காலைக்கடன் மற்றும் கழிவறை


துறப்பு வார்த்தைகள் : காலைக்கடன் மற்றும் கழிவறை குறித்த பதிவு இது. எனவே விருப்பம் இல்லாதவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம்.

நடிகை வித்யா பாலன் நடித்திருக்கும், "இல்லம் தோறும் கழிவறை" என்ற விளம்பரத்தை அனைவரும் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறன். திறந்த வெளி கழிப்பிடத்துக்கு பழகிய சிற்றூரில் இருந்து  வந்தவன் என்ற முறையில், எனக்கு தோன்றும் எண்ணங்களை பதிவிடுகிறேன்.

சிறு குழந்தையாக இருக்கும்போது வெட்டவெளியில் காலைக்கடன் முடித்த சிறிது நேரத்தில் பன்றி வந்து சுத்தம் செய்வதை பார்த்திருக்கிறேன். இப்போதெல்லாம் பன்றிகளை பார்ப்பதே அரிதாக இருக்கிறது. நாம் வெளியேற்றுவதை பன்றி தின்றகாலம் போய், பன்றியை மனிதன் தின்பது அதிகமானதாலோ.

சிறுவயதில் சென்னையில் நாங்கள் வாழ்ந்த அடுக்குமனைகளில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்ய தனியே ஒரு பிரிவினர் இருந்தார்கள். வார இறுதியில் வந்து சுத்தம் செய்துவிட்டு போவார்கள். அவர்கள் பேசிய மொழி எனக்கு புரிந்ததில்லை.
கழிவறையை சுத்தம் செய்பவர்கள் என்ற ஒரு வகுப்பினரை சிற்றூர்களில் பார்த்ததில்லை.

கல்லூரி இறுதி ஆண்டில் இருந்தபோது நண்பன் வேலுமணியின் தங்கையின் திருமணத்துக்கு சென்றோம். அப்பொழுது, காட்பாடி அருகில் இருந்த நண்பன் முனிசாமியின் வீட்டில் நானும் நண்பர்கள் மணிகண்டனும்  விஷ்ணுவும் தங்கினோம்.தூங்கி எழுந்ததும் இயற்க்கை உபாதைக்காக வயல்வெளிக்கு பின்புறம் அழைத்து சென்றான் நண்பன் முனிசாமி. எனக்கு பழக்கமான வழக்கம் என்பதால் சிரமமின்றி வேலையை முடித்தேன்.

கலாச்சாரத்தின் தலைநகரமான தஞ்சை மற்றும் ஈரோட்டில்  இருந்து வந்தபடியால், எங்களால் இங்கே இருக்கமுடியாது. ஒருவேளை திருமணமண்டபத்தில் கழிவறை இருந்தால் நாங்கள் அங்கே பார்த்துக்கொள்கிறோம் என்று கூறி  மீதமிருந்த  காலைக்கடன்களை மட்டும் முடித்தார்கள் நண்பர்கள்.


அலுவல் நிமித்தமாக அமெரிக்கா சென்றிருந்த போது உணவு ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவகம்  வித விதமான உணவுவகைகள். தங்கும் இடத்தில் தான் ஒரு சிரமம். காலைக்கடன் முடித்தபின் காகிதம் கொண்டு துடைத்துக்கொள்ள வேண்டும். அது அசௌகரியமாக இருந்தபடியால் தண்ணீர் பாட்டில் கொண்டு கழுவுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். தண்ணீர் இல்லாத வெறும் பாட்டில் என்றால் விடுதியை சுத்தம் செய்பவர் அந்த பாட்டிலை எடுத்து சென்றுவிடுவார். அதனால் அந்த பாட்டிலில் தண்ணீர் பிடித்து வைத்து செல்லவேண்டும். அங்கேயும் சுத்தம் செய்பவர்கள் புரியாத மொழி பேசினார்கள். விசாரித்ததில் அவர்கள் மெக்சிக்கோ நாட்டவர்கள் என்பது தெரிந்தது.





