தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 20



"சும்மர் வந்தாச்சு முடிய நல்லா ஒட்டா வெட்டி விடுப்பா" சின்ன வயசுல நம்ம எல்லாத்துக்கும் இந்த வசனம் எவ்வளோ எரிச்சல கொடுத்துருக்கும். நகரம் னா முடிவெட்டுற கடைக்கு ; சிற்றூர் னா மரத்தடி இல்ல இன்னும் சிலருக்கு வீட்டுக்கே வந்து வெட்டி விடுவாங்க. படிக்குற பயலுக்கு என்ன ஸ்டைல் வேண்டிகிடக்கு. வேர்வை அதிகமா இருக்கும் அப்பறம் சளி புடிக்கும். நம்ம வீட்டு பெரியவங்களுக்கும் நமக்கும் ஏற்படு கூடிய முதல் கடுப்பு இதுவாதான் இருக்கும். 

கிட்டத்தட்ட 14 வருஷமா ஒரே கடைக்கு தான் போய்கிட்டு இருந்தேன். சேலத்த சேர்ந்த சுந்தர் நடத்துற செல்வம் ஹேர் ஸ்டைல். தம்பி பேருல கடை நடத்துராப்புல. படிகார கல்லு தான் வேணும்னா அது கிடைக்கும். என்ன செய்ய சொல்லுரோமோ அத செய்வாப்புல. தெரியலைனா தெரியலைன்னு சொல்லிடுவாரு.  "அண்ணே இது உங்களுக்கு வேணாம். வேலைக்கு போறவங்களுக்கு இந்த மாதிரி ஸ்டைல் சரியா இருக்காது. எதுக்குனே வேளச்சேரில இருந்து குரோம்பேட்டைல இருந்தெல்லாம் இங்க வாறீங்க. அங்க பக்கத்துல இருக்க கடைல பாதுக்கலாம்லனே." 

போன மாசம் Naturals ல கொஞ்சநேரம் காத்துருக்க வேண்டியதா போச்சு. சரி முடி வெட்டலாம்னு போய் உட்கார்ந்தேன். ஒருத்தர் வந்தாரு தலை முடிய நல்லா கழுவினாறு. அப்பறம் முடி வெட்டி விட்டாரு. "தெருமுனைல இருக்க கடைல ரெகுலரா முடிவெட்டுவீங்களோ. ரொம்ப கெட்டுபோய் இருக்கு. இந்த மாதிரி spas க்கு ரெகுலரா போனீங்கனா நல்லது. அப்பறம் இன்னைக்கு நிறைய offer இருக்கு." list அ வாசிக்க ஆரம்பிச்சுட்டாரு.

படிப்புக்கும் முடி வெட்டுறதுக்கும் ; தமிழக தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்னு பாக்குறீங்களா... வியாபாரம்னு வந்துட்டா எல்லா வியாபாரிகளுக்கும் ஒரே நோக்கம் தான். போட்ட முதல பல மடங்கா ஆக்கணும் அவ்வளோதான். அதுக்காக மத்த வியாபாரிய விட தான் எப்படி சிறந்தவன்ன்னு சொல்லணும். மத்தவங்க விக்குறத காட்டிலும் தான் விக்குறது எவ்வளோ சிறந்ததுன்னு சொல்லி ஆகணும். ஆனா கல்வி மற்றும் அரசியல் வியாபாரத்துல தன்னோட பொருள் எப்படி சிறந்ததுன்னு சொல்லுறதுக்கு பதிலா மத்த வியாபாரியோட பொருள்ள கோளாறு சொல்லுறத தான்  இங்க அதிகம் நடக்குது." 

அரசாங்க பள்ளி ஆசிரியர்கள  நாம எல்லாருமே லேசா கோளாறு சொல்லிடுவோம். நிறைய நையாண்டி செய்யுவோம். ஆனா இருகதுலையே அவங்களுக்கு தான் சிக்கல்கள் அதிகம். ஏதோ ஒரு பூத்ல கலவரம்னு டிவி ல பாத்தோம்னா நாமெல்லாம் நம்ம பூத்துக்கு ஓட்டுபோட போகமாட்டோம். ஆனா ஆசிரியர்கள் அப்படி தப்பிக்க முடியாது. மக்கள் தொகை கணக்கெடுப்பு ; வெள்ள நிவாரணம் இப்படி ஏதாவது ஒரு வேலை அவங்களுக்கு இருந்துகிட்டே இருக்கும். அவங்க மகனோ மகளோ வெளிநாட்டுல இருந்தாங்கனா விடுமுறைக்கு அவங்கள பாக்க அந்த நாட்டுக்கு அவ்வளோ லேசா அவங்க போக முடியாது.(இத்தன வருஷம் கழிச்சு இப்ப தான் ஒன்னு ரெண்டு நடைமுறை சிக்கல்கள் குறைஞ்சிருக்கு)"

பிள்ளைகள அடிக்க கூடாது. குற்றம் கடிதல் மாதிரி படம் எல்லாம் வருது. கிளாஸ் ல முத்தம் கொடுக்குறது தப்பு இல்லை. அந்த வயசுக்கு அந்த செயலோட அர்த்தம் அவங்களுக்கு தெரியாதுன்னு சொல்லுறாங்க. ஆனா ஏதாவது படத்த பாத்துட்டு சின்ன பசங்களுக்குள்ள சண்டை போட்டா, அத சாதி சண்டையா மாத்தி ஒரு விசாரணை கமிஷன் வந்து விசாரணை செய்வாங்க. ஆசிரியர்கள தேர்ந்தெடுக்கும் போது ஒழுங்கா தகுதியானவங்கலா பாத்து தேர்ந்தெடுக்கணும். அப்பறம் அவங்க கைல விட்டுடனும். இங்க தலைகீழ். எல்லாத்தையும் எடுக்க வேண்டியது எல்லாத்துலையும் மூக்க நுழைக்க வேண்டியது. 

ஆசிரியர்களை மதிக்காத நாடு அறவழியில் முன்னேற முடியாது.

No comments:

Post a Comment