தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 4

தேசிய கட்சி மதவாத கட்சி சாதி கட்சி ; திராவிட கட்சி னா என்ன? எதைவைத்து ஒருகட்சியை இன்னமாதிரியான கட்சி என்று சொல்லுவது என்று இந்த வாரம் பார்க்கலாம்.. இந்த வாரம் சில நாட்கள் நீளமான பதிவுகளாக இருக்கும்..

தேசிய கட்சி : 


நாட்டை பிரிக்கும் பாதகச்செயலை செய்துவிட்டு, "நாட்டுக்கு
சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சி என்றும் தேசிய கட்சி" என்றும் தன்னை பிரகடனபடுத்திக் கொண்ட காங்கிரஸ் கட்சி செய்த செயல்கள்? பங்காளிகள் சொத்தை பிரித்தால் கூட யாரார்க்கு எந்தெந்த நிலம் என்று சரியாக வரையருத்துக் கொள்வார்கள். ஆனால் நம் நாட்டை பொருத்தமட்டில் சரியாக செய்யபடாத காரணத்தால் இன்றளவும் பிரச்சனைகளை சந்திக்கிறோம். ஊழலை நாட்டுக்கு அறிமுகபடுத்தினார்கள். மற்ற விடயங்கள் குறித்து பேச என்ன இருக்கிறது

எதிர்க்கட்சி என்கிற நிலையில் இருந்த communist களை சீனாவுக்கும் ; உரஷ்யாவுக்கும்   இன்ப சுற்றுல்லா அனுப்பிவைத்தார்  பிரதமர் நேரு அவர்கள். சென்றுவந்த அவர்கள், சில நூறு பயனக் கட்டுரைகளையும்  பலநூறு புத்தகங்களையும் எழுதினார்கள். மக்கள் குறித்த சிந்திக்க தவறிவிட்டார்கள். நேருவே பாதி communist தான் ; நாங்கள் என்ன தனியா செய்யபோறோம் என்று சிந்திக்க துவங்கினார்கள்.

மீதம் இருந்தது நேத்தாஜியின் forward block கட்சி தான். நேதாஜி இறந்துவிட்டார் என்று ஒரு கதையை கட்டிவிட்டு ; அவர் கட்சியை காங்கிரசோடு இணைத்துவிட்டதாக ஒரு நாடகம் நடத்தினார். நேதாஜி சுபாஷ் பாபு அவர்கள் இறக்கவும் இல்லை அவருடைய கட்சி காங்கிரசோடு  இணையவும் இல்லை என்று அறிவ்ப்பு செய்து முக்குடைப்பு கொடுத்தார் திரு. முத்துராமலிங்க தேவர் அவர்கள்.



கட்சி தேர்தலில் வெற்றி பெற்ற போதும், நேதாஜி  அவர்களை  செயல்பட விடாமல் முட்டுக்கட்டை போட்ட ; தனிநபர்களை மட்டும் முன்னிறுத்தும் கட்சியாக  ; வம்சாவழி அரசியலை செய்யும் கட்சியாக அன்றுமுதல்  காங்கிரஸ் இருந்து வருகிறது.

No comments:

Post a Comment