சமசீர் கல்வி சாத்தியமா ?

கல்வியின் நோக்கம் என்ன ?

ஒரு நாளில் எட்டு மணிநேரம் பள்ளியிலும் மீதமுள்ள நேரம் முழுவதும் வீட்டிலும் வெளியிலும் மாணவர்கள் கற்கிறார்கள்.
மனப்பாடம் செய்து பரிட்ச்சையில் வாந்தி எடுப்பது தான் கல்வி என்றால் அதை செய்வதற்கு பள்ளிக்கூடத்துக்கு போக வேண்டிய அவசியம் இருக்காது. தனித்தேர்வாக எழுதினாலே போதுமானதாக இருக்கும்.

அறிவியல் கோட்பாடுகள் ; கணித சமன்பாடுகள் ; மொழியின் இலக்கண இலக்கியங்கள் ;  தத்துவங்கள் போன்றவற்றின் மீது ஒரு ஈடுபாடும் ஆர்வமும் வரும் வீதமாக பாடம் எடுத்தால் நல்ல பலன் கிடைக்கும் (பாடத்திட்டத்தை முழுவதுமாக முடிக்காவிட்டாலும்). நூலகங்கள் சென்று மேலதிக தகவல்கள் பெற இந்த ஆர்வம் தூண்டவேண்டும்.

எந்த ஒரு சூழலையும் எதிர்கொள்ளும் துணிவையும் ; தோல்விகளை கண்டு துவண்டுவிடாத மன தைரியத்தை அளிப்பதும் கல்வியின்   அத்தியாவசிய கூறுகளில் ஒன்றாகும். இதற்க்கு செயல் முறை கல்வி அவசியம்.


கல்வி கற்றல் சுகமா சுமையா ?

1. பாடத்திட்டத்தை முடிப்பதில் மட்டும் முனைப்பு காட்டினால் மாணவர்களுக்கு பாடத்தின் மீது ஆர்வம் வருவதற்கு பதிலாக வெறுப்பு மேலோங்கும். அதன் முடிவு, மனப்பாடம் செய்து பரீட்ச்சையை எதிர்கொள்ளும் கட்டாயம் ஏற்ப்படும்.

அப்படிப்பட்ட கல்வி, மாணவர்களின் கல்வி கற்றல் செயல்பாடை சுகமான அனுபவமாக இல்லாமல் சுமையாக மாற்றி விடும். மன அழுத்தத்தை உருவாக்கும்.

2. பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு முடிவுகள் வெளியாகும் பெரும்பாலான வருடங்களில் மாணவர்கள் பலர் தற்கொலை செய்வது என்பது இந்த அழுத்தத்தின் வெளிப்பாடு தான்.

3. நகர்ப்புற மாணவர்களுக்கு சாதகமாகவும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதகமாகவும் இருந்த நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்ட பின், சமூக நீதியை நிலைநாட்ட (அறுபத்தி ஒன்பது விழுக்காகு இடஒதுக்கீடு) கல்லூரி சேர்க்கைக்கான நுழைவு மதிப்பெண் (Cutoff Mark) ஒவ்வொரு ஆண்டும் குறைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையானது எதிர்மறையான பல விளைவுகளை உண்டாக்கும் சாத்தியகூறுகள் அதிகம்.

4. அதற்க்கு பதிலாக பாடத்தை எளிமையாக்கி (அதே நேரத்தில் வலுவாகவும்) மாணவர்கள் எளிதில் புரிந்துகொண்டு படிக்க ஆவன செய்ய வேண்டும்.

இந்த விடையங்களை அடிப்படையாக கொண்டு, கல்வி கற்றலை சுகமான ஒரு அனுபவமாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட குறிப்பிடத்தக்க ஒரு முயற்சி சமசீர் கல்வி. இந்த கருத்தாக்கத்துக்கு அரசாங்கம் சார்பாக கொள்கை வகுக்கவும் கொடுக்கவும் செயல்படுத்தவும், பல கட்டங்களில் கல்வியாளர்களை கொண்டு முயற்ச்சிகள் எடுக்கப்பட்டன. அதன் அடுத்தகட்டமாக ஆசிரியர்களுக்கு பயிற்ச்சிகள் அளிக்கப்பட்டது.

