தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 30

தேர்தல் / அரசாட்சி  குறித்து பேசும்போது அரசியல் கட்சிகள் அரசியல் வியாதிகள் ஆகியவற்றை பேசுவதை காட்டிலும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அதற்க்கான காரணிகள் அதற்க்கான சூழ்நிலைகள் பற்றி பேசுவது மிகவும் அவசியமாகிறது. சின்ன சின்ன வெளிப்படையாக தெரியும் விடயங்களை காட்டிலும் அதில் புதைந்து இருக்கும் நுண் அரசியல் குறித்து பேசுவது அவசியம் என்று குத்தினேன். அதில் உள்ளடக்கமாக எல்லாரும் பேசக்கூடிய மது மற்றும் ஊழல் குறித்து வேண்டாம் என்று கருதினேன்.

முதலில் கட்சிகள் குறித்து விரிவாக பார்த்தோம் அடுத்ததாக கல்வி குறித்து பார்த்தோம் ; பத்திரிக்கைகள் குறித்து பார்த்தோம். காதல் குறித்தும் சாதி மறுப்பு திருமணங்கள் குறித்தும் பார்த்தோம். சினிமா குறித்தும் ; அரசு ஊழியர்கள் குறித்தும் ; தமிழ் மொழி குறித்தும் ; காமராசர் ஆட்சி குறித்தும் ; ஆட்சி முறை குறித்தும் பார்க்க உள்ளோம். இது வானொலியில் வரும் நேயர் விருப்பம் கிடையாது என்பதனால் உள்ளடக்கத்தை தீர்மானித்தேன்.

தமிழக தேர்தலுக்கும் காதல் திருமணங்களுக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி வந்திருக்கிறது. உங்களுடைய அறிவு முதிர்ச்சியின் மீது நான் வைத்த நம்பிக்கையின் காரணமாக ஒவ்வொரு தலைப்பு மாறும்போதும் அதிகமாக அறிமுகம் கொடுக்கவில்லை. கலப்பு மனம் புரிபவர்களுக்கு சலுகைகள் அதிகரிக்கப்படும் என்று சில கட்சிகள் தேர்தல் வாக்குறுதி கொடுத்து இருக்கிறார்கள். பெண்ணகளின் திருமண வயதை 21 ஆக சட்டபூர்வமாக கொண்டுவர வேண்டும் என்று திரு. ராமதாஸ் அவர்கள் மைய அரசை வலியுறுத்தி இருக்கிறார். இளவயது திருமணங்கள் தடுக்கப்பட வேண்டும் ; பெண்கள் வேலைக்கு போவதற்கு இளவயது திருமனகள் தடையாக இருப்பதாக கூறும்  அமைப்புகள் பெரும்பாலும் மருத்துவர் ராமதாசின் இந்த அறிவுறுத்தலை ஏளனம் செய்வது எதனால்?

பொருளாதார ரீதியாக தங்களை நிலைநிருத்திக் கொள்ளாதவர்கள் எப்படி காதல் செய்கிறார்கள். பெற்றோர் ஈட்டும் பொருளில் வாழ்க்கையை நடத்திக்கொண்டு காதலிப்பதற்கு எப்படி சுய மரியாதை இடம் கொடுக்கிறது. "துள்ளி திரிந்த காலம்" திரைப்படத்தில் ரகுவரன் பேசும் வசனம் எவ்வளவு உண்மையானது. யாரோ ஒருவர் அடைக்கலம் கொடுக்கிறார் என்பதற்காக எங்கோ சென்று வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கும்போது வருந்தப்போவது யார்.

இங்கே சாதி மறுப்பு பற்றியும் கலப்பு திருமணம் குறித்தும் பலரும் பெருமையாக பேசுகிறார்கள். இதில் பெருமை பேச என்ன இருக்கிறது. நான் வன்னியர் வன்னியர் இனத்தவரை தான் நான் திருமணம் செய்வேன் என்று சொல்லுவதற்கும். நான் முதல்யார் சாதி ;  வேறு சாதி பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என்று சொல்லுவதற்கும் என்ன பெரிய வேறுபாடு இருக்கிறது.

என் நண்பர்களில் சிலர் கிருத்தவர்கலாக இருக்கிறார்கள் சிலர் முகமதியர்களாக இருக்கிறார்கள். அவ்வளவுதான். இதில் கிருத்தவ நண்பர்கள் முகமதிய நண்பர்கள் என்று சொல்ல வேண்டிய தேவை என்ன வந்தது. இந்துவாக பிறந்த  நண்பர்களை இந்து நண்பன் என்றா அழைக்கிறேன்?

சாதி ஒழிப்பு போராளிகள் மற்றும் மத சார்பற்ற / சகிப்புத்தன்மை அதிகம் உடைய நண்பர்களே. என் அடையாளத்தை நான் துறக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். மிகிழ்ச்சி எந்த சாதியையும் சாராதவன் என்கிற சான்றிதழ் ஒன்று இங்கே இருக்கிறது. போராளிகள் அனைவரும் அதில் கையொப்பம் இடுங்கள் என்று நான் சொல்ல மாட்டேன். பொருளாதாரத்தில் முன்னேறிய ஒரு உதாரணத்துக்கு ; 10 கோடிக்கு மேல் சொத்து இருக்கும் சாதி ஒழிப்பு போராளிகள் மட்டும் முதல் தவணையாக கையொப்பம் இடுங்களேன்.

No comments:

Post a Comment