தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 49

2) ஒரு திட்டத்துக்கு தேவைப்படும் நிதிஆதாரத்தை ஒதுக்காமல் திட்டத்தை துவக்குவது ; துறையை ஏற்ப்படுத்துவது  ; அடிக்கல் நாட்டுவிழா மட்டும் நடாத்துவது. அதுவும் ஆட்சியில் இருந்து விலகும் நேரத்தில்.... அது குறித்து கேள்வி எழுப்பினால் உணர்ச்சி வசனங்கள் பேசுவது.

கர்ம வீரர் காமராசரின் பெயர் சொல்லும் மதிய உணவு திட்டம் பற்றி முன்னமே கல்வி பகுதியில் பார்த்தோம்.

அதுபோலவே கலைஞரும் மாற்று திரனாளிகள்  என்ற துறையை உருவாக்கினார் போதிய நிதி ஆதாரத்தை ஒதுக்காமலே. செல்வி ஜெயலலிதாவும் பல அடிக்கல் நாட்டு விழாக்கள் மட்டும் நடத்தி இருக்கிறார்.  பல மாவட்டங்கள் துவக்கபட்டபோதும் கிட்ட தட்ட இதே நிலை தான்.

3) தனிப்பட்ட (அல்லது அரசியல்) பகையை (அல்லது இயலாமையை) திசைதிருப்பி சாதி / இனக்குழுக்களின் பிரச்சனையாக சித்தரித்து கவனத்தை திசை திருப்புவது.

நேரு வந்து பரப்புரை செய்தும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தொடர்ந்து தோற்றார்கள். அரசாங்கத்தின் மேல் மக்களுக்கு அதிர்ப்த்தி உருவானது. இந்த வஞ்சத்தை தீர்க்க கவனத்தை திசை திருப்ப முதுகளத்தூர் கலவரத்தை காமராசர் & பக்தவச்சலம் அரசாங்கம் உருவாக்கியது.

கலைஞர் பற்றி சொல்லவே வேண்டாம் எல்லாருக்கும் நல்லா தெரியும். செல்வி ஜெயலலிதா இந்த முறை அதை செய்ய முற்ப்பட்டு ஒரு இடத்தில் தோற்றார் மற்றொரு இடத்தில் வெற்றி பெற்றார். சில வருடங்களுக்கு முன் பரமக்குடியில் நடந்த காவல்துறையின் துப்பாக்கிச்  சூடை சாதி சண்டையாக சித்தரிக்க முயன்றார். ஆனால் அவரது கூட்டணியில் இருந்த டாக்டர் கிருஷ்ணசாமி  அதனை மறுத்து சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார். அடுத்ததாக இளவரசன் என்ற ஒரு வாலிபனை பகடையாக வைத்து ஒரு முயற்சி ; அதில் செல்வி ஜெயலலிதாவுக்கு வெற்றி தான்.

4) வணிக குழுமம் போல அரசாங்கம் செயல்படுவது.

பொது விநியோக திட்டத்தை துவக்கிய போது அதனை பலரும் விமர்சனம் செய்தார்கள். அரசாங்கமானது வணீகத்தில் ஈடுபடக்கூடாது ; வணிகர்களை கட்டுபடுத்த  வேண்டும் என்று. இன்றளவும் தமிழக ரேஷன் அரிசி மற்ற மாநிலங்களுக்கு கடத்தபடுவது தொடர்கிறது. 

திரிவடுக ஆட்சியில் கல்வி மருத்துவம் போன்ற மக்களுக்கு அடிப்படையான விடயங்கள் தனியார் வசமும் போக்குவரத்து ; மதுபான கடைகள் மற்றும் இன்ன பிற விடயங்கள் அரசாங்கத்தாலும் விற்பனை செய்ய படுகின்றன.

No comments:

Post a Comment