சமச்சீர் கல்விக்கு உயர்நீதிமன்றத்தின் உதவி.


சமச்சீர் கல்விச் சட்டத்தை எதிர்த்து, கடந்த ஆண்டு ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன், ஜனார்த்தனராஜா அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்', சமச்சீர் கல்வித் திட்டம் செல்லும் என உத்தரவிட்டது. ஆனால், இந்த சட்டத்தில் உள்ள முக்கியமான பிரிவு 14 ஐ, ஐகோர்ட் ரத்து செய்தது. கொள்கை அடிப்படையில் அரசு எடுக்கும் முடிவு, பள்ளி கல்விக்கான மாநில போர்டை கட்டுப்படுத்தும் என்றும் அரசின் முடிவு இறுதியானது என்றும் பிரிவு, 14 கூறுகிறது. அரசுக்கு அதிகாரம் வழங்கும் இந்தப் பிரிவை ஐகோர்ட் ஏற்கவில்லை. இந்தப் பிரிவானது, சமச்சீர் கல்வியை அமல்படுத்தும் பள்ளி கல்விக்கான மாநில போர்டின் அதிகாரங்கள், செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும் பிரிவுக்கு முரணாக உள்ளது என, ஐகோர்ட் தனது உத்தரவில் கூறியுள்ளது. மேலும், மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகளை அரசியல் மாற்றங்களுக்காக அலைக்கழிப்பதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.


அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்ய பள்ளி நிர்வாகிகள் யாரும் விரும்பவில்லை. ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு சமச்சீர் பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தபட்டது. இது ஒரு நல்ல துவக்கம் என்று பாராட்டியவர்கள் அதிகம்.

சமச்சீர் கல்வி சட்டத்தில் கூறியுள்ளபடி, 10ம் வகுப்பு வரையில் இந்த ஆண்டு சமச்சீர் கல்வி இருக்க வேண்டும். ஆனால், அமைச்சரவை கூடி இந்த ஆண்டு நிறுத்தி வைப்பது என முடிவெடுத்துள்ளது. சட்டம், ஐகோர்ட் உத்தரவு மீறப்பட்டுள்ளது என்பதால், இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என உத்தரவிடக் கோரி, ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சமச்சீர் கல்விக்கு அரசாங்கம் சார்பாக தடை எதற்கு ?

சமச்சீர் கல்வி புத்தகத்தில் உயிரோடு இருக்கும் முன்னாள் முதல்வர் மற்றும் இந்நாள் முதல்வர் குறித்த பாடம் தேவை இல்லை. அச்சடிக்கப்பட்ட புத்தகங்களில் உள்ள சில தாள்கள் மட்டும் சமச்சீர் கல்விக்கு தடை என்றால், அந்த பாடங்கள் தேவை இல்லை என்று ஒரே சுற்றறிக்கையில் தடுக்க முடியும் கடந்த காலத்தில் அதற்க்கான முன்னுதாரணம் இருப்பதாக கூறுகின்றனர். இல்லை என்றாலும் அந்த பக்கங்களை கிழித்து விட்டு செயல்படுத்தலாம். நாளை யாரும் என்னத்த கிழித்தீர்கள் என்று அரசு அலுவலகர்களை யாரும் கேட்க முடியாது.


எதிர்ப்புகள் எதுக்கு ?


மற்றொருபுறம், தனியார் பள்ளிகளுக்கான கல்விக்கட்டணத்தை செம்மை படுத்தும் முயற்ச்சிகளும் எடுக்கப்பட்டன. இது தனியார் பள்ளி நடத்துபவர்களுக்கு ஆத்தரத்தை மூட்டியது. சீரான கல்வி கட்டணம் என்பது ஏட்டளவில் இருக்கும் என்று எண்ணியவர்களும் ; வருமானவரித்துறை மூலம் சிக்கல் வரும் என்று எண்ணியவர்களும், நீதியரசர் கோவிந்தராஜன் கமிட்டியிடம் தோராயமான தொகையை குறிப்பிட்டனர். அதன் அடிப்படையில் கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அதனை செயல்படுத்த தனியார் பள்ளிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இங்கே தான் தனியார் பள்ளி நிர்வாகிகள் விழித்துக்கொண்டார்கள். சமச்சீர் பாடத்திட்டத்தை அறிமுகபடுத்தவேண்டும் என்கிறபோது வலுவான எதிர்ப்புகள் இல்லை. ஆனால் கல்விக்கட்டனத்துக்கு வரம்பு வைத்து அதன்மூலம் தங்கள் வருமானத்துக்கு வேட்டு விழும் என்றதும் எதிர்ப்பு காட்டினர்.


