உடல் மொழி பாடம்

பொதுவாகவே புறநகர இரயில்களில், இரெண்டாம் வகுப்பு என்றால் மூன்று பேருக்கான இருக்கையில் நான்கு பேர் அமர்ந்திருப்பார்கள். அதுவே முதல் வகுப்பு என்றால் மூன்று பேருக்கான இருக்கையில் முன்று பேர் மட்டும் அமர்ந்திருப்பார்கள்.

இன்றும் பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்ட  மூன்று பேருக்கான இருக்கையில் மூன்று அக்காக்கள் உட்கார்ந்து இருந்தார்கள். சில மாதங்களில் ஓய்வுபெறும் வயதுடைய ஒரு பெண்மணி நான்காவதாக  உட்க்கார முற்பட்டார். உடனே மூன்றாவதாக உட்கார்ந்திருந்த  அக்கா வெடுக்கென்று எழுந்து  காலியாக இருந்த பொது இருக்கையில் போய் அமர்ந்தார்.

நான்காவதாக  அமர முற்ப்பட்ட பெண்ணுக்கு மனவருத்தம் உண்டானது ; அவர் முகத்தில், ஒரு வித குற்ற உணர்வு ஆட்கொண்டிருந்தது.

ஃப்ரீயா விடுங்க ; ஒன்னும் பிரச்சனை இல்லை என்று கண் மற்றும் முகமொழி
மூலமாக சொன்னேன்.

உணர்ச்சிய கொட்டி நான் ரியாக்ஷன் காட்டினாலும் மண்ணு மாதிரி இருக்கு என்று எல்லாரும் சொல்லுவாங்க. நான் சொன்னது அந்த பெண்மணிக்கு புரிந்ததா சமாதானம் ஆனார்களா ; தெரியாது. ஆனால் அவர் முகத்தில் லேசான ஒரு மாற்றம் தெரிந்தது.

ஆசிரியபெருமக்களே, மற்ற பாடங்களை சொல்லிக்கொடுப்பது போலவே சைகை அல்லது உடல் மொழியையும் ஒரு பாடமாக சொல்லி கொடுங்கள்.

No comments:

Post a Comment