தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 46

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 46

கல்லூரில படிக்கும்போது திருக்குறள மேற்கோள் காட்டி  விவசாயம் எவ்வளோ சிறந்தது ; விவசாயிகள எல்லோரும் எவ்வளோ மதிக்கணும்னு பேசிகிட்டு இருந்தேன். விவசாயி கணக்கு பாத்தா ஒன்னும் மிஞ்சாதுங்குற  எல்லாரும் சொல்லுற வசனத்த சொன்னேன். நண்பன் ராஜேந்திரன் பொங்கி எழுந்துட்டாப்புல. விவசாயிகளுக்கு தான் இலவச மின்சாரத்த அரசாங்கம் கொடுக்குது.  விவசாய வருமானத்துக்கு தான் வரிவிலக்கும் இருக்குனு பேசுனாப்புல. மனசுக்கு ரொம்ப சங்கடமா இருந்தது.

பெட்டி கட காரன் எவன் வரி கட்டுறான் தொழில் செய்யுறவன் எத்தன பேரு ஒழுங்கா வரி கட்டுறான்னு ஒரு விதமா வாக்குவாதம் நடந்தது. அரசாங்கம் செய்ய வேண்டியத செய்யாம விட்டுட்டு தேவை இல்லாதத செய்யுறதால இந்த மாதிரி பழுதுபட்ட புரிதல் பல தரப்புலயும் இருக்கு.

அறுவடைக்கு பிந்தைய காலத்தில் உணவு பொருட்கள் அதிகம் விரயம் ஆகுரதாவும் ;  உணவு & தானியங்கள் பதப்படுத்துதல் துறைய சீர் செய்ய போறதாவும் தொடர்ந்து அமைச்சர்கள் பேசுறாங்க. Food Corporation of India நிறுவனத்துல நிறைய உணவு தானியங்கள் வீனாகுறதாவும் அத  பட்டினியால் இறக்கும் இந்தியர்களுக்கு கொடுக்கலாமேன்னு  நீதிமன்றம் கேட்டா,  அது முடியாதுங்குறாங்க. அங்க வேலை பாக்குற மூட்டை தூக்கும் தொழிலாளி ; நாட்டின் ஜனாதிபதியை காட்டிலும் அதிகம் சம்பளம் வாங்குறதா செய்தி வந்தது. அத வச்சு வழக்கு நடந்தது.

Walmart வர போகுது அதனால வியாபாரிகள் எல்லாத்துக்கும் சிரமம்னு ஒரு போராட்டம் நடத்துனாங்க. நல்லது  கெட்டது பாக்காம உரத்தையும் விதையையும்  வித்து விவசாயம் கெடுறதுக்கு துணை நின்ன  வியாபாரிகளுக்கு தார்மீக  உரிமை இருக்கா.

சென்னை K.K. நகர்ல MPM Departmental store நு ஒரு  பலசரக்கு அங்காடி இருக்கு தந்தை  மற்றும் மகன்கள் சேர்ந்து கடைய நடத்துறாங்க. அங்க வேலை செய்யும் பணியாட்கள் எல்லோருமே அந்த கடை முதலாளிய  அப்பான்னு தான் கூப்பிடுவாங்க. வாடிக்கையாளர்கள் கிட்ட அவங்க  காட்டுற மரியாதையும்  கொடுக்குற சேவையும் சிறந்ததா இருக்கும். பொருளும் விலையும் அப்படிதான். எத்தன Walmart  வந்தாலும் இவங்கள அடிச்சுக்க முடியாது.

No comments:

Post a Comment