அதுவே இத்தாலி / ஐரோப்பா நாடு என்றால் நமக்கு வசதி. படத்தில்  இருப்பது போல "closet" "bidet" என்று இரண்டு இருக்கும். முதலில் இது எதற்க்காக என்று புரியவில்லை. ஒன்றில் இருக்க வேண்டும் ; மற்றொன்றில் கழுவ வேண்டும். நம்மூரில் உள்ள குளத்தில் கழுவும் அனுபவத்தில் பாதி கிடைக்கும். 

குறிப்பிட்ட சிலருக்கு "sitz bath" என்ற ஒரு முறையை மருத்துவர்கள் பரிந்துரைகிரார்கள். அதற்கும் இந்த "bidet" பயன்படுகிறது. சிற்றூர்களை பொருத்தமட்டில், இருவேளை கடன் முடிக்கும் பழக்கம் உண்டு மாலை வெயில் உடம்புக்கு நல்லது என்று சொல்லுவது போலவே, மாலை வேளையில் குளத்தில்அந்த வெதுவெதுப்பான நீரில் கழுவுவது உடல் நலத்துக்கு நல்லதென்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

முந்தைய அலுவலகத்தில் உடன் பணிபுரிந்தவர் ஒரு முறை பெருமையாக  சொன்னார், "அமெரிக்க கம்பனிக்கு ; அமெரிக்க நேரத்தில் வேலை செய்வதால் அவர்கள் போலவே காகிதம் கொண்டு தான் சுத்தம் செய்துகொள்கிறேன்."  அவன பாத்து நம்மாளுக காப்பி அடிக்குறாங்க... ஆனா அவன்....

பொதுவாகவே சீர்திருத்தம் என்றால் நம் அரசியல்வாதிகளுக்கு அதனை கிராமத்தில் / சிற்றூரில் இருந்து துவங்குவதில் தான் பிரியம். ஆனால் செய்யவேண்டியது நகரத்தில் தான். சென்னையிலே உதயம் திரையரங்கத்துக்கு அருகில் நடைபாதையில் / கூவத்து அடையாறு / கூவத்து கரையோரம் / ரோட்டோர குடிசைகளில் இருப்பவர்களுக்கு தான் அதிகம் தேவை படுகிறது. அடுத்ததாக நகரத்தில்  நிலையத்திலாவது சரியா சரியான கழிவறை இருக்கிறதா? புறநகர் இரயில் நிலையங்களில் பணியில் இருக்கும் அலுவலகர்களுக்கே கழிவறை கிடையாது.


வெட்டவெளில போறவங்க என்று கிராமத்தவர்களை பார்த்து ஏளனம் செய்வதற்கு முன் அங்கே சென்று பாருங்கள். தொலை தூரம் சென்று தான் அது நடக்கும் ; நகரத்தில் இருப்பதுபோல இருப்பிடத்துக்கு அருகிலேயே இல்லை. எங்கள் சிற்றூரிலும் அரசாங்கத்தால் கட்டப்பட்ட பொது கழிவறை யாருக்கும் பயன்படாமல் இருக்கிறது. அதனை பயன்படுத்த துவங்கினால் வரும் முதல் சிரமம் என்ன? அதனை யார் சுத்தம் செய்வார்கள்? கழிவறையை சுத்தம் செய்பவர்கள் என்று ஒரு தனி பிரிவு சிற்றூர்களில் கிடையாது. உருவாக்க வேண்டுமா? அது தான் அரசாங்கத்தின் நோக்கமா?

2007 ஆம் ஆண்டே கக்காவும் கக்கா நிமித்தமும் விரிவாக பதிவிட்ட தோழன் உதயகுமாரை இந்த நேரத்தில் நன்றியோடு நினைத்து பார்க்கிறேன்.

No comments:

Post a Comment