திரிவடுக கட்சி / வேற்று மாநில கட்சிகள் / அயலவர் கட்சிகள் :
சமூக நீதி பற்றி
கூட்டம் போட்டு பேசும் திரிவடுக கட்சிகள் துவக்கத்தில் இருந்தே இட ஒதுக்கீடுக்கு சொல்லி
வந்த காரணம் என்ன?
எல்லாரும்
முன்னேற வேண்டும் பிரதிநித்துவம் கிடைக்க வேண்டும் என்பது தானே. அதை சொல்லி தானே
எல்லா தேர்தல்களிலும் அந்த தொகுதி வாக்காளர்களில் யார் பெரும்பான்மை சமூகமோ அந்த வேட்பாளர்களை
தானே நிறுத்தி வந்திருக்கிறார்கள். ஒரு மாவட்டத்துக்கு ஒரு தொகுதியில் மாறுதல்
என்றாவது செய்திருகிரார்களா? உங்கள் மாவட்டத்தில் அது போல நடந்துள்ளதா? இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே தெரிந்து கொள்ள ஆவலாக
இருக்கிறேன்....
இந்த கட்சிகளின் தலைவராக ஒருபோதும் ஒரு தமிழர் இருக்க முடியாது. அதுதான் கண்ணேறு வைத்தது போல திரு. அண்ணாதுரை இருந்துட்டாறேன்னு சொல்லுறீங்களா?
ஆட்சில
இல்லேன்னா மாநில சுயாட்சி பத்தி பேச முடியும். ஆட்சில இருந்தா உறவுமுறைக்கு
மட்டும் மந்திரி பதவி கேட்கமுடியும்.
மாநிலத்து
மக்களின் வாழ்வாதார பிரச்சனைனா பிரதமருக்கு கடிதம் எழுத முடியும். தன் மக்களின் பிரச்சனைனா எவன் கால்லனாலும் விழ முடியும்.
ஆட்சில இல்லைனா சேதுசமுத்திரம் அமைச்சே தீருவோம்னு பேசலாம்.
ஆட்சில இருந்தா நீதிமன்றத்த எதிர்த்து என்ன செய்யமுடியும்னு
கமுக்கமா இருக்க முடியும்.
ஆட்சில இல்லைனா
மின்வெட்ட மூனே மாசத்துல இல்லாம செஞ்சிடுவேன்னு பேசலாம். ஆட்சில இருந்தா ஒரு யூனிட் கூட புதுசா தயாரிக்காம இருக்கலாம்.
ஆட்சில இருந்தா மாசத்துக்கு ஒரு மந்திரியா தூக்கலாம். ஆட்சில
இல்லைனா எல்லாரும் என்ன ஏமாத்திட்டாங்க ஒரு மந்திரி கூட எனக்கு காசு தரலைன்னு
கட்சி அலுவலகத்துல செண்டிமெண்ட் சீன் போடலாம்.
கூட்டணில இருந்தா
தேசிய கட்சினும் இல்லைனா மதவாத கட்சினும் சொல்ல முடியும். கூட்டணில
இருக்கவரைக்கும் சிறந்த அரசியல் கட்சினும், இல்லைனா சாதி கட்சினும் சொல்ல முடியும்.
ஆட்சில இல்லைனா
மது
& புகை ஒழிப்பு பத்தி பேசலாம். ஆட்சில இருந்தா அதுல
கல்லா கட்டலாம்.
ஆட்சிக்கு வந்தா
நான் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துடுவேன்னு பேசலாம் ஆட்சிக்கு வந்ததும் நான்
சொல்லுறத எந்த அதிகாரியும் கேட்குறது இல்ல நான் என்ன செய்யணு பாடலாம். கூட்டணில
சேராத கட்சிய இரண்டா உடைச்சு அந்த கட்சிய ஆரம்பிச்சவன அந்த கட்சிலையே இல்லாம செய்யலாம்.
No comments:
Post a Comment