தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 32

"மக்களுடைய வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு வேலை செய்யும் அமைச்சர்கள் எதோ தங்கள் பணத்தில் செய்தது போல விளம்பரம் செய்வது எதற்க்காக என்று காமராசர் காலத்து காங்கிரஸ் அரசு மீது விமர்சனங்கள் எழுந்தன. 

ஒவ்வொரு அரசாங்கமும் தான் செய்யும் காரியங்களை விளபரபடுத்த வேண்டுமா கூடாதா? விளம்பரபடுத்துவதில் என்ன பலன் இருக்கிறது? 15 வருடங்களுக்கு முன், அதாவது உதடும் உதடும் ஓட்டும் ஆராய்ச்சி எல்லாம் நடக்காத காலத்தில், சென்னை மாநகர பேருந்துகளில் ஒரு விளம்பரம் இருக்கும். "மக்கும் குப்பை மக்காத குப்பை என்று பிரித்து போடுங்கள்" என்று.  ஆனால் அப்போது அந்த திட்டம் வெற்றி பெறவில்லை. ஏன் என்றால் நாம் பிரித்துபோட்டாலும் இறுதியில் அதனை ஒரே இடத்தில் தான் போடுகிறார்கள் என்ற எண்ணம் மக்களுக்கு இருந்தது. 

இன்றைக்கு தாம்பரம் நகராட்சி குப்பை மேலாண்மையில் சிறந்து விளங்குவதாக செய்திகள் வெளிவருகின்றன. இப்பொழுது இருக்கும் தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உதாரணத்துக்கு whatsapp மூலம் ஒரு காணொளியை அனைவருக்கும் அனுப்பலாம், நாம் பிரித்துபோடும் குப்பையை நகராட்சி நிர்வாகம் எப்படி நிர்வகிக்கிறது என்று. இதன் மூலம் மக்களின் நம்பிக்கையை பெறலாம். திட்டம் வெற்றிபெறும் நீண்டகாலத்துக்கு.

தமிழகத்தில் அரசாங்கமானது தண்ணீர் பாட்டில் விற்கிறது. அதில் செல்வி ஜெயலலதாவின் படம் இறுகிறது. ஒவ்வொரு முறை அந்த தண்ணீர் பாட்டிலை நான் வாங்கும் போதும் அந்த படத்தை கிழித்துவிடுவேன். இன்றைக்கு தேர்தல் ஆணையம் அந்த வேலையை செய்கிறது. இதுவே புதுவைக்கு சென்றால் அந்த சிக்கல் இல்லை. அங்கே மூன்று கொள்ளலவுகளில் தண்ணீர் பாட்டில்கள் கிடைக்கின்றது. அந்த பாட்டிலிலும் அந்த விற்பனை நிலையத்திலும் முதல்வர் ரங்கசாமியின் படம் கிடையாது. 

தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் மறைப்பு வேலைகள் பலமாக நடைபெறுகிறது. திருவள்ளுவரையும் கட்சிக்காரராக மாற்றி விட்டார்கள். செல்வி ஜெயலலதாவின் விளபரங்கள் சொல்லிமாளாது வெள்ள நிவாரணத்தில் கூட ஸ்டிக்கர் தான். என் படத்தை மட்டுமே வேண்டும். அமைச்சர்கள் படத்தை கூட போடகூடாது என்கிற உத்தரவு. கோயம்பேடு நுழைவாயிலில் கருணா மற்றும் ஜெயாவின் அலப்பரைகள்.  எங்கு காணினும் இதே நிலைதான். கருணா தன தாயார் மற்றும் மகளின் பேரில் திட்டம் செயல்படுத்துவார். ஊரெங்கிலும் நகர்கள் இவர்கள் பேரில். 

பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழன், யார் பெயரையும் விட்டுவிடாமல் அனைவரின் பெயரையும் பதித்திருக்கிறார். சேதுபதி மன்னர்கள் காலத்தில் முல்லைப்பெரியாறு அணைக்கான திட்டத்தை தீட்டியவர் உயர் திரு. தாவாய் பிள்ளை. அவர் பெயர் பலகாலம் நிலைத்து நிற்கிறது, திரிவடுக பத்திரிக்கைகளின் மறைப்பு வேலைகளையும் தாண்டி.

மன்னர்கள் காலத்தில் அமைச்சர்களுக்கு இருந்த சுதந்திரம் இன்றைக்கு இருக்கும் அமைச்சர்களுக்கு கிடையாது.

No comments:

Post a Comment