நுகர்வோராகிய நாமும் வியாபாரியாகிய பள்ளி நிர்வாகிகளும்.

தொலைகாட்சி பார்க்கும் அனைவரும் ஒருநாளைக்கு குறைந்தது ஐந்து விதமான குழுமத்தாரின் சலவைக்கட்டி விளம்பரங்கள் பார்க்கிறோம். அதனை பார்க்கும் நுகர்வோரான நாம் எந்தெந்த சலவைக்கட்டியில் என்னென்ன தன்மை / சிறப்பம்சம் உள்ளன என்று விளம்பரம் பார்த்து முடிவு செய்யும் வாய்ப்பை பெறுகிறோம். ஒருவேளை விளம்பரம் செய்யப்படும் சலவைகட்டிகள் அனைத்தும் ஒரே தன்மை கொண்டதாகவும் ஆனால் விலையில் மாறுபட்டிருந்தால் வியாபாரியை பார்த்து நாம் நிச்சையம் கேள்வி கேட்ப்போம். அல்லது அவற்றுள் குறைந்த விலை கொண்ட சலவைகட்டியை பெரும்பாலானவர்களும் ; தங்கள் பணக்காரத்தனத்தை பறைசாற்ற விரும்புபவர்கள் விலை உயர்ந்த சலவைக்கட்டியை வாங்குவார்கள்.

நுகர்வோர் மனப்பான்மையுடன் கல்வியை அணுகினால்,



தமிழக அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றும் அரசு பள்ளிகள் மற்றும் அரசாங்க உதவி பெரும் தனியார் பள்ளிகள் கொடுக்கும் கல்வியில் இருந்து தங்களை வேற்படுத்திக்காட்ட, MATRIC மற்றும் இதர பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகள், தாங்கள் விற்கும் கல்வியின் சிறப்பு அம்சங்கள் என்று கூறுவது எதனை ?

௧. எங்கள் பாடத்திட்டம் (MATRIC / ANGLO INDIAN) சிறந்தது. அதிக பாடங்கள் சொல்லித்தருகிறோம்.
௨. எங்கள் பள்ளிக்கூடத்தில் தேர்ச்சி விகிதம் அதிகம். சிறப்பு பயிற்ச்சிகள் கொடுத்து தேர்வில் வெற்றிபெற வைக்கிறோம்.
௩. எங்கள் பள்ளிக்கூடத்தில் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன.
௪. எங்கள் பள்ளிக்கூடத்தில் திறமையான ஆசிரியர்கள் கொண்டு பாடம் நடத்துகிறோம்.
௫. ஆங்கில வழியில் கற்பிக்கபடுவதால் போட்டி தேர்வுகளில் வெற்றிபெற உதவும். வேலைவாய்ப்புகள் பெறுவதற்கு ஏதுவாக இருக்கும்.
௬. கணினி ; நீச்சல் ; தற்காப்பு கலைகள் போன்ற சிறப்பு பயிற்ச்சிகள் கொடுக்கிறோம்.

இவை ஒவ்வொன்றைப்பற்றியும் விரிவாக பார்க்கலாம்.



௧. எங்கள் பாடத்திட்டம் (MATRIC / ANGLO INDIAN) சிறந்தது. அதிக பாடங்கள் சொல்லித்தருகிறோம்.

