தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 24 பத்திரிக்கைகள் 4 :

"ஜெயலலிதாவும் கருணாநிதியும் சுத்த வேஸ்ட் நாம ஏன் சந்திர பாபு நாயுடுவை இங்க முதல்வரா கொண்டுவர கூடாது?" மழை பெய்து, பெருவெள்ளம் ஏற்ப்பட்ட போது செயல்படாத அரசாங்கம் பற்றிய விவாதம் நடந்தது. அலுவலக நண்பர் ஒருவர்  இப்படி சொன்னார்,

உடனே நாம என்ன கேப்போம், "என்னையா லூசாட்டம் பேசுறநாயுடு தெலுங்கர் ஆந்திரா காரர் அவர் எப்படி இங்க முதல்வர் ஆகமுடியும்?" மோடியும் சோனியா காந்தியும் சரி இல்லைனா Nawaz Sharif அ கூப்பிட்டு வருவீங்களா?

ஆக இங்க இருக்க அரசியல் தலைவர்கள் / ஆட்சியாளர்கள் அனைவரும் தமிழர்கள்அப்படி தான?.





இங்கே ஸ்டிக்கர் ஓட்டுவதில் முனைப்பு காட்டிய நேரத்தில் அந்த அந்த மாநில முதல்வர்கள் என்ற முறையில் முனைப்போடு செயல்பட்டார்கள் திரு. ரங்கசாமியும் அவர்களும் திரு. சந்திர பாபு நாயுடு அவர்களும்.

ஆனால் தமிழ் மொழியில் வெளிவரும் திரிவடுக பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்கள், திரு. நாயுடுவை பதிவு செய்ததில் கால் பங்கு கூட திரு. ரங்கசாமியை பதிவு செய்ய வில்லை. இத்தனைக்கும் திரு. ரங்கசாமி அவர்கள் தன்னுடைய சொந்த இழப்பையும் மீறி அளப்பரிய பணிகளை செய்தார்.


திரு. அப்துல் கலாம் அவர்கள் இறந்தபோதுஅவரின் மறைவுக்கு முதலில் இரங்கல் தெரிவித்து விடுமுறை அறிவித்தது திரு. ரங்கசாமி அவர்கள் தான். காரணம் அவர் ஒரு தமிழர்.  தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு அதற்கு நேரம் கிடைக்க வில்லை.

பள்ளிக்கூடத்திலும் கல்லூரியிலும் படிக்கிற காலங்களில் திரு. சந்திர பாபு நாயுடு குறித்தும் ; திரு SM கிருஷ்ணா குறித்தும் எவ்வளவோ நல்ல விடயங்களை பத்திரிக்கைகளில் படித்ததுண்டு. ஆனால் ஒருமுறை திருப்பதி சென்ற போது பேருந்தில் அருகில் அமர்ந்திருந்தவர் சொன்னார் ; இனிலாம் யாரும் டேரா போடா முடியாது. கேரளா போல கட்சிகள் மாறி மாரிதான் ஆட்சியை புடிப்பார்கள். அதே போல இரண்டு பேருமே அடுத்து வந்த தேர்தலில் தோற்றார்கள்.

இன்றும் கூட அமராவதியில் தலைநகர் அமைக்கிறேன் என்று விளைநிலங்களை காலி செய்துவிட்டார் என்று திரு. நாயுடு மேல் பலரும் பெருங்கோபத்தில் உள்ளார்கள். ஆனாலும் தமிழில் வெளிவரும் திரிவடுக பத்திரிக்கைகள் மற்றும் காட்சி ஊடகங்களில் எல்லாம் பெருமையாக தான் இருக்கும்.

No comments:

Post a Comment