தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 27

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 27



தங்களை நிலைநாட்ட தங்களின் அடையாளத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை இருப்பதாக தாங்களாகவே தவறாக நினைப்பவர்கள் செய்கிறார்கள். பூர்வ குடிகளாக இல்லாதவர்கள் பலரும் அவர்கள் குடியேறிய பகுதிகளில் நீண்ட காலம் அங்கேயே நிரந்தரமாக தங்கிவிடுவதர்க்காக இதனை செய்வதுண்டு. 


உங்கள் மகளையோ அல்லது உங்கள் சகோதரியையோ வெகுதூரம் இருக்கும் மாப்பிள்ளைக்கு மனம் முடித்து வைப்பதற்கு உங்களுக்கு தயக்கம் இருக்கும் தானே?

நடைமுறை எதார்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் திரிவடுக தேசத்துக்கு சென்று தன் மகள் / மகனுக்கு வரன் தேடுவது என்பது அவ்வளவு லேசானது கிடையாது. தமிழகத்துக்கோ அல்லது வேறு மாநிலத்துக்கோ புலம் பெயர்ந்தவர்கள் என்கிறபோது அவர்களின் பிள்ளைகளுக்கு பெண்களை கட்டி கொடுப்பது என்றால் திரிவடுக தேசத்தவர்களுக்கு சற்று தயக்கம் இருக்கும் அல்லவா.

அதுபோலவே அயலவர்களுக்கு பெண்ணை மனம் முடித்து வைப்பதற்கு பூர்வகுடிகளான தமிழர்களுக்கு தயக்கம் இருக்கும் தானே? இந்த நடைமுறை சிக்கல்களுக்கு என்ன வழி ஒருபுறம் புலம்பெயர்ந்து வந்த திரிவடுகர்கள் தங்கள் அடையாளத்தை சில காலம் மறைக்க வேண்டும். அதுபோலவே மறுபுறம் பூர்வகுடிகளும் தங்கள் அடையாளத்தை துறக்க வேண்டும்.

அதற்க்கு வலுவான பரப்புரை தேவைப்படும் அல்லவா. அந்த இடத்தில் தான் so called தீண்டாமை ; சாதி மறுப்பு ; கடவுள் மறுப்பு போன்றவை எல்லாம் கைகொடுக்கும்.


உதாரணத்துக்கு சொல்வதென்றால் கலைஞர் குடும்பத்தை எடுத்துக்கொள்ளலாம். ஈ படத்தில், நடிகர் பசுபதி ஒரு வசனம் பேசுவார். "அப்பன் பேரு தெரிஞ்சா உன்ன ஒரு சாதி மொழி மதத்துல அடச்சிறுவாங்க. அப்பன் பேரு தெரியலைனா பொதுவானவன்னு  உன்ன எல்லாரும் ஏத்துப்பாங்க". கலைஞரின் அரசியல் புரியாம, "தலைவர் வீட்டுல கொள்கை திருமணம் செஞ்சுகிட்டாங்க. நாமளும் கொள்கை திருமணம் செஞ்சுக்கணும்னு" செய்யுறது பாவப்பட்ட இரண்டாவது வகையறா.

No comments:

Post a Comment