   இது ஒரு விளம்பர யுக்தி. வாகனம் வாங்கும்போது MILEAGE அதிகம் என்று வியாபாரி சொல்லுவதைப்போலவே, MATRIC பாடம் தான் சிறந்தது என்று மீண்டும் மீண்டும் சொல்லி அந்த மாயையை நம்பவைப்பது. இந்த பாடத்திட்டமானது நம் நாட்டு சூழ்நிலைகளை அடிப்படையாக கொண்டு வகுக்கப்பட்டது இல்லை. மேற்கு உலகத்தில் இருக்கும் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட பாட திட்டத்தை அடிப்படையாக கொண்டு கல்வி கற்றால் நம் நாட்டுக்கு எப்படி பலன் தரும். அளவுக்கு மேல் மாணவர்களின் மண்டையில் திணிக்க முற்ப்படும்போது அவை அனைத்தையும் புரிந்துகொள்வது சிலருக்கு முடியும். புரிந்துகொள்ளாத மாணவர்கள் குறித்து கவலை படுவது இல்லை tiution வைத்து  தங்கள் கல்லாவை நிரப்புவதில் குறியாய் இருக்கிறார்கள்.

   அரசாங்கத்தை பொறுத்தவரை செயல் வழி கல்வி சமச்சீர் கல்வி ஆகியவற்றை அறிமுகபடுத்தி ; பாடத்திட்டத்தில் சமரசம் செய்யாமல் சுமைகளை குறைத்து எளிமையாக புரியும் வகையில் பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

௨. எங்கள் பள்ளிக்கூடத்தில் தேர்ச்சி விகிதம் அதிகம். சிறப்பு பயிற்ச்சிகள் கொடுத்து தேர்வில் வெற்றிபெற வைக்கிறோம்.

   இதுவும் ஒரு பித்தலாட்டம். காலாண்டு அரையாண்டு தேர்வுகளில் குறைவான மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை பொது தேர்வு எழுத அனுமதிக்காமல் அந்த மாணவர்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கவும் ; அந்த மாணவர்கள் கல்வியை தொடருவதே கேள்விக்குறியாக ஆக்கும் செயல் தனியார் பள்ளிகளில் நடைபெறுகிறது.

   அரசாங்க பள்ளிகள் முன்பு போல் இல்லை. பள்ளிக்கல்வி துறைக்கென தனி அமைச்சகம் துவக்கியதன் பின்னர், தேர்ச்சி விகிதம் குறையும் அரசாங்க பள்ளிக்கூடத்துக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பி நிவர்த்தி செய்ய அழுத்தம் தரப்படுகிறது. 

௩. எங்கள் பள்ளிக்கூடத்தில் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன.

   தனியார் பள்ளிகள், நன்கொடை என்ற பேரில் பகல் கொள்ளை அடிக்கிறார்கள். கொள்ளை அடித்த பணத்தில் ஒரு பகுதியை உட்கட்டமைப்புக்கு செலவிடுகிறார்கள்.

   முன்புபோல இல்லாமல்  ஒவ்வொரு ஆண்டும் கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்து வருகிறது. அரசாங்க பள்ளிகள் பல தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பல பள்ளிகளில் கணினிகள் உள்ளன. இதனால் தான் வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு சென்று பதியவேண்டாம் பள்ளிக்கூடத்திலேயே பதிவி செய்து கொள்ளலாம் என்ற வசதி செய்ய முடிகிறது.

௪. எங்கள் பள்ளிக்கூடத்தில் திறமையான ஆசிரியர்கள் கொண்டு பாடம் நடத்துகிறோம்.

   கல்வி கற்ப்பிக்க விதிக்கப்பட்ட தகுதிகள் இருக்கிறதா என்று பார்த்து ஆசிரியர்களை நியமிப்பது இல்லை. குறைவான சம்பளத்துக்கு யார் கிடைக்கிறார்கள் என்று பார்த்து அவர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள்.
ஆனால் ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம் தருகிறோம் என்று கூறுவார்கள். இவர்களின் நோக்கம் பாடத்திட்டத்தை முடிப்பதோடு நின்று விடுகிறது.

