தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 48

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 48

காமராசர் ஆட்சியை கொண்டுவருவோம்னு சிலர் சூளுரைக்குறாங்க. அப்படினா என்ன? அது சாத்தியமா? சுதந்திரத்துக்கு முந்தய காலகட்டத்தில் காமராசர் ஒரு சிறந்த தேச பக்தர். அதனை யாரும் மறுக்க முடியாது. ஆனால் சகவாச தோஷம் தான் கெடுத்துவிட்டது.  ஒன்று நேரு. மற்றொன்று திருட்டு திரிவடுக கூட்டம்.

1) BHEL நிறுவனத்துக்காக நிபுணர்கள் இடம் தேடியபோது அதற்க்கு தகுந்தார் போன்ற இடம் எங்கும் கிடைக்கவில்லை ; அப்போது முதல்வராக இருந்த திரு. காமராசர் அவர்கள், திருவெறும்பூர் என்ற இடத்தை பரிந்துரை செய்தார். நிபுணர்கள் எதிர்பார்த்த அம்சங்கள் நிறைந்த இடமாக அந்த இடம் இருந்ததால் அங்கே BHEL  நிறுவனம் வந்தது.  பல பேருக்கு வேலை வாய்ப்பை கொடுத்தது.

இந்த நிகழ்வானது நம் எல்லோருக்கும் தெரியும். படிக்கவில்லை என்றாலும் கூட அவரின் புவியியல் அறிவு எல்லாராலும் மெச்சப்பட வேண்டும். 

அதே காமராசர் தான் சீமை கருவேலம் மரங்களை முகவை மாவட்டத்தில் தூவிவிட்டார். நாரை தாண்டா கண்மாய் என்று பெயர் பெற்ற, மாநிலத்திலேயே அகலம் அதிகம் உடைய கண்மாய் என்று அறியப்பட்ட ராமநாதபுர கண்மாய் இருந்தும்  அங்கே பல வருடங்களுக்கு முன் அங்கே தண்ணீருக்கு தட்டுப்பாடு வந்து. இன்றைக்கு மகாராஸ்ட்ராவில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு பற்றியும் இரயிலில் தண்ணீர் கொண்டு செல்லபடுவது குறித்தும் இப்போது ஊடகங்களில் பார்க்கிறோமே அது போன்ற நிலை ராமநாதபுர மாவட்டத்தில் ஏற்ப்பட காரணம் சீமை கருவேலம் தானே. அதற்க்கு பொறுப்பு ஏற்ப்பவர்கள் யார். அரசு அதிகாரிகள் தானே...

ஒரு திட்டத்தின் மூலம் நல்ல பெயர் கிடைகிறது என்றால் அது அரசியல்வாதிக்கும் ; கெட்ட பெயர் கிடைகிறது என்றால் அது அரசு அதிகாரிகள் / ஊழியர்களுக்கு போய் சேர வேண்டும். இந்த நடைமுறை இன்றுவரை மாறவே இல்லை. 

உழவர் சந்தை மூலம் நல்ல பெயர் வருகிறது என்றால், அந்த திட்டத்தை கொண்டுவந்தவர் கருணாநிதி என்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள். அதுவே மீத்தேன் திட்டத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, அதிகாரிகள் எங்களை தவறாக வழி நடத்தி விட்டார்கள் என்று ஸ்டாலின் சொல்லுவார்.

தொட்டில் குழந்தை திட்டத்தால் நல்ல பெயர் வருகிறது என்றால் அது செல்வி ஜெயலலிதாவையும் ; பெரும் வெள்ளத்தில் மக்கள் பாதிக்க பட்டால் அதில் வரும் கெட்ட பெயர், அது அதிகாரிகளின் கவனக்குறைவால் நடந்தது என்றும் அறியப்படும்.  

தோழர் மண்ணாங்கட்டி குறித்த நிகழ்வு அனைவருக்கும் தெரியும் என்பதால் அதை பற்றி மீண்டும் விலாவரியாக பேச வேண்டாம். தவறு நடந்து விட்டது என்றதும், என் கவனத்துக்கு வராமல் நடந்து விட்டது என்று திரு. காமராசர் கூறினார். அதுபோலவே கடந்த சில வருடங்களுக்கு முன் தேர்வுகளை தமிழில் எழுத முடியாது ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்று கல்லூரி மாணவர்களுக்கு சுற்றறிக்கை தயாரானது.  இறுதியில், என் கவனத்துக்கு வராமல் அதிகாரிகள் தவறு  விட்டார்கள் என்று செல்வி ஜெயலலிதா கூறினார். 

செல்வி ஜெயலலிதாவுக்கு தெரியாமல் அவரது முன் அனுமதி இல்லாமல் அதிகாரிகள் மற்றும் மந்திரிகளால் மூச்சு விட முடியும் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? 

No comments:

Post a Comment