தமிழகத்தின் சிறந்த எதிர்க்கட்சித்தலைவர் ராமதாஸ் : ஒரு ஆச்சரிய சர்வே! நான் ஒரு மாதமாகவே பத்திரிகைகளை படிக்கவோ, தொலைக்காட்சியில் செய்திகள் எதனையும் பார்க்கவோ இல்லை. எனது மகனின் படப்பிடிப்புக்காக மலேசியா சென்றிருந்தேன்" - விஜயகாந்த் (விகடன் 04/04/2015).
அடுத்த சில வாரங்களிலேயே நடிகர் விஜயகாந்த் தன் நாடகத்தை நடாத்துகிறார் தில்லியில். பத்திரிக்கைகள் அதற்க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
நடிகர் விஜயகாந்த் குறித்த பகடிகள் தொடர்ந்து வருவது அவருக்கு எதிரானது அல்ல. நல்லதோ கெட்டதோ. ஒரு அரசியல்வாதியாக மக்கள் மனதில் நிலைநாட்ட நடக்கும் நாடக வியாபார யுக்தி தான். கருணா பற்றியும் லாலு பற்றியும் ராகுல் பற்றியும் பகடிகள் தொடருவது ஏன். மக்களின் பார்வையிலும் செவியிலும் தொடர்ந்து படவேண்டும்.
உடனே என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள். அவர் எவ்வளவு பெரிய நடிகர் தெரியுமா என்று பாடம் எடுக்காதீர்கள். ஒரு நடிகனை, நடிகனாக கொண்டாடுவதற்கு எனக்கு பாடம் தேவையில்லை. இரண்டு வாரத்துக்கு கூட ஒரு படத்தை ஓட்ட முடியாத இன்றைய நிலையில், கேப்டன் பிரபாகரன் திரைப்படம் அருப்புகோட்டை லட்சுமி திரை அரங்கத்தில் ஆறு வாரங்கள் அன்று ஓடியது எப்படி என்று புரியாதவன் இல்லை.
ஆனால் எந்த நாளும் எந்த ஒரு நடிகரையோ நடிகையையோ அரசியல் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது. நாமென்ன கர்மவீரர் காமராசரா, நடிகர் திலகத்தை ஒருபுறம் பரப்புரைக்கு அழைத்து செல்வதும், மறுபுறம் கலைவாணரை பார்த்து, "கூத்தாடிகள் எல்லாம் அரசியலுக்கு லாயக்கில்லைங்குறேன்" என்று சொல்லுவதற்கு.
புகைப்பட உதவி நன்றி விகடன்.
விகடன் கட்டுரை : http://www.vikatan.com/news/article.php?aid=44687
No comments:
Post a Comment