சில வாரங்களுக்கு முன்னால ஒரு அ.தி.மு.க. காரரு கோவை காந்திபுரம் வரைவு பாலத்தோட மாதிரிய போட்டு, அந்த கட்சியோட சாதனையா போட்டிருந்தாரு. உடனே தி.மு.க. காரங்க ஊரு உலகத்துல இருக்க எல்லா பாலங்க லோட புகைப்படங்களையும் போட்டு அதிமுக வ கலாய்ச்சாங்க.
பாலங்கள் கட்டுறத நல்ல ஆட்சிக்கான குறியீடா இங்க எல்லாரும் முன் வைக்குறாங்க. ஆனா பாலம் கட்டுறது மட்டுமே போதுமா? இல்ல எல்லா ஆட்சிலயும் பாலம் கட்டிகிட்டே இருக்க முடியுமா?
ஒரு பாலம் கட்டினா அது குறைஞ்சது இருபது முப்பது ஆண்டுகளாவது பயனுடையதா இருக்கணும். குறிப்பிட்ட நேரத்துக்குள்ள கட்டி முடிக்கணும். இல்லைனா அது சுத்த வேஸ்ட். உதாரணத்துக்கு பாத்தா சென்னை ஆர்க்காடு ரோடு - கோடம்பாக்கம் மேம்பாலம் ; அண்ணா சாலை மேம்பாலம். இதே சென்னைல கண்ணதாசன் மேம்பாலம் இருக்கு. அதனால எத்தன பேருக்கு பயன் இருக்கு?
பொதுவாவே காங்கிரஸ் ஆட்சிக்கு பின்னாடி, அணைகள் எதுவும் பெருசா கட்டலைன்னு குறைபடுறதுஉண்டு. விடுதலைக்கு பின்னாடி ஆட்சிக்கு வந்ததால அதெல்லாம் கட்டினாங்க. அதே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆட்சில இருந்திருந்தாலும் 30 வருடத்துக்கு வேற அணைகள் கட்டிருக்க மாட்டாங்க. ஏன்னா திரும்ப திரும்ப அணைகள் கட்டுறதுங்குறது தோசை சுடுற மாதிரி இல்ல.
No comments:
Post a Comment