திரும்பி வருமா அந்த நாட்கள்! திரும்பி வருவாரா அவர்?

கர்ம வீரர் காமராசர் ; தோழர் மண்ணாங்கட்டி ; தோழர் மூக்கையா தேவர் இவர்கள் மூவரையும் கதை மாந்தர்களா வச்சு ஒரு கதை"திரும்பி வருமா அந்த நாட்கள்! திரும்பி வருவாரா அவர்?" , சமூக வலைதளங்களில் கடந்த மாதம் உலா வந்தது. இந்த கதைய "கலைமகள்" மாத இதழும் வெளியிடிருந்தார்கள். அந்த கட்டுரையில் கூறப்பட்டிருந்த சம்பவங்களை படித்தபோது, "அடடா எவ்வளோ பெருந்தன்மையா நடந்துருக்கார் நம்ம முன்னாள் முதல்வர்னு", பெருமையா இருந்தது. ஆனா இந்த மாத கலைமகள் இதழ்ல பார்த்தா அந்த கதைய மறுத்து ஒரு கட்டுரை வெளி வந்த
ுருக்கு. அத படிச்சப்ப சீன்னு ஆயிடுச்சு.

எப்படி வயல்வெளில கடுமையா உழைக்க கூடிய விவசாயிகளோட பெருமைகள் எல்லாம் சில வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு சில வியாபாரிகளால் கலப்படம் செய்யப்பட்டு, சந்தையில் வருகிறதோ, அதுபோல, நடந்த பழைய சம்பவங்கள வச்சு புதுசு புதுசா கலப்படம் செய்யப்பட்ட கதைகள் வெளிவருகின்றன. இப்படி செய்றதால என்ன லாபம் அவங்களுக்கு கிடைக்குதுன்னு தெரியல. காமராசர பத்தி பெருமையா எழுதுறேன் பேர்வழினு இப்படி சிலர் புனையப்பட்ட கதை எழுதுறாங்க. ஆனா உண்மை வெளிவரும்போது அது அவருக்கு எவ்வளவு சிருமைன்னு புரியல. குறை, எழுதுபவர்கள் பேரில் மட்டும் இல்லை. உண்மை என்னவென்று புரிந்துகொள்ளாமல் அப்படியே நம்பும் நம்மீதும் இருக்கிறது.

இந்த கூத்துக்களை பார்க்கும்போது, பழனியில் வாழ்ந்துவரும் பெரியவர் திரு. சின்ன கௌண்டர் அவர்கள் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. "பல அரசியல் தலைவர்கள் பத்தி தினம் ஒரு புனை கதைகள் வெளிவருது. சாயம் வெளுக்கும்போது ரொம்ப கேவலமா இருக்கும்." முதுமை வாட்டும் இந்த நேரத்திலும், நேத்தாஜி அவர்கள் பற்றியும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் பற்றியும் பேசும்போதும் ஆர்வமாக பேசக்கூடிய பெரியவரின் வார்த்தைகளில் எத்தனை உண்மை இருக்கிறது.

No comments:

Post a Comment