காட்சி : ஒரு முறை நானும் மற்ற நண்பர்களும் கண்ணதாசனோடு சேர்ந்து ஒரு உணவுவிடுதியில் உற்ச்சாக பானம் அருநதினோம். அதன் பின்னர் அங்கே இருந்த அறைகளில் பாலியல் தொழிலாளியிடம் இருக்கும் சூல்ழ்நிலையை உருவாக்கினோம். அப்பொழுது அந்த விடுதியில் காவல்த்துறை ரைட் வந்தார்கள். என்னை மாட்டிவிடுவதர்க்கு கண்ணதாசனிடம் ஒருவர் கேட்டார். ஆனால் கண்ணதாசன் அவரிடம், "வாலி தப்புவது உன் பொறுப்பு" என்று கூறினார். - கவிஞர் வாலி ஒரு வார இதழில்.
பரப் பார்வை 1 : இதை படிக்கிறபோது நமக்கு கவிஞர் கண்ணதாசன் மீது ஒரு மரியாதை ஏற்ப்படுகிறது. தனக்கு போட்டியாளராக இருக்கும் நபர் அழியவேண்டும் என்று விரும்பும்; போட்டியும் பொறாமையும் நிரம்பிய திரைத்துறையில் பெருந்தன்மையோடு நடந்துகொண்ட இந்த சம்பவம் திரைத்துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே ஒரு படிப்பினை. தொழில் முறை போட்டி, தனி நபர் போட்டியாக, பொறாமையாக மாறாமல் நட்ப்பு பாராட்ட வேண்டும் என்பதனை உணர்த்துகிறது.
இந்த சம்பவத்தை கவிஞர் வாலி நினைத்திருந்தால் வெளியில் சொல்லாமால் இருந்திருக்கலாம். ஆனால் நன்றி மறவாத அவர், தன மீது தவறான எண்ணம் வருவது பற்றி கவலைப்படாமல் சொல்லியிருப்பது அவருடைய பெருந்தன்மையை காட்டுகிறது. அண்ணல் காந்தியடிகள் தன் சுய சரிதையில் அனைத்து உண்மைகளையும் மறைக்காமல் சொல்லி இருக்கிறார். அதைப்போலவே கவிஞர் வாலியும் செய்திருப்பது ஒரு நல்ல முன்னுதாரணமாகும்.
பரப் பார்வை 2 : ஒரு சம்பவம் சரியா தவறா என்பது, அது நடந்த காலத்தில் மக்களுக்கு தெரிந்தால் அதற்க்கு ஒருவித எதிர்வினையும் அதுவே பல பத்தாண்டுகள் கழித்து தெரியவருகின்றபோது அதற்க்கு வருகின்ற எதிர்வினையும் வேறு விதமாக இருக்கின்றது. அடுத்தநாள் செய்தித்தாளில் வந்திருந்தாள் மானம் கப்பலேரியிருக்கும். ஆனால் அப்போதுமட்டுமென்ன; என்றைக்குமே அது அவர்களின் தனிப்பட்ட விடயம் தானே.
No comments:
Post a Comment