தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 21 தொடர்ச்சி

2014 நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் விருதுநகர் தொகுதி வேட்பாளர்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்கள். வை.கோ. மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் சாதி என்ன என்று விகடனுக்கு தெரியாதாம். ஆனால் மற்ற அனைவரின் சாதியும் தெரிகிறது.

அண்மையில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது எந்த தொலைக்காட்சியை பார்த்தாலும் சிறந்து விளங்கும் தொழில் அதிபர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்கள் விருது கொடுத்தார்கள். அதில் பெரும்பாலும் திரிவடுகர்கள் தான். ஒரு வேலை அவர்கள் மட்டும் தான் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார்கள் என்றால் அவர்களை பார்த்து தமிழ் பெண்கள் வளருவதில் தவறில்லை. ஆனால் நிலைமை அப்படி இல்லை. அதோடு முடியவில்லை. பெண்கள் தினம் கொண்டாடபடுவதன் மூலம் ; நம் நாட்டில் நம் கலாச்சாரத்தில் பெண்களை மதிக்க வேண்டும் என்கிற மாற்றம் வந்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று திரு. பச்சை முத்து என்கிற பாரி வேந்தரும் ; திரு தங்கபாலு போன்றவர்களும் சொல்லுகிறார்கள். 


எந்த நாட்டை பற்றி சொல்லுகிறார்கள். அமெரிக்காவில் சுவாமி விவேகனந்தர் அவர்கள் தன்னுடைய பேச்சை "சகோதரிகளே சகோதரர்களே" என்று தான் பேச்சை தொடங்கினார். தவறான தொழில் செய்யும் பெண்களை பார்த்தாலும் அவர்களில் கடவுளின் உருவத்தை பார்க்கிறேன்னு சொன்ன ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த நாட்டுல பெண்களுக்கான மரியாதை பற்றி பேசினா எப்படி. இங்க தமிழ் நாட்டுல அறுத்து கட்டும் வழக்கமும் உண்டு உடன்கட்டை ஏறுர வழக்கமும் உண்டு.

பொருள்ள விக்குரதுக்காக பெண் விடுதலை பேசுற ஆட்களுக்கு துணை போறது பத்திரிக்கைகளும் ; காட்சி ஊடகங்களும் தான். அவள் விகடன் எடுத்து பாருங்க...

No comments:

Post a Comment