தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 36

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 36


நம்மல்ல பெரும்பாலானவங்க ஸ்ரீதேவி நடிச்ச இங்கிலீஷ் விங்க்ளிஷ் மற்றும் ஜோதிகா நடிச்ச 36 வயதினிலே படங்கல பாத்திருப்போம்பலரும் பாராட்டி வசூலில் சாதனை செய்த படங்கள். முதல் படத்த எடுத்துக்கிட்டா 1. இங்க்லீஷ் எழுத படிக்க தெரியாதத ஒரு இல்லத்தரசியோட குறைபாடா  காட்டிருப்பாங்க. அதனால அவளோட பொன்னும் கணவனும் அவல ஏடாசி செய்யுரதாவும். பொண்ணு எடுத்தெறிஞ்சு நடந்துக்குரதாவும் காட்டீருப்பாங்க.  ; 2. தன் குடும்பத்த விட்டு விலகி இருக்கும் போது அந்த குறைபாட போக்கிக்கிறதாவும்  அதனால கணவன் மற்றும் பொண்ணோட மதிப்ப அடையுரதாவும் காட்டீருப்பாங்க.

இரண்டாவது படத்த எடுத்துகிட்டா கிட்டத்தட்ட அதே தான்இன்னும் ஒருபடி மேல போய் ; வேலைக்கு போனா மட்டும் பத்தாது வேற பெருசா சாதிச்சாதான் குடும்பத்தினர் எத்துப்பாங்கனு காடிருப்பாங்க.

ஒரு மொழி தெரியாதுங்குறது ஒரு குறைபாடாங்குறது ஒருபக்கம் இருக்கட்டும் ; பெற்றோருக்கு ஒரு குறைபாடு இருந்தா அவங்கள மதிக்ககூடாதா? அவங்க அந்த so called குறைபாடை போக்குனா மட்டும்தான் பெத்தவங்கள மதிப்பேன்னா அது நல்லதா?  

"கல்யாணம் செஞ்சுகிட்டா சுதந்திரம் எல்லாம் பறிபோயிடும் சுயத்த இழக்கணும்." இப்படி type cast செய்யுறது எதுக்காக. "The Pursuit of Happyness" படத்துல Will Smith சிரமத்துல இருக்கும்போது அவரோட மனைவி விட்டுட்டு போய்டுவாங்க. பொருளாதாரத்த மட்டும் அடிப்படையா வச்ச அந்த ஊருல அது பிரச்னை இல்ல. Single parent என்பது அங்கே சகஜம்.

திருமணம் என்கிற நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை இழக்க செய்வது எதுக்கு
ஒரு மனிதனுக்கு ஒரு திருமணம் என்றால் ஒரு தேனிலவு ஒரு வாழ்க்கை செலவீனங்கள்அதுவே ஒருவன் பல மனங்கள் புரிந்தால் பண புழக்கம் அதிகமாகும்.

"Within the relationship we have to give enough space" கணவன் மனைவி உறவுக்குள்ள இரண்டு பேருமே அவங்களுக்கு தேவையான இடைவெளிய தரனும். இப்படி தான படம் எடுத்துருக்காங்க. எல்லாத்தையும் குதர்க்கமா யோசிக்க கூடாது. உறவை நீடிக்குரதுக்கு தான அவங்க ஒரு தீர்வ முன்வச்சிருக்காங்க இப்படி தோணுச்சுனா, ஒரு விடையத்த யோசிச்சு பாக்கலாம். கூட்டு குடும்பங்கள நிலைக்க வைக்குறதுக்காக எடுக்கப்பட்ட "சம்சாரம் அது மின்சாரம்" திரைப்படம் என்னமாதிரியான தாக்கத்த நம்ம சமூகத்துல ஏற்ப்படுத்திருக்கு.

திரும்ப 36 வயதினிலே படத்துக்கு வருவோம். மலையாள மூலத்துக்கும் தமிழ் நகலுக்கும் என்ன வித்தியாசம்கேரளாவில் வசிக்கும் மஞ்சு வாரியர், அவர் வசிப்பிடத்தில் கிடைக்கும் காய்கறிகள் அனைத்தும் பொள்ளாச்சியில் இருந்தும் மைசூரிலிருந்தும் வருவதாகவும் ; அவை பூச்சிக்கொல்லிகள் நிறைந்ததாகவும் விஷமாக மாறிவிட்டதாகவும் அறிந்துகொள்வார்

அதே நேரத்தில் "நம்ம ஊரு" ஜோதிகா என்ன புரிஞ்சுப்பாங்கனா அவரோட வசிப்பிடத்துல கிடைக்குற காய்கறிகள் பாகிஸ்தான்ல  இருந்து வர்றதாவும் ; அது விஷத்தன்மை நிறைந்ததா  இருக்கிறதா புரிஞ்சுப்பாங்க. ஆனா பாருங்க படத்துல ஜோதிகா மேடம் இருக்கது சென்னைல. ஆந்திராவில் இருந்து வரவேண்டிய காய்கறி வரத்து குறைந்ததால் கோயம்பேட்டில் விலை எற்றம்னு வியாபாரி சொல்லுறாரு. சூர்யா கார்த்தி விஷாலோட  படங்களுக்காக அண்டை மாநிலத்தோட  நீங்க நல்லுரவ பேணுங்க வேணாங்கல; ஆனா எதுக்காக எங்கள பாகிஸ்தானோட கோர்த்து விடுறீங்க. 

"How old are you" திரைப்படத்துல மஞ்சு வாரியார் தன்னோட கல்லூரி காலத்துல எப்படி இருந்தாங்கன்னு சொல்லகூடிய காட்சிய வசனம் மூலமாவே கடத்தி இருப்பாங்க. ஆனா தமிழ்ல்ல அதுக்கு ஒரு காட்சி வச்சு அதுல எல்லாரும் சுடிதார் போட்டு போராடுறதா காட்டிருப்பாங்க. எல்லாரும் சொல்லணுமே ஜோதிகாவ பாரு அப்படியே இன்னும் இளமையா இருக்காங்க. அதோட நிறுத்தி இருந்தா பரவா இல்ல ஆனா வம்படியா ஒரு கேவலமான அருவருக்க தக்க வசனத்த சேர்த்துருப்பாங்க. இங்க இருக்கவனுங்கள காமக்கோடாங்கிகளா மாத்துறதே உங்க திரைப்படமும் டிவியும் தான.

No comments:

Post a Comment