கடைசியா ஒரு அடிப்படை வேறுபாடு என்னனா, தங்கள் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதிகளை விட்டு கொடுத்துவிட்டு தோற்கும் தொகுதியில் நிற்கும் கட்சி, தமிழர் கட்சி. தனக்கு தோல்வி உறுதி என்ற தொகுதிகளை மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதிகளையும் சேர்த்து நிற்கும் கட்சி தான் திரிவடுக / தேசிய கட்சிகள்.




No comments:

Post a Comment