தமிழக அரசியல் கட்சிகள்

தமிழகத்தில் இரண்டு கட்சிகள் தான் உள்ளன. ஒன்று தி.மு.க. மற்றொன்று அ.இ.அ.தி.மு.க. மற்றவை எல்லாம் இவற்றின் கிளை கழகங்கள் தான்.  "திராவிடம்" என்ற ஒரு விற்பனை பொருளுக்கு  ஏற்ப்படுத்தப்பட்ட மாய சந்தை அபரிமிதமானது. அந்த சந்தையில் தங்களின் பொருளை / கொள்கைகளை விற்கும் நிலையில் தான் மற்றவர்கள் இருகிறார்கள்.

மற்ற எல்லா கட்சிகளும் தனியே காகிதங்களில் கொள்கைகள் இருந்தாலும், விவசாய அணி ; மருத்துவர்கள் அணி ; நெசவாளர்கள் அணி என அதிகாரப்பூர்வமாக  சில அணிகள் இருந்தாலும். எல்லா  கட்சிகளுமே பொதுவாக இரண்டு அணிகளாக தான் செயல் படுகிறார்கள்.



ம.தி.மு.க. : இரெண்டாம் கட்ட தலைவர்கள் பலரும் கட்சி மாறிவிட்டார்கள். ஆனால் தொண்டர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள். பொதுவாகவே முடிவெடுக்கும் வேளையில், தொண்டர்கள் ஒருபுறமாகவும் தலைவர் ஒருபுறமாகவும் இருந்து முடிவெடுக்கும் கட்சி இது. நடிகர் விஜயகாந்த் கட்சிக்கும் இது பொருந்தும். 

இதற்க்கான காரணம் என்னவென்றால், மற்ற கட்சிகள் எல்லாம் தங்கள் கட்சியை காப்பாற்றி கொள்ள ; தங்களை காப்பாற்றி கொள்ள ; தங்கள் உடைமைகளை காப்பாற்றிக்கொள்ள இந்த இரண்டு அணிக்கும் மாறி மாறி செல்கிறார்கள் என்றால், திரு. வைக்கோ மற்றும் திரு விஜயகாந்த் இருவரும் என்ன செய்கிறார்கள் என்றால், திராவிடம் என்ற பொருளுக்கான சந்தையை காப்பாற்ற, திரு. கருணாநிதிக்கும் செல்வி ஜெயலலிதாவுக்கும்   நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவுகிறார்கள். இதற்காகவே கட்சி நடத்துகிறார்கள். அவர்களுக்கிடையில் நிச்சயம் tactical understanding உண்டு.

ஏனென்றால் திரு. கருணாநிதி ; செல்வி ஜெயலலிதா ஆகியோருக்கு பின்னால் தி.மு.க. மற்றும் அ.இ.அ.தி.மு.க. கட்சிகள் அழிந்துவிடாமல் ; திராவிடத்துக்கான சந்தையை சிந்தாமல் சிதறாமல் காப்பாற்றி தங்களை சார்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொறுப்பு அவர்களுக்கு உண்டு என்பதனை உணர்திருக்கிரார்கள் என்றால் அது மிகையாகாது.

இந்த "திராவிடம்" என்ற ஒரு விற்பனை பொருளுக்கு முன்னமே தோன்றிய பல கொள்கைகளுக்கு சரியான பரப்புரை செய்யாததால் இந்த நிலை நீடிக்கிறது. ஆனால் அந்த கொள்கைகள் இன்னமும் பலருடைய மனங்களில் ஆழமாக இருக்கிறது. மலிவாக கிடைக்கும் சீனா பட்டாசுகளுக்கு இருக்கும் மவுசு தான் இந்த திராவிடத்துக்கும்.

No comments:

Post a Comment