தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 35
செல்வி ஜெயலலிதா மற்றும் திரு கருணாநிதி பற்றி ; அவர்களின் முதுமை குறித்து பகடிகள் வருவது சரியா என்று சிலர் கேட்கிறார்கள் wheel chair என்று சொல்லுவது சரியா? முதுமையையும் மாற்று திறனையும் கேலி செய்வது போல ஆகாதா என்று ஆதங்க படுகிறார்கள் சிலர்.
கருத்தூன்றி பார்த்தால் இது எதனால் ஏற்ப்படுகிறது என்பது புரியும். மாற்று திறனாளிகள் என்ற வார்த்தையை கண்டுபிடித்தவரே கலைஞர் என்ற அளவிலே பேசுகிறார்கள். ஐநா விலே ஒரு தீர்மானம் கொண்டுவருகிறார்கள் உலகம் முழுவதும் இனிமேல் ஊனமுற்றோர் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் மாற்று திறனாளிகள் என்ற வார்த்தையை பயன்படுத்தலாம் என்று. இங்கே அதனை கடைபிடித்தார்கள் ; எப்போது கடைபிடித்தார்கள்? சக்கர நாற்காலியில் உட்கார துவங்கியபோது.
மறுபுறம் முதியவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதை அதிகரித்ததாக செல்வி ஜெயா மீதொரு பிம்பம். தனக்கு முதுமை வந்ததும் முதியோர் பற்றி அனுசரணை வருகிறது.
சாவு நெருங்கினால் தான் சுடுகாட்டுக்கு எல்லா நல்லதும் செய்வார்கள் போல.
அண்ணா நூற்றாண்டு நூலகம் மூலம் ஒரு பிம்பம் ; ஆனால் பல்வேறு நூலகங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை. சட்டமன்ற வளாகத்தை மருத்துவமனையாக்கி ஒரு பிம்பம் ஆனால் சேலம் மருத்துவமனையை திறப்பதற்கு இழுத்தடிப்பு. ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நிதி ஒதுக்காமல் விடுதல்.
விஜயகாந்த் குறித்து வரும் பகடிகள் அனைத்தும் அவருக்கு சாதகமானதுதான். அண்மையில் வந்த புகழ் பட வசனம் போல "நல்லதோ கெட்டதோ நம்ம பேரு வந்துகிட்டே இருக்கணும்". லல்லு குறித்து வரும் பகடிகள் இந்த வகையை சார்ந்தது தான்.

No comments:
Post a Comment