தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 22 பத்திரிக்கைகள் 2

வரலாற்று ஆசிரியர்கள்பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் பார்க்கும் overtime பத்தி இன்னைக்கு பாக்கலாம். வகை மாதிரிக்கு சில உங்கள் பார்வைக்கு. இந்த படத்துல எழுதிருக்கத கொஞ்சம் படிச்சுபாருங்க.




நாயக்கர்வாள் இந்த சுவரொட்டிய அன்னைக்கு ஒட்டினாரான்னு எனக்கு தெரியாது. ஆனா, ஜனவரி மாதம் 2009 ஆம் வருடம் திரு. சீனிவாசன் அவர்கள் தன்னுடைய 71 வது வயதில் மரணம் அடைந்தார்னு "The Hindu"  நாளிதழ் செய்தி சொல்லுது. 

சுவரொட்டில சொல்லி  இருக்கது போல, திரு. காமராஜர் அவர்கள்  கட்டிய பள்ளிக்கூடத்தில் திரு. சீனிவாசன்  படிக்கல. திரு. காமராஜர் அவர்கள் முதல்வர் ஆகும்  தருவாயில் திரு. சீனிவாசன் அவர்கள் தன்னுடைய பள்ளிப்படிப்பை கிட்டத்தட்ட முடித்துவிட்டார். மதுரையிலும் மெட்ராசிலும் கல்வி பயின்று இருக்கிறார். 

படிச்சவன் எவன பாத்தாலும் நாயக்கர்வாள் முயற்ச்சியால தான் நீ படிச்சனு சொல்லுற திரி ~ வடுகர்கள்  கிட்ட வேற என்னத்த எதிர்ப்பார்க்க முடியும். தோழர் மண்ணாங்கட்டி பத்தின புனைகதைய முன்னமே பாத்திருக்கோம். சரி பாக்காம, நடிகர் சிவக்குமாரும் அந்த புனைகதைய பல இடங்கள்ல பேசி இருக்காரு.

எப்படி வயல்வெளில கடுமையா உழைக்க கூடிய விவசாயிகளோட பெருமைகள் எல்லாம் சில வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு சில வியாபாரிகளால் கலப்படம் செய்யப்பட்டு, சந்தையில் வருகிறதோ, அதுபோல, நடந்த பழைய சம்பவங்கள வச்சு புதுசு புதுசா கலப்படம் செய்யப்பட்ட கதைகள் வெளிவருகின்றன. இப்படி செய்றதால என்ன லாபம் அவங்களுக்கு கிடைக்குதுன்னு தெரியல. காமராசர பத்தி பெருமையா எழுதுறேன் பேர்வழினு இப்படி சிலர் புனையப்பட்ட கதை எழுதுறாங்க. ஆனா உண்மை வெளிவரும்போது அது அவருக்கு எவ்வளவு சிருமைன்னு புரியல. குறை, எழுதுபவர்கள் பேரில் மட்டும் இல்லை. உண்மை என்னவென்று புரிந்துகொள்ளாமல் அப்படியே நம்பும் நம்மீதும் இருக்கிறது.

இப்ப கூட திரு. வை.கோ. ஒரு விசயத்த பேசிருக்காரு. "90 வயசு ஆகியும் பதவிக்கு காமராசர் ஆசைப்படுராறேனு அந்த காலத்துல பேசின கலைஞர் இன்னைக்கு தன்னோட 90 வது வயசுல பதவிக்கு ஆசைப்படலாமா? 

ஆனா காமராசர் தன்னோட 90 வயசு வரைக்கும் வாழல 72-3 வயசுல இறந்துட்டாரு.  அப்ப கலைஞர் யார சொன்னாரு? அந்த  தேர்தல்ல ராஜாஜியும் (>90) காமராசரும் (>67) கூட்டு வச்சிருந்திருக்காங்க

இத இத்தன நாள் இல்லாம இந்த நேரத்துல பேச வேண்டிய தேவை என்ன?   

"என்னையும் (வை.கோ >71) எங்க அண்ணனையும் கலைஞர் (~90) யாரும் கேள்வி கேட்டுதாதீங்க ஏன்னா உங்க காமராசரே அந்த வயசுல பதவிக்கு ஆசப்பட்டாரு தெரிஞ்சுக்கோங்க"னு சொல்லாம சொல்லுறது தான்.

No comments:

Post a Comment