தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 28

மூன்று : "பொருளாதார ரீதியா நீ பின் தங்கி இருக்க. பணக்காரன் வீட்டு பிள்ளைய காதலிச்சா தான் உடனே நீயும் பணக்காரனா ஆக முடியும்". இப்படி தவறாக திசைதிருப்பகூடிய சோ கால்டு அரசியல் வியாதிகள் பேச்சை கேட்டு தங்கள் வாழக்கையை கெடுத்துக்கொண்டு சமூகத்தில் தங்கள் குடும்பத்துக்கு அவப்பெயரை ஏற்ப்படுத்துபவர்கள் மூணாவது வகையறா.

"சாதிகளை விட்டு நாங்கள் விலகி இருக்கிறோம்" என்று முதல் வகையறா எப்போதுமே சொல்லமாட்டார்கள். செயலில் மட்டும் இருக்கும்.

இரண்டாவது மூன்றாவது வகையறா, சாதி ஒழிப்பு பத்தி எல்லாநேரமும் பேசுவாங்க. மத்தவங்கள சாதி வெறியர்கள்னு பேசுவாங்க. ஆனா சாதி சான்றிதல் வாங்குவாங்க. கலப்பு திருமண சலுகை எதிர்பார்ப்பாங்க."

"கங்காவும் சில ரோஜா பதியன்களும்" வாஸந்தி எழுதிய ஒரு சிறுகதையை சில வருடங்களுக்கு முன் படித்தேன். கணவனால் கை விடப்பட்ட ஒரு பெண், சுய சம்பாத்தியம் மூலமாக சீட்டு பணமும் ஒரு வீட்டை லீசுக்கும் எடுத்திருப்பார். அவளின் தாயார் அவளுக்கு மறுமணம் செய்துவைக்க முயர்ச்சிப்பார். பணம் மற்றும் வீட்டை குறிவைத்து ஒருவன் வருவான். அவனை மறுத்து விடுவாள். இன்ன்றும் Fair & Lovely விளம்பரத்தில் சமமான சம்பாத்தியம் மற்றும் சொத்து இருந்தால் மட்டுமே equal ~ equal என்று சொல்லுகிறார்கள். 


அப்படி இருக்கும்போது பலவருடம் வம்பாடு பட்டு வளர்க்கும் பெற்றோர் தங்கள் பெண்ணை ஒரு கயவன் காதலிக்கிறான் என்று தெரிந்துகொள்ளும்போது இயல்பாகவே ஒரு வித அச்ச உணர்வோடு தங்கள் மகளின் வாழ்வை பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும் என்று தானே நினைப்பார்கள் அதில் என்ன தவறு இருக்கிறது. ஒரே சாதியாக இருந்தாலும் அதைதானே செய்கிறார்கள். கண்ணை மூடிக்கொண்டு கட்டிகொடுக்கவேண்டும் என்று காதலர்களுக்கு ஆதரவாக படம் எடுக்கும் இயக்குனர் சேரனின் மகள் விடயத்தில் என்ன நடந்தது?

No comments:

Post a Comment