ராக்கி கட்டும் பழக்கம் சரியா ?


பள்ளிக்கூடத்திலோ / கல்லூரியிலோ ஒரு மாணவன் மாணவிகள் மீது தவறான பார்வை வீசுகிறான் அல்லது சீண்டுகிறான் ; இரண்டு பேர் ஒரே பெண்ணை விரும்புகிறார்கள் ஆனால் அந்த பெண் அவர்களில் ஒருவனை மட்டும் விரும்பினால் மற்ற ஆடவனுக்கு ராக்கி கட்டிவிட்டால் பிரச்சனை முடிந்துவிட்டது என்ற அளவில் தான் பெரும்பாலான திரைப்படங்கள் இருந்தன.

ராக்கி கட்டுவது என்பது எதோ விருப்பம் இல்லாத ஆடவனை தவிர்ப்பதற்காக காட்டுவதாகவே சித்தரித்து வந்துள்ளார்கள். தற்காப்பு என்ற அளவிலே... சில வருடங்களுக்கு முன் ஒரு VHP காரர் சொன்னார், "ஒருவன் ஒரு பெண்ணை வன்புணர்வு செய்ய வருகிறான் என்றால், அவனை அண்ணா என்று கூப்பிட்டால் அவன் மனம் மாறி விட்டுவிடுவான்"

ஆக ராக்கி கட்டுதல் என்றாலே ஆன் பிள்ளைகள் தெறிச்சு ஓடும் விதமாக செய்துவிட்டார்கள். நடிகர் விவேக் பல படங்களில் இப்படி நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளார். 

"முதல் வருடம் ராக்கியும் மறு வருடம் தாலியும் கெட்டிச் சென்ற இணையர்களை பார்த்த பூமி இது" என்று ஒரு சமூக வலைதள பதிவர் எழுதினார். இவ்வாறாக சரியான புரிதல் இல்லாமல் நடந்துகொள்பவர்களால் எதிர்மறையான எண்ணமே அது குறித்து நிறுவப்பட்டுள்ளது.

மறுபுறம், இங்கே சாதிய ஏற்றத்தாழ்வை ஒழிக்க ஒரே வழி காதல் திருமணம் தான் என்று தொடர்ந்து பரப்புரை செய்யப்பட்டுள்ளது. இதனால் சகோதரத்துவத்தோடு பழகுதல் என்ற நிலமை இல்லாமல் பாலின கவர்ச்சி மட்டுமே மேலோங்கிய நிலைமை. சகோதரத்துவத்தோடு பழகும் இருவேறு சமுதாய நண்பர்களுக்கிடையே அடுத்த தலைமுறையில் மண உறவு ஏற்படுவது என்பது பல இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது

தமிழர்களிடம் இந்த ராக்கி கட்டுதல் போன்ற நடை முறை இல்லவே இல்லையா என்றால், எப்படி ராக்கி கட்டுவதில் சகோதரத்துவம் என்ற விடயம் பின் தங்கி பரிசுகள் வாங்கி தருவது சுமையாக கருதும் நிலை உள்ளதோ அதுபோலவே இங்கே தாய்மாமன் நடைமுறை & சீர்முறைகளில் உள்ள சகோதரத்துவம் அன்பு பாசம் போன்ற விடயங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு அதில் இருக்கும் செலவு மட்டுமே முன்னிலைப்படுத்த பட்டு அந்த வழக்கத்தை சீரழித்து வருகிறார்கள். (உ: கிழக்குச் சீமையிலே ; மதயானை கூட்டம்)

ராக்கியில் வணிக நோக்கம் அதிகமாக உள்ளது என்று பேசும் நாம் தான், யாரோ ஒரு துணிக்கடைக்காரர் கிளப்பிவிட்ட புரளிக்காக ஒவ்வொரு வருடமும் பச்சை நிறத்தில் சகோதரிகளுக்கு புடவை வாங்கி கொடுத்தோம்.

தாலி என்பது ஒரு கயிறு அவ்வளவு தான் என்று வியாக்கணம் பேசும் தாலி அறுப்பு 
திராவிட போராளிகள் த8ங்கள் வீட்டு குழந்தைகளிடம், "ராக்கி என்பது வெறும் கயிறு அதெல்லாம் கட்டக்கூடாது", என்று பேசினால், லூசாப்பா/மா நீ என்று கேட்டுவிடுவார்கள். 

இன்றைக்கு பள்ளிக்கூடத்தில் ஒரு சக மாணவி நல்ல அழகான உடுப்பு உடுத்தி வந்தால் அது குறித்து பாராட்ட வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

ராக்கி கட்டும் பழக்கம் என்பது ஒரு நல்ல நடைமுறை. அது வட நாட்டிலிருந்து வந்தது என்பதற்காக ஒதுக்க வேண்டியதில்லை. அதே நேரத்தில் அது வடநாட்டிலிருந்து வந்த பழக்கம் என்பதையும் ; வணிக நோக்கங்களை பின்னுக்குத் தள்ளி உறவுகளை வளப்படுத்த சொல்லி கொடுக்க வேண்டும். தாய்மாமன் முறைகள் பற்றி சிறார்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். சிறார்களுக்கு ராக்கியில் கிடைக்கும் குதூகலம் நம் நடைமுறையிலும் இருந்தாலே போதும்.

சரி ராக்கி கட்டுவது நல்ல நடைமுறை என்றால் இன்று செய்தியில் வந்துள்ள சம்பவம் குறித்து என்ன சொல்லுவது? வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஒருவன் திடீர் என்று மும்பையில் உள்ள தன் இல்லத்துக்கு திரும்பி உள்ளான். அங்கே அந்த வீட்டிலே இறந்து போன தாயின் எலும்புக்கூடை மட்டும் கண்டெடுத்துள்ளான்.

தன் தாயிடம் பேசி ஒருவருடம் ஆகிவிட்டதாம். கடைசியாக பேசும் போது இங்கே தனிமை என்னை வாட்டுகிறது என்னை ஏதாவது விடுதியில் சேர்த்துவிட்டு என்று தன் மகனிடம் கேட்டாராம்.

வாட நாட்டுல அப்படி நடந்திருக்கு. ஆனா இங்க நம்ம ஊருல அப்படிலாம் இல்லை என்று பேச முடியாது. பல முதியோர்களின் நிலைமையும் இப்படித்தான் உள்ளது.

ராக்கி மட்டுமல்ல எந்த ஒரு சடங்காக இருந்தாலும் அதனால் சிறு நன்மையேனும் நடக்கும் என்றால் தயங்காது கடைபிடிக்க வேண்டும்.

https://in.yahoo.com/news/mumbai-techie-returns-us-finds-071618923.html

No comments:

Post a Comment