தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 8




அ.தி.மு.க. கூட சேர்ற கட்சிகள அரசியல் கட்சினும் தி.மு.க. வோட சேர்ற கட்சிகள சாதி கட்சின்னு பத்திரிக்கையாளர் சமஸ் எழுதிருக்காறேன்னு Venkat Ramanujam ங்குற தி.மு.க. வை சேர்ந்த facebook நண்பர் ஆதங்கப்பட்டு எழுதிருக்காரு.

அண்மைக்காலத்தில் நடந்து முடிந்த திமுக உட்கட்சி தேர்தலின் போது, "கோட்டாவில் எனக்கு பதவி தரவேண்டாம். பொது பிரிவில் எனக்கு பதவி கொடுங்கள். வேறு யாருக்காவது கோட்டாவில் பதவி கொடுங்கள்" திரு ராசா அவர்கள் மன்றாடியதாக செய்திகள் வந்தனவே. 

கிட்டத்தட்ட குடும்ப உறுப்பினர் அளவிற்கு வந்துவிட்ட ஒருவருக்கே இந்த நிலை என்றால் மற்றவர்கள் நிலை என்ன என்று சொல்ல தேவை இல்லை. சமூக நீதி குறித்து வாய் கிழிய பேசக்கூடிய கட்சியில், தாழ்த்தப்பட்டவர் ஒருவருக்கு பொது பிரிவில் கட்சி பதவி கொடுப்பதற்கே இந்த நிலை என்றால் தேர்தலில் நிர்ப்பது பற்றி சொல்லவும் வேண்டுமா? 

அதே வேளையில் forward block கட்சியில் அகில இந்திய தலைவராக பல வருடம் ஒரு தாழ்த்தப்பட்டவர் இருந்து வருகிறார். ஆனால், "நான் தாழ்த்தப்பட்டவர்களின் சம்பந்தி" என்பது போன்ற வசனங்களை அந்த கட்சிக்காரர்கள் பேசி திரியவில்லையே. 

இத்தனை வருடங்களாக இந்த கட்சியுடன் கூட்டணியில் ; கிட்டத்தட்ட கட்சியின் தாழ்த்தப்பட்டவர் அணியாக இருந்த ஒருவர் வெளியேறியதும், அவரை பார்த்து இந்த கட்சி சொல்லுகிறது சாதிகட்சி என்று.

உங்கள் தலைவர் கலைஞர் சொல்லிக்கொடுத்ததை அப்படியே புரிந்து கொண்டு எழுதி இருக்கிறார்கள் இதில் வேதனை இருக்கு?

சரி, திரு.வேல்முருகன் தலைவரா இருக்கதால அந்த கட்சிய வன்னியர் கட்சின்னு எழுத முடிஞ்ச அறிவாளிக்கு அந்த பட்டியல்ல 6 & 7 வதா இருக்க கட்சிகள ஷியா முஸ்லீமா இல்ல சன்னி முஸ்லீமான்னு கண்டுபுடிச்சு எழுத முடியல போல,பாவம் பாவம் சார். அதேபோல தி.மு.க & அ.தி.மு.க.வ தெலுங்கர் கட்சி & கன்னடர் கட்சினும் எழுதீருக்க முடியும் இல்லையா.

பொது தொகுதியில் தாழ்த்தப்பட்டவர்களை நாங்கள் வேட்பாளர்களாக நிருத்தபோகிறோம் என்று சீமானின் கட்சி அறிவிப்பு வெளியிட்டதும், Arivazhagan Kaivalyam அறிவழகன் கைலாயம் என்கிற திமுக சேர்ந்த facebook நண்பர் இப்படி பதிவிடுகிறார், "இது என்ன பிரமாதம். நீங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களுக்கு பிச்சை போடுகிறீர்களா?" 

//பொதுத் தொகுதி ஒன்றும் தலித்துகளுக்கு நீங்கள் வழங்கும் பிச்சைப் பாத்திரம் அல்ல ஆண்டைகளே//


ஆக இதன் மூலம் புலப்படுவது என்ன? 1) இத்தனை வருடங்களாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு கொடுக்கபட்டிருக்கும் இட ஒதுக்கீடை பிச்சையாக தான் இந்த கட்சி நினைத்திருக்கிறது. 2) பொது இடத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடம் தரக்கூடாது என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக இத்தனை காலம் இருந்து வந்திருக்கிறார்கள்.

நண்பர்களே உங்கள் இருவருக்கும் சிறிதளவேனும் அறிவு நாணயம் இருந்தால் சாதி கட்சி என்கிற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள். அதுதான் பல தலைமுறைக்கு சொத்தெல்லாம் சேர்த்தாச்சு இனிமேலும் தயக்கம் என்ன? எதற்க்காக திராவிடர்~ தமிழர் வேடம் எல்லாம். உங்கள் கட்சியை தெலுங்கர் கட்சி என்று சொல்ல வேண்டியது தானே...

No comments:

Post a Comment