    அரசாங்க பள்ளிகளில் சேர்ந்துள்ள ஆசிரியர்களுக்கு, கணினி பயிற்ச்சியும் சமசீர் கல்வி ; செயல் முறை கல்வி கற்ப்பிக்கும் பயிற்ச்சியும் எடுக்க பட்டுள்ளது. இனியும் தொடரும் என்று எதிர்பார்க்கலாம். தவிரவும், காலியான ஆசிரிய பணியிடங்களை நிரப்ப முயற்ச்சிகள் எடுக்க பட்டு தேர்வானவர்கள் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்தல் என்ற நொண்டி சாக்கு காரணம்மாக அவை முடியவில்லை.

௫. ஆங்கில வழியில் கற்பிக்கபடுவதால் போட்டி தேர்வுகளில் வெற்றிபெற உதவும். வேலைவாய்ப்புகள் பெறுவதற்கு ஏதுவாக இருக்கும்.

      மாநகராட்சி பள்ளிகள் மற்றும் அரசானாக் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்படும் என்று கடந்த ஆண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மூலமாக அறிவிப்பு வந்தது.  இந்த முயற்ச்சியானது, ஆங்கில வழி கல்வி தான் சிறந்தது என்ற மாயையை கொண்டுள்ள நடுத்தர மற்றும் குறைவான வருமானமுள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை MATRIC பள்ளிகளில் சேர்த்து அதிகம் செலவு செய்வதை மாற்றி அரசாங்க பள்ளிகளிலேயே படிக்க ஏதுவாக இருக்கும். இந்த அறிவிப்பு வெளியான உடனே தமிழ் ஆர்வலர்கள் என்ற போர்வையில், இவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

௬. கணினி ; நீச்சல் ; தற்காப்பு கலைகள் போன்ற சிறப்பு பயிற்ச்சிகள் கொடுக்கிறோம்.

        சிறப்பு பயிற்ச்சிகள் ஒவ்வொன்றிற்கும் "சிறப்பு கட்டணங்கள்" வசூலிக்க படுகின்றன.



ஆக எல்லாரும் ஒரே பாடத்திட்டத்தை தானே சொல்லி கொடுக்கிறீர்கள் கட்டணம் மட்டும் ஏன் மாறுபடவேண்டும் என்று நுகர்வோர் மனப்பான்மையுடன் பெற்றோர்கள் கேட்பார்கள் என்பதனால் எல்லா வியாபாரிகளும் தங்கள் சரக்கு சிறந்தது என்று கட்டுவதற்கு வழியற்று போகும் என்ற அடிப்படையில் சமச்சீர் கல்வியை எதிர்க்க துவங்கி உள்ளார்கள்.


சமச்சீர் கல்வியை யாரும் எதிர்க்கவில்லை சமச்சீர் கல்வியை எதிர்க்கிறோம் என்ற போர்வையில் சமச்சீர் கல்வி கட்டணத்தை தான் எதிர்க்கிறார்கள். தாங்கள் விற்கும் சரக்கின் தரத்தை வரையறுத்த போது வலுவான எதிர்ப்பு இல்லை ஆனால் கட்டணத்துக்கு வரம்பு நிர்ணயித்தபோது எதிர்ப்பு வலுத்தது. மேல் முறையீடு செய்தனர்.

தீர்வு என்ன ?


தனியார் பள்ளிகள் அனைத்தும், அரசு வகுத்த கட்டணத்துக்கு மேல் பெறக்கூடாது இல்லை என்றால் அந்த பள்ளிக்கூடத்தை அரசே எடுத்து நடத்தும் என்று அறிவிக்கும் துணிச்சல் அன்றைய முதல்வர் திரு. கருணாநிதிக்கு இல்லை என்று விமர்சனகள் எழுந்தன. இன்றைய முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களுக்கு அந்த துணிச்சல் வரும் என்று நம்புவோம்.

3 comments:

  1. இன்றைக்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி அமைக்கப்பட்டுள்ள குழுவில் கல்வியாளர்கள் என்று நியமிக்கப்பட்டுள்ள இருவருமே தனியார் பள்ளிகளை நடத்துபவர்கள். ஆனால் இந்த மாநிலத்தில் அதிகம் இருப்பது அரசாங்க பள்ளிகள் தான் அரசாங்க பள்ளி ஆசிரியர்கள் இந்த குழுவில் இடம்பெறவில்லை. சமூக நீதியை மறுப்பதற்கான ஏற்ப்பாடாகதான் இந்த குழு தெரிகிறது.

