தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 33

அடையாள / பாவனை அரசியல் :  

சில மாதங்களுக்கு முன் பட்டேல் சமுதாய மக்களின் போராட்டம் தீவிரமானதை பார்த்தோம். அதில் நமக்கு ஏதாவது பாடம் இருக்காநிறையவே இருக்கு.

குஜராத்ல திரு. மோடிக்கு முன்னாடி பட்டேல் சமுதாய தலைவர்கள் முதல்வர் / கட்சி தலைவர் பதவில இருந்தாங்க. மோடி முதல்வர் ஆனதும் பட்டேல் சமுதாயத்த சேர்ந்தவங்க அதிர்ப்தியில இருந்தா நம்ம வோட்டுக்கு பங்கம் வந்துடும்னு ஒரு கலக்கம் வந்தது. அதனால அவரோட அமைச்சரவைல அந்த சமூகத்த சேர்ந்த மூணு பேருக்கு முக்கிய இலாக்காக்கள கொடுத்தாரு. காங்கிரஸ் கட்சியும் அதன் பங்குக்கு கேஷுபாய் படேல் லஅவங்க கட்சி பக்கம் இழுத்தாங்க.

உடனே சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களுக்கு மிகப்பெரிய சிலை வைக்க போரதாவும்அது சுதந்திர தேவி சிலைய விடவும் பெருசா இருக்கும்னும் ஒரு சுற்றுல்லா தளமா அது மாரும்னும் அறிவிச்சாரு மோடி. நாம எல்லாருக்கும் அது மின்னஞ்சலா வந்துச்சு. அது நடந்து கிட்ட தட்ட வருஷம் ஆச்சு. இதனால பட்டேல் சமுதாய வோட்டுக்களையும் தக்கவைக்கலாம் அதேநேரத்துல இந்திய அளவுல தேச தலைவரா முன்னேறலாம். 

இதுக்கு முன்னுதாரணம் இருக்கானு பாத்தா காங்கிரஸ் கட்சி காலகாலமா அத தான் செஞ்சிருக்காங்க. மௌலான அப்துல் கலாம் ஆசாத் ; K.R நாராயணன். இப்படி பல பேரு. அதையே தான் பா.ஜ.க. வும் திரு. அப்துல் கலாம் விடயத்துல செஞ்சாங்க. திரு. K.R நாராயணன் அவர்களோட காதல் திருமணம் கைகூடுரதுக்காக நம்ம நாட்டு சட்ட நடைமுறை மாற்றப்பட்டது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன். அதுவரை இருந்த ஜனாதிபதிகள் எல்லாரும் கட்சி சார்பற்றவரா இருக்கேன்னு காட்டிகுரதுக்காக தேர்தல் ல ஒட்டுபோடாம இருந்தாங்க ஆனா பெரும்பாலும் கட்சி சார்பாவே முடிவுகள் எடுத்தாங்க. இந்த நடைமுறைய மாத்தி முதல்முதலா வரிசைல நின்னு ஒட்டுபோட்டாறு. நமக்கு அஜீத் வரிசைல நின்னு ஒட்டுபோட்டதும் ; சிரஞ்சீவி வரிசைல நிக்காம போய் அசிங்கபட்டதும் தான் தெரியும். மீடியா அத தான் highlight செய்வாங்க.

ஆனா பட்டேல் சமுதாய மக்கள் மிக தெளிவான ஒரு முடிவ எடுத்தாங்க. சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களுக்கு சிலை வைக்குறதுஅவரோட சாதனைகளுக்காக. அதுக்கும் பட்டேல் சமுதாய மக்களுக்கும் முடிச்சு போட வேண்டாம். எங்க சமுதாயத்துக்கு செய்ய வேண்டியது செஞ்சே ஆகணும்னு சொல்லாம சொல்லீட்டாங்க. 

ஆண்டாண்டு காலமா காங்கிரஸ் கட்சி தேசிய அளவுல செய்துட்டு வந்தத இங்க தமிழ் நாட்டுல திரி வடுக கட்சிகள் செய்துட்டு வந்த "பூசுன மாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும்" பாவனை அரசியல பட்டேல் சமுதாய மக்கள் மிக தெளிவா புறம்தள்ளீட்டாங்க.

எப்படி தில்லில இந்திரா காந்தி பேர சர்வதேச வானூர்தி நிலையத்துக்கு வச்சுட்டு கொல்கத்தாவுல இருக்க வானூர்தி நினையத்துக்கு நேதாஜியோட பேர வச்சது சிறுமையான விடயமோ அதுபோல தான்மதுரை விமான நிலையத்துக்கு திரு. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களோட பேர வைக்க சொல்லுறதும் சிறுமையான விடயம் தான். அதுக்காக அவர் பிறந்த சமுதாய மக்கள் போராடுறதும் அவர அவமான படுத்துற செயல் தான். தேர்தல் நெருங்குரதால தீரன் சின்னமலை அவர்களின் திரு உருவத்துக்கு செல்வி ஜெயலலிதா மாலை அணிவிப்பதை நாள் முழுவதும் காட்டுகிறார்கள்.


தேசிய தலைவர்கள தேசிய தலைவர்களா இல்லாம ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ள அடச்சு போட்டு வோட்டு வங்கி அரசியலுக்கு அவங்களையே பயன்படுத்துறது கேவலமான விடயம்.

No comments:

Post a Comment