தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 23 பத்திரிக்கைகள் 3 :

திரைப்படங்களில் பெண் கதாபாத்திரத்துக்காக பாடல் எழுதும் போது அவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யூகித்து எழுதுவதாக சொல்லி, கண்டதையும் காமரசமாக எழுதுவார்கள் ஆன் பாடலாசிரியர்கள். பின்னர், அப்படித்தான் மற்ற பெண்கள் நினைகிறார்கள் நாம் தான் வேறு விதமாக நினைக்கிறோம் என்று பெண்களையே நம்பவைத்தார்கள்அடுத்ததாக சில பெண்  படைப்பாளிகள்  வந்தார்கள். கொச்சையாக அங்கங்களை எழுதுவதே புரட்சி என்று எழுதினார்கள். இவர்களுக்கு அவர்களே பரவாயில்லை என்ற நிலை



அப்படிப்பட்ட சூழலில் தாமரை அக்கா பாடல் எழுத வந்தார்தன் திறமையால்  தனித்து நின்று புகழ் பெற்றார். ஒதுங்கி நில்லாமல் பல போராட்டங்களில் தன்னை இணைத்துக்கொண்டார்.

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக எந்த உருப்படியான  காரியத்தையும் 
சரியாக செய்யவில்லை என்று அப்போதைய முதல்வர் கலைஞரை சாடினார்.

கடந்த தேர்தலில் .தி.மு..  வுடன் இயக்குனர் சீமான் சேர்ந்து ; இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று  பேசியபோது ; தனக்கு திரைத்துறையில் வாய்ப்பளித்தவர் என்பதையும் மீறி சீமானின் முடிவை விமர்சனம் செய்தார். தேர்தலுக்கு பின்னும் அவருடைய நிலைப்பாட்டில் எந்த மாறுதலும் இருக்கவில்லை.

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவை இலங்கை அமைச்சர் இரட்டை பொருளில் அசிங்கமாக பேசியதற்காக திரைத்துறை சார்பாக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் (செல்வி. ஜெயலலிதாவின் அணுகுமுறை பிடிக்கவில்லை என்றாலும் கூட) முதல்வர் செல்வி ஜெயலலிதாவை ஆதரித்து பேசினார்.

வீட்டுக்குள் எவ்வளவுதான் மன வருத்தம் இருந்தாலும் அடுத்த வீட்டுக்காரன் வால்  ஆட்டினால் ஓட்ட நறுக்கி  தான ஆகணும். உடனே நல்ல வாய் நார வாய் என்று video தயாரித்து வெளியிட்டார்கள் திரிவடுகர்கள். 

ரஜினிய எடுத்துகிட்டா ஒரு தேர்தல்ல, ஜெயலலிதாவுக்கு ஒட்டு போட்டா தமிழகத்த அந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாதுன்னு பேசுனாப்பள. ஜெயா திரும்ப முதல்வர் ஆனதுக்கு பிறகு நடந்த ஒரு கூட்டத்துல தைரிய லட்சுமின்னு பேசுனாப்பளஅதுக்காக அவரபத்தி நக்கீரனோ இல்ல தமிழ்ல வர்ற வேற திரிவடுக பத்திரிக்கைகளோ ; ஊடகங்களோ "நல்ல வாய் ; நார வாய்" video ரெடி செஞ்சாங்களா என்ன? இது தான் திரிவடுக பத்திரிக்கை தர்மம்.

No comments:

Post a Comment