கப்பலோட்டிய தமிழன் திரு. வ.உ.சி. அவர்களின் பெயரில் சமுதாய இயக்கம் நடாத்துகிறார்கள். அதில் பிழை ஒன்றும் இல்லை. ஏனென்றால் அவர் போல நாமும் வாழவேண்டும் என்று அடுத்த தலைமுறைக்கு சொல்லிக்கொடுப்பது நல்லதுக்கு தான். ஆனால் மற்ற சமுதாய மக்களும் அவருடைய புகழை பாடவேண்டும். அவர் வழியில் நடக்க வேண்டும்.
வீர தாய் வேலுநாச்சியாரின் படையில் இருந்த குயிலி அவர்களுக்கு மணிமண்டபம் அமைப்பதற்கு அவர் பிறந்த சமுதாய மக்கள் குரல்கொடுக்க வேண்டியதாக இருக்கிறது.
வீர தாய் வேலுநாச்சியாரின் படையில் இருந்த குயிலி அவர்களுக்கு மணிமண்டபம் அமைப்பதற்கு அவர் பிறந்த சமுதாய மக்கள் குரல்கொடுக்க வேண்டியதாக இருக்கிறது.
**
என்னளவிலே நெடுந்தூர வானூர்தி பயணங்களில் பெரும்பாலும் வேட்டி கட்டி செல்லும் பழக்கத்தை கடைப்பிடித்து வருகிறேன். அபுதாபி வானூர்தி நிலையத்தில் ஒரு ஹிந்திய வானூர்தி சிப்பந்தி சொன்னார், "பரவா இல்லை கலாச்சாரத்தை காப்பாற்றுகிறீர்கள்" என்று. என்ன பொருளில் அவர் சொன்னார் என்பது தெரியாமல் இல்லை. என் வசதிக்காக மட்டுமே நான் வேட்டி அணிகிறேன். கலாச்சாரத்தை காப்பதற்கு வேறு எவ்வளவோ வழிகள் உள்ளன.
தமிழகத்தில் இருக்கும் திரிவடுக அறிசியல்வியாதிகள் அனைவரும் வேட்டி கெட்டி தான் நம் மானத்தை வாங்கிஉள்ளார்கள்.
அன்புமணியின் பரப்புரையை பார்த்தால் தேர்ந்த மதபோதகற்போல் உள்ளது ; முதலில் ஒரு இடத்தில் நின்று பேசட்டும். வேட்டி காட்டமாட்டாரா அவரு என்று சொல்லும் வாய் தான் ; ஸ்டாலினை பார்த்து எப்படி தளபதி ஜம்முனு இருக்காருன்னு சொல்லுது.
**
முறுக்கு மீசையோடு அலுவலகம் வந்தேன் ; போலீஸ் மாதிரி இருக்கு என்று ஒரு சிலரும் செக்யூரிட்டி மாதிரி இருக்கு என்று சிலரும் நடிகர்களின் மீசையோடு ஒப்பிட்டு சிலரும் பேசினார்கள். ஒரு அக்கா சொன்னார் பச்ச மண்ணு மாதிரி முகம் உங்களுக்கு மீசை எடுப்பா இல்ல. மீசை என்பதற்கு எதிர்மறையான பிம்பம் தான் உருவாக்கபட்டிருக்கிறது போலிஸ் என்றோ ரௌடி என்றோ அல்லது நடிகனோடு ஒப்பிடுவதாக இருக்கும். படத்தில் இருக்கும் ஆளுமைகளை பாருங்கள் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. ; நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த பாண்டித்துரை தேவர் ; மகாகவி பாரதியார்.
French beard வைத்தால் பெருமை. துண்டை தோளில் போட்டால் பட்டிக்காட்டான் ; scarf என்றால் பெருமை.
No comments:
Post a Comment