    ReplyDelete
  2. கல்வியின் தரத்தை சமச்சீர் கல்வி குறைத்து விடுமா ?

    நிச்சையமாக இல்லை.

    கல்வியில் சிறந்த பலர், குழுக்களாக சேர்ந்து பல முறை ஆராய்ந்து உருவாக்கப்பட்ட "முன்வரைவு" பள்ளிக்கல்வி இணையதளத்தில் வெளியிடப்பட்டு கல்வியாளர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டது. அதன்பின் நேர்நோக்கர்கள் கொடுத்த கருத்துக்களை உள்ளடக்கிய பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    உதாரணத்துக்கு சமூக அறிவியல் பாடத்தில் வரலாறு ; குடிமையில் மற்றும் புவியியல் மட்டும் இருந்தால் போதாது, பொருளாதாரமும் சொல்லித்தரவேண்டும். அப்பொழுது தான் சமூக அறிவியல் பாடம் முழுமைபெறும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தினார்கள். இன்று ஒவ்வொரு வகுப்புக்கு ஒரு பாடம் என்ற விதத்தில் பொருளாதார பாடம் இணைக்கப்பட்டுள்ளது. நான் பொறியியல் படிக்குபோது கூட மேலாண்மை பாடம் இருந்தது ஆனால் பொருளாதார பாடம் இருந்ததில்லை. ஆனால் இன்று பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பொருளாதார பாடம் உண்டு. பொருளாதார பாடம் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை சொல்லிக்கொடுப்பது என்பது தரத்தை குறைப்பதாக ஆகுமா ?

    ௨. அமெரிக்க அதிபர் ஒபாமா கூறி உள்ள கருத்தை நான் முன்பு படித்தேன்.

    நீங்கள் முன்பே அறிந்ததுபோல, அமெரிக்காவை பொறுத்தவரையில் இரண்டு கட்சிகள் உள்ளன. குடியரசு கட்சி (REPUBLIC) மற்றொன்று ஜனநாயக கட்சி (DEMOCRATIC).

    FORD நிறுவனத்தின் முன்னேற்றத்தில் பெரும்பங்கு ஆற்றியவரும் அந்த நிறுவனத்தின் உள்விவகார அரசியல் காரணமாக தூக்கிஎரியபட்டவரும், CHYSLER என்ற போட்டி நிறுவனத்தில் சேர்ந்து அதனை முன்னணி நிறுவனமாக மாற்றியவர் என்று அறியப்படும், லீ இயகோக்கா என்பவரிடம், "நீங்கள் எந்த கட்ச்சிக்கு ஆதரவானவர்", என்று கேட்டபோது அவர் சொன்ன பதில் அனைவருக்கும் பொருந்தும்.

    அவர் கூறியதாவது, "நான் பொருளாதார ரீதியில் வலமாக இருக்கும்போது REPUBLIC கட்சியையும் இல்லையென்றால் DEMOCRATIC கட்சியை ஆதரிப்பேன்"

    இந்த அடிப்படையில் பார்த்தால் ஒரு கட்சி வேலை உருவாக்கும் திறன் கொண்டவர்களை உருவாக்குவதிலும் மற்றொன்று, வேலைக்கு ஆட்களை தயார் செய்யும் கொள்கை கொண்டதாகவும் இருக்கும்.

    MBA படித்து விட்டு அடுத்தவரிடம் வேலைக்கு வரிசையில் நிர்ப்பது சிறந்ததா அல்லது தொழில் முனைவோராக ; வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களாக இருப்பது சிறந்ததா ?

    இன்றைக்கு வேலை வழங்குபவர்களாக அமெரிக்காவும் வேலைக்கு செல்பவர்களாக இந்தியர்களும் உள்ள சூழல் மாறி தலை கீழ் மாற்றம் நிச்சையம் வரும்.

    ReplyDelete
  3. School fee: State asked to file affidavit : http://www.hindu.com/2011/06/23/stories/2011062361040100.htm

    ReplyDelete