தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 47

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 47

"organic பொருள்ன்னு சொல்லி இப்பலாம் நிறைய பேரு ஊற ஏமாத்துறாங்க. அவங்களோட நிலத்துல மரபணு மாற்றப்பட்ட விதை ; ரசாயன உரங்கள் ; பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தலைனாலும், அவங்க நிலத்துக்கு பக்கத்துல இருக்க நிலங்கள்ள இதை எல்லாம் பயன்படுத்துனா, அதோட தாக்கம் எல்லாத்துக்கும்  உண்டு இல்லையா. அப்பறம் எப்படி organic பொருள்னு சொல்லமுடியும்?"  இப்படி சிலர் பேசுறாங்க.

இவங்களோட வாதம் எப்படினா எல்லாரும் மாறனும் இல்லைனா யாருமே மாற கூடாது. ஆனா எதார்த்தம் வேருமாதிரி இருக்கு. வரத்து மற்றும் தேவை இதில் ஏதோ ஒன்றின் மூலமாக  சந்தையின் போக்கில் மாற்றத்தை கொண்டுவர முடியும்.  வரத்தில் ஏற்ப்படும் சிறு மாற்றமானது சில காலத்தில், அந்த மாற்றத்தின் மூலமாக தேவையில் மாற்றத்தை கொண்டு  வரும். அந்த மாற்றமானது வரத்திலும்  முழுமையான மாற்றத்தை நாளடைவில் கொண்டுவரும். உதாரணத்துக்கு சொல்வதென்றால் noodles என்ற ஒன்று சந்தையில் நுழைந்தபோது அதற்கென்று ஒரு தேவை இருக்கபெறவில்லை. ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை.

தமிழக அரசாங்கம்  தோட்டகலைத் துறை மூலமா மாடித்தோட்டத்த ஊக்கபடுத்துறாங்க. நல்ல விடயம் தான். ஆனா அதுல கொடுக்குற விதைகள், மரபணு மாற்றபட்ட விதைகளா இருக்கிறதா சொல்லுறாங்க.  இது ஒரு அழிவு வேலையாகும். நல்ல விதைகள கொடுத்தா  தேவல.

No comments:

Post a Comment