தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 26

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 26

​​


மச்சி அந்த பொண்ணு உன்னையே look விடுறாடா... ​அந்த பையன் உன்னைய தாண்டி follow செய்யுறான்... இந்த வசனங்கள் பலருக்கு பொழுதுபோக்காகவும் பலருக்கு வாழ்க்கை தடத்தை மற்றக்கூடியதாகவும் இருந்திருக்கும். காதல் திருமணங்கள் என்பது எதோ திடீர் என்று ஏற்ப்பட்டது போன்ற தோற்றத்தை உருவாகியிருக்கிறார்கள். 

தன் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பது என்கிற நேரம் வரும் போது, மஞ்சு விரட்டு போன்ற சில விடயங்கள் வைத்து மாப்பிளையை தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் மஞ்சு விரட்டி விட பலமும் நிதானமும் தேவையான விடயம் என்ன வென்றால் ஒரு நபர் நீர்நிலையில் அடித்து செல்லும்போது அவரை காப்பாற்றி கரைக்கு கொண்டுவருவது. அப்படிப்பட்ட காரியத்தை செய்த ஒருவனுக்கே தன் மகளை மனம் முடித்து கொடுப்பதற்கு தயங்குகின்றனர் ஒரு பெற்றோர். இது கலித்தொகையில். 

ஆனால் கலித்தொகையில் வரும் காதல் வேறு இன்றைக்கு இருக்கும் நாடக காதல் வேறு. ஒரு பெண்ணை உஷார் செய்வதற்காக போலியாக ஒரு சூழ்நிலையை உருவாக்கி அனுதாபம் / நன்றி உணர்ச்சியை ஏற்ப்படுத்தி காதலை எழுப்புதல் என்பது இன்றைய நிலை. கல்லூரியில் படிக்கும் போது வகுப்பு தோழர்கள் இருவரை உசுப்பேத்தி விட்டு அவரை ஒரு பெண்ணிடம் "propose பண்ண" எழுப்புதல் வேலை நடந்தது. ஆனால் கடைசியில் அந்த நண்பனின் அரை பங்காளன் கெடுத்துவிட்டான்.

காதல் and so-called சாதி மறுப்பு திருமணங்கள் மூலமா நிறைய பிரச்சனைகள் வருது. அதுக்கு காரணம் என்னநிதானமாக காதல் குறித்தும் சாதி மறுப்பு திருமணங்கள் குறித்தும் யோசித்தால் மூன்று முறைகள் இருப்பது புலப்படும். 

ஒன்று : நடிகர் சூர்யாவின் காதல் மற்றும் திருமணம் குறித்து ஆனந்த விகடனில் கேள்வி ஒன்றுக்கு இப்படி பதில் சொன்னார் அவரது தந்தை நடிகர் சிவக்குமார், "இரண்டு அல்லது மூன்று தலைமுறைககளின் தியாக வாழ்க்கையின் பலனாக அடுத்த தலைமுறைக்கு காதலிக்கும் சூழல் உருவாகிறது." இன்றும் பொருளாதார ரீதியாக முன்னேறிய எத்தனையோ குடும்பங்கள் பல வருட குடும்ப நட்பின் காரணமாக  சாதி மத மொழியை கடந்து திருமணங்களை செய்கிறார்கள். இது எத்தனையோ காலமாக நடந்துவருகிறது.

No comments:

Post a Comment