தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 39

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 39

கடந்த வருடம் உழைப்பாளர் தினத்தன்று, "பல்வேறு சிக்கல்களுக்கு இடையில் பொறுப்புணர்ந்து ஒழுக்கமாக வேலை செய்யும் ; மக்களால் கை விடப்பட்ட அரசு ஊழியர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துகள்." ன்னு ஒரு பதிவு. பலரும் நமட்டு சிரிப்பு சிரிச்சாங்க...

எந்த நாட்டிலும்
 மக்களாட்சி சிறப்பாக நடைபெற தேவையான தூன்கல்னு பார்த்தா அதுல ஒன்னு அரசு ஊழியர்கள்.

மேலதிகாரிகளின் அழுத்தம் காரணமாக அரசு ஊழியர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் 
அரசாங்க ஊழியர்கள் பெரும்பாலும் மோசமானவங்க ஒழுங்கா வேலைய பாக்க மாட்டாங்கன்னு நினைக்குறீங்களா?

இங்கே ஊழலை ஒழிப்பதற்கு தனி துறைகள் ஏற்ப்படுத்துவார்கள். அந்த துறையில் உள்ளவர்கள் பெரும் கையூட்டுக்கு... இங்கே ஒருவர் மீது மற்றொருவருக்கு நம்பிக்கை கிடையாது. ரஷ்யாவில் விண்வெளி துறை மற்றும் அரசாங்க துறைகளில் வேலை செய்பவர்கள் வெளிநாட்டினருக்கு ரகசிய தகவல்களை கொடுக்க கூடிய சூழல் அதிகமாக இருந்தபோது, அந்த நாட்டின் அதிபராக இருந்த புடின் அவர்களுக்கு சம்பள உயர்வு கொடுத்தார். தன் நாட்டு மக்கள் மீது ஆட்சியாளருக்கு இருக்க வேண்டிய நம்பிக்கை... 

மக்கள் தொகைக்கு ஏற்றவாறு அரசு உழியர்கள் இருக்காங்களா? கடந்த வருடம் வெளியான புள்ளிவிபரப்படி உலகிலேயே மக்கள் தொகைக்கும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கைக்குமான விகிதாச்சாரம் மோசமான நிலையில் உள்ள நாடுகளில் முதல் 5 இடத்தில் இருக்கிறது நம் நாடு. வேலைப்பளு அதிகம் இருக்கும்போது உள்ளதில் எது  அவசரம் என்று ஒருவர் கேட்கிறாரோ அதைதான் முதலில் முடிக்கமுடியும். 

பதவி உயர்வும் பணியிட மாறுதலும் கிடைத்து ஒரு புது ஊருக்கு சென்று நீங்கள் பணியில் சேர்ந்தால் ; அதே நாளில் உங்களுக்கு  மரியாதை செய்ய ஒரு கும்பல் அங்கே வரும். "நம்ம சமுதாயத்த சேர்ந்த நீங்க இந்த பெரிய பதவிக்கு வந்திருக்கது ரொம்ப சந்தோசம்". இத்தன நாளா இடை நிலை கடை நிலை ஊழியரா நான் இருந்தப்ப நீங்க எங்க இருந்தீங்கனு கேள்வி கேட்க முடியாது.

"நம்ம தலைவருக்கு சிலை வைக்க போறோம். உங்க அலுவலகத்துல இருக்க ஊழியர்கள் கிட்ட நன்கொடை வசூல் செய்ய நீங்க அனுமதிக்கணும்." அப்படீன்னு ஒரு கூட்டம் வரும். சட்டப்படி, நீங்க அனுமதி கொடுத்தா உங்க வேலை போகும்.

அனுமதி கொடுக்கலைனா நீங்க என்ன சாதினு பாப்பாங்க. நீங்க வேற சாதி ஆளுன்னு தெரிஞ்சா, சாதி வெறியன்னு ஒரு பட்டம் கொடுப்பாங்க. மொட்ட கடுதாசி போடுவாங்க. ஒரே சாதிய சேர்ந்த ஆளா இருந்தா, இவனைப்போல ஆளுகலாலதான் நமக்கு கெட்ட பேருன்னு திட்டுவாங்க.  (தொடரும்)





No comments:

Post a Comment