தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 25 பத்திரிக்கைகள் 5 :



சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரு கிராமத்துல தீண்டாமை கொடுமை நடந்ததாம். அது பற்றி கருணா வகையறா பத்திரிகை ஒன்னு தலையங்கம் எழுதுனாங்க ஒரு வருடத்துக்கு முன்னாடி. "எல்லா மதங்களுக்கும் தாய் மதம் இந்து மதம்"னு சொல்லுற அர்ஜுன் சம்பத் என்ன சொல்லுறாருன்னு கேட்டிருக்காங்க. அவர் மேல காட்டமா எழுதுறாங்க. எனக்கு என்ன புரியலைனா, அர்ஜுன் சம்பத் எப்படி இந்துமதத்துக்கு அத்தாரிட்டி ஆனாரு. 

அந்த தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினரா இத்தனை காலமா திரிவடுக கட்சிகாரங்க தான் இருந்திருக்காங்க. ஏன் இப்ப கூட திரிவடுக கட்சிகாரர் தான் இருக்காரு. ஏன் அவர் கிட்ட போய் இவங்க கேள்வி கேட்குறது இல்ல. உங்களால இதெல்லாம் நிறுத்த முடியலைனா நீங்க ராஜினாமா செய்யுங்கன்னு சொல்லலாமே. 

அந்த உருப்பினர பாத்தா நல்லவரா தான் தெரியுறாரு. நீங்க ஒன்னும் செய்ய வேண்டியது இல்ல. தினமும் காலைல சீக்கிரமா குளிச்சிட்டு. ஒரு 20 30 பேரு அவரோட வீட்டுக்கு போய் முன்னாடி உட்கார்ந்து ஒரு மணி நேரம் செய்திதாள படிச்சிட்டு திரும்ப வரும்போது. வணக்கம் தோழர் திரும்ப நாளைக்கு வாரோம்னு ஒருவாரம் செஞ்சா போதுமே. ஏன் செய்ய கூடாது?

No comments:

Post a Comment