தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 55
தேர்தல் விதிமுறைகளின் படி இன்றோடு தேர்தல் பரப்புரைகளை முடித்துக்கொள்ள வேண்டும். 1962 ஆண்டு நடந்த தேர்தல் பரப்புரையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் பேசிய பேச்சு இன்றும் பொருந்துவதாக இருக்கிறது. அதில் சில பகுதிகள் மட்டும் இங்கே.
ஓட்டுப் போடுகிற வகையில் மக்கள் எதையும் எதிர்ப்பார்க்காதீர்கள். அது மகா பாவம். ஒரு கிராமத்தில் முளைக்கொட்டு என்றால் இரண்டு ரூபாய் எடுத்துக்கொண்டு போய்ப் பார்க்கிறீர்கள். ஜல்லிக்கட்டு என்றால் நாலு ரூபாய் எடுத்துப் போய் வேடிக்கை பார்த்து வருகிறீர்கள். சினிமாவுக்கு ஐந்து ரூபாய் செலவிட்டுப் போய் பார்க்கிறீர்கள். ஆனால், தேர்தலில் ஓட்டுப்போடுவதற்கு மட்டும் யாராவது பணம் தருவார்களா என்று எதிர்பார்க்கலாமா?
உங்கள் தலைவிதியை ஐந்து வருடங்களுக்கு ஒப்புவிக்கும் ஒரு கடமை அல்லவா ஓட்டுபோடுவது! காசுக்காக காத்திராமல் நமது சொந்த தேசிய திருவிழாவுக்காக என்று நினைத்து கொண்டு, அவரவர் வசதி, சக்திக்கு தக்கவாறு சொந்த பணத்திலிருந்து இரண்டோ மூன்றோ எடுத்துப்போய் செலவிட்டு ஓட்டுப்போடுங்கள். அதுதான் நல்ல மக்களுக்கு அடையாளம்.
இன்றைய தேர்தலில் ஒட்டு போடுவது மட்டும் நம் கடமை அல்ல ; இருட்டில் வந்து நம் வீட்டின் முன் பணத்தை போட்டு செல்லும் கட்சிக்காரர்களின் பணத்தை எடுத்து தேர்தல் ஆணையம் மூலமாக அரசாங்க கருவூலத்தில் சேர்க்க வேண்டியதும் நம் கடமை தான்...
No comments:
Post a Comment