தமிழகத்தில் அனுதாப அரசியல் :

தமிழகத்தில் எதற்கு ஒட்டு விழுகிறதோ இல்லையோ அனுதாபத்துக்கு ஓட்டுக்கள் கண்டிப்பாக விழும். இதற்க்கான காரணம் என்ன?

பொதுவாகவே  தன் எதிரியாக இருந்தாலும் அவன் சிரமப்படும் போது  அவனுக்காக இறக்கபடுவது தமிழனின் இயல்பு.  வீரம் என்ற சொல்லுக்கு உலகம் முழுவதும் எவ்வளவோ விளக்கங்கள் சொல்லபட்டாலும், தமிழ் கூறும் நல்லுலகம் சொல்லும் விளக்கம் தனி சிறப்பு பெற்றது.

போரிலே எதிர்நாட்டு மன்னன் வீரமரணம் எய்துவிட்டால் அவன் மக்களை தன் மக்கள் போல பேணி காப்பது என்ற இயல்பை வீரம் என்று கொண்டாடிய இனம் தமிழ் இனம். தோல்வியுற்றவர்கள், எதிர்நாட்டில் தஞ்சம் அடைவதென்பதை அவமானமாக கருதிய இனம். 

சிற்றூர்களில் வசிப்பவர்கள் அவர்களுக்கிடையில் சண்டை என்றால் என்னென்ன செய்வார்கள் என்று தமிழில் வெளிவந்துள்ள திரைப்படங்கள்  உண்மைக்கு புறம்பான நியாயமற்ற ஒரு தவறான பிம்பத்தை கட்டமைத்துள்ளன. குளம் ; குட்டை ; கண்மாய் போன்றவற்றை  உடைப்பவர்கலாக அல்லது விவசாய விலை பொருட்களுக்கு தீ வைப்பவர்களாக சித்தரித்திருப்பார்கள்.

ஆனால் உண்மை நிலவரம் என்ன? ஒரு சம்சாரியின் வைக்கோல் படப்பில் எதிர்பாராத விபத்தின் காரணமாக தீ பிடித்தால், அந்த சம்சாரியின் வீட்டை ஒரு துக்கம் நடந்த வீடாக கருதி, வெளியூர்களில் இருப்பவர்கள் கூட வந்து துக்கம் விசாரிப்பதையும் ; ஆதரவாக இருப்பதையும் கடமையாக கருதியவர்கள் தமிழர்கள். திருமணத்துக்கு போகமுடியாவிட்டாலும் பரவா இல்லை துக்க வீட்டுக்கு கேதம் கேட்க கண்டிப்பாக போகவேண்டும் என்று சொல்லி வளர்ப்பார்கள். 

ஆனால் இந்த இறக்க குணத்தை அனுதாப அரசியலாக ஆக்கிய பெருமை திராவிட அரசியலுக்கு உண்டு. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் இறந்த போது அங்கே அறிஞர் திரு. அண்ணா அவர்கள் பேசிய பேச்சு ஒரு துவக்க கால உதாரணம் என்று சொல்லலாம்.

இதுவரை தமிழகத்தில் அனுதாப அலை கொடுத்த தேர்தல் வெற்றிகள் :

1. திரு. ராஜீவ் காந்தி கொலையுண்ட நேரத்தில் நடைபெற்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் இரண்டு சுவரொட்டிகள் எல்லா இடத்திலும் இடம் பெற்றது. தமிழக சட்டமன்றத்தில் செல்வி ஜெயலலிதா அவர்களை துகில் உரித்ததாக சொல்லப்பட்ட நிகழ்ச்சியை நினைவுபடுத்துவதர்க்காக ஒரு சுவரொட்டி.  [மகா பாரதத்தில் துச்சாதனன்]. திரு. ராஜீவ் காந்தி கொலையுண்ட புகைப்படம் மற்றொரு சுவரொட்டி. அதன் பின்னர் நடந்த தேர்தல்களில் எப்போதெல்லாம் காங்கிரஸ் - அ.இ.அ.தி.மு.க. கூட்டணி இருந்ததோ அப்பொழுதெல்லாம் இந்த சுவரொட்டிகள் பல ஊர் சுவர்களில் இடம் பெற்றது.  


2. அதன்பின்னர் 1996 தேர்தலில் தோல்வியுற்ற செல்வி ஜெயலலிதாவை நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்ததன் அனுதாபம் அடுத்து நடைபெற்ற தேர்தலில் வெளிப்பட்டது. செல்வி ஜெயலலிதாவை கைது செய்தபோது எடுத்த படக்காட்ச்சியை வைத்து அனுதாபம் தேடப்பட்டது. 

3. 2001 தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வெற்றிபெற்றதும் 1996 கைதுக்கு பாழிவாங்க வேண்டும் என்ற முனைப்பு காட்டப்பட்டது. திரு. கருணாநிதி கைது செய்யபட்டார்.  
அப்படி கைது செய்யும் போது காவல்துறை நடந்துகொண்ட விதம் விமர்சனத்துக்கு உள்ளானது.  "அரசியல்வாதிக்கு மகனா பிறந்து இதையும் கூட பேசலைனா எப்படி.. பேசுமகனே பேசு" என்று  அமைதிப்படை படத்தில் நடிகர் திரு. சத்யராஜ், சொல்லுவது போல அந்த சம்பவமே ஒரு நாடகம் போல நடத்தப்பட்டது. அந்த சம்பவத்துக்கான அனுதாபத்தை தூண்டுவதற்கும் அதன் மூலம் பலன் பெறுவதற்கும் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார்கள். ஒரு நாள் முழுவதும் நேரலை நிகழ்ச்சியாக மக்கள் தங்கள் எண்ணங்களை பதிவு செய்யவைத்தார்கள். அதனை அடுத்த தேர்தலில் மறு ஒலிபரப்பு செய்தார்கள்.
அ.இ.அ.தி.மு.க. வின் வழியில் தி.மு.க.வும்  வெற்றி பெற்றது.

4.  2G அலைக்கற்றை வழக்கில் திரு. ராசா குற்றம் சாட்டப்பட்டு கைதான போது, அவரை ; அவர் பிறந்த பிறப்பை வைத்தும் ; கைது செய்யப்பட்டதை வைத்தும் அனுதாபம் தேட முயற்சி நடந்தது. அது நேரடியாக தேர்தலில் வெற்றியை பெற்றுத்தரவில்லை என்றபோதிலும் தி.மு.க. கட்சியும் அதன் தலைமையும், இதன் மூலம் கட்சிக்கு பெரிய பலம் கிடைத்துவிட்டதாகவே நினைகிறார்கள்.

5. இப்பொழுது மீண்டும் நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக செல்வி ஜெயலலிதா கைது செய்யப்பட்டுள்ளார். தன் பதவியை இழந்திருக்கிறார். இப்பொழுது இதை வைத்து கிடைக்கும் அனுதாபத்தை பெருக்கும் நடவடிக்கைகளை ஜெயா தொலைகாட்சி எடுத்துவருகிறது.

திரு MGR சுடப்பட்ட போது  கிடைத்த அனுதாபம் ; திரு. வெங்கடேச பண்ணையாரை ENCOUNTER செய்தபோது கிடைத்த அனுதாபம் என்று பார்த்தால் பட்டியல் மிக நீளமானது......

No comments:

